நாமக்கல்:
"நாமக்கல், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தனி வரி
வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் ஆர்.டி.ஓ., ரஜினிகாந்த்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்,
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,
போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரி, வரும் ஏப்ரல், 1ம் தேதி, 2014ம்
ஆண்டு மார்ச் மாதம் வரை வசூலிக்கப்பட உள்ளது. அதற்காக, இரு வட்டார
போக்குவரத்து அலுவலகத்திலும், தனி வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வரும்,
26ம் தேதி முதல் ஏப்ரல், 10ம் தேதி வரை, அபராத கட்டணம் இல்லாமல் வரி
செலுத்தலாம். ஏப்ரல், 10ம் தேதிக்கு பின், அபராதத்துடன் வரி
வசூலிக்கப்படும். விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும், வரி
வசூலிக்கப்படும். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களுக்கு வாகன
வரியுடன், பசுமை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
இரு சக்கர
வாகனங்களுக்கு, 500 ரூபாய், மற்ற வானங்களுக்கு, 1,000 ரூபாய் பசுமை வரியாக
வசூலிக்கப்படும். உரிய காலக்கெடுவிற்குள் வரி கட்டவில்லையெனில், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.