E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வீரர்களை அனுப்பி வைக்க இத்தாலி முன்வந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

24 மார்
2013
01:13
பதிவு செய்த நாள்
மார் 22,2013 23:35

புதுடில்லி: கேரள கடலில், இந்திய மீனவர்கள், இருவரை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்களை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது குறித்து, மகிழ்ச்சி தெரிவித்த, பிரதமர், மன்மோகன் சிங், ""இந்திய நீதித்துறையின் மாண்பு, நேர்மை காப்பாற்றப்பட்டுள்ளது,'' என, கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, கேரள கடலில், இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர், சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று, கடந்த மாதம், 22ம் தேதி இத்தாலி சென்றனர். அவர்களை திருப்பி இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என, இத்தாலி அரசு, சில நாட்களுக்கு முன் திடீரென தெரிவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.


தூதருக்கு தடை: இந்தியாவுக்கான இத்தாலி தூதர், டேனியல் மன்சினியை, நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இத்தாலியின் செயலை கண்டித்த பிரதமர், மன்மோகன் சிங், "இந்தச் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது' என்றார். இத்தாலியை பூர்வீகமாக கொண்ட, காங்கிரஸ் தலைவர், சோனியாவும், இத்தாலி அரசுக்கு, கடும் கண்டனம் தெரிவித்தார். இத்தாலி வீரர்களுக்கு அளிக்கப்பட்ட, நான்கு வார கால அவகாசம், நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில், இந்திய வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்ட, இத்தாலி அரசு, வீரர்களை திருப்பி அனுப்பி வைக்க உறுதியளித்தது; வீரர்களை, உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.


"வந்து கொண்டிருக்கின்றனர்': இந்த விவகாரம் குறித்து நேற்று, பார்லிமென்டின் இரு சபைகளிலும் அறிக்கை அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இத்தாலி வீரர்கள் விவகாரம், திருப்திகரமான முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக, தூதரக ரீதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன. இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்ப முன் வந்த அந்நாடு, சில நிபந்தனைளை விதித்தது. தங்கள் வீரர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, கேட்டுக் கொண்டது. மத்திய அரசும், அத்தகைய தண்டனை வழங்கும் எண்ணம் கிடையாது என, தெரிவித்தது. அடுத்ததாக, இந்தியா திரும்பும் வீரர்களை கைது செய்யக் கூடாது என, மற்றொரு நிபந்தனையும் விதித்தது. "சுப்ரீம் கோர்ட் விதித்த, 22ம் தேதி கெடுவுக்குள் திரும்பி விட்டால், கைது செய்யப்பட மாட்டார்கள்' என, உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, இத்தாலி வீரர்கள், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தூதரக ரீதியில், இதுகுறித்து நடைபெற்ற விவாதங்கள் அனைத்தையும் வெளியிட முடியாது. இவ்வாறு கூறிய, அமைச்சர், சல்மான் குர்ஷித், இந்த விவகாரத்தின் முக்கிய அம்சங்களை மட்டும் வரிசைப்படுத்தினார்.


"மகிழ்ச்சி அளிக்கிறது': மதிய உணவு இடைவேளையில், பார்லிமென்ட் வளாகத்தில், நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்த, பிரதமர், மன்மோகன் சிங் கூறுகையில், ""இத்தாலி அரசின் முடிவு, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய நீதித்துறையின் மாண்பு, நேர்மை காப்பாற்றப்பட்டுள்ளது,'' என்றார். இத்தாலி வீரர்கள் விவகாரத்தில், சுமுக முடிவுக்கு வழிவகை செய்த, பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவரை பாராட்டுவதாக, கேரள முதல்வர், உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.


"பிரதமருக்கு நன்றி': கேரள சட்டசபையில் நேற்று அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்த விவகாரத்தை அருமையாக கையாண்டு, சுமுகமான முடிவுக்கு வழிவகை கண்ட, பிரதமர், மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தில், முதல் நாளில் இருந்தே, தூதரக ரீதியில் சுமுக முடிவு காணப்படும் என, பிரதமர் உறுதியாக தெரிவித்து வந்தார். அதன்படியே, சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இத்தாலி கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களில் ஒருவரான, ஜலஸ்டீனின் மனைவி டோரா கூறுகையில், ""இத்தாலி அரசின் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கு, இந்தியாவில் தான் நடக்க வேண்டும்,'' என்றார்.


வருகை: இத்தாலி வீரர்கள் நேற்று மாலை டில்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் சுதந்திரமாக நடமாடவும், இத்தாலி தூதரகத்தில் தங்கியிருக்கவும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அரசுக்கு கிடைத்த வெற்றி: மத்திய, நிதித்துறை அமைச்சர், சிதம்பரம் கூறியதாவது: இத்தாலி வீரர்களை இந்தியா கொண்டு வருவதற்காக, அரசு விடாது முயற்சி மேற்கொண்டது. தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கான பிரதிபலனை, எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொண்டாலும், அதற்காக நான் வருத்தமடைய மாட்டேன். இது அரசுக்கு கிடைத்த வெற்றி தான் என்பதை, மக்கள் அறிவர். இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (44)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - kumbakonam,இந்தியா
23-மார்-201316:58:48 IST Report Abuse
mohan நம்ம பிரதமர் மாதிரி ஒவ்வொரு நாட்டுக்கும் பிரதமர் கிடைத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கொஞ்சம் யோசித்து பாருங்களேன்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
23-மார்-201317:59:33 IST Report Abuse
மும்பை தமிழன்சும்மா தமாசு பண்ணாதப்பா...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
krishnaraj - pierrefitte sur seine,பிரான்ஸ்
23-மார்-201316:16:32 IST Report Abuse
krishnaraj வெளியுறவு அமைச்சர் நீதி மன்றத்தை போல சில கருத்துக்களை சொல்லி இருப்பதை பார்த்தால் இந்த வழக்கு மிக சுலபமாக நீர்த்துப்போகும் என்பதில் சந்தேகமில்லை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rasool Moideen - Chennai,இந்தியா
23-மார்-201316:14:04 IST Report Abuse
Rasool Moideen ரொம்ப பெரிய சாதிப்பு. பரவயில்லையே இந்த காமெடி பீஸ் பேச்சை கூட மத்த நாட்டு காரங்க கேட்கிறார்களே...இதே பூரிப்பு தேர்தலுக்கு அப்புறம் பாக்கணும் இவங்க முகத்தில.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sree - Muscat,ஓமன்
23-மார்-201316:01:24 IST Report Abuse
Sree மிகப்பெரிய டிராமா நடக்குது. மக்களே கவனமாக இருங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
23-மார்-201315:49:01 IST Report Abuse
பொன்மலை ராஜா கொலைகாரர்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுக்கும் நாடுகளுடன் மன்மோகன்சிங் அரசுக்கு நல்ல உறவு இருக்கிறது. ... அவர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு நம் naattu நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கிட்டு எந்த எந்த தண்டனை தரக் கூடாது என்பதில் குற்றவாளிகள் வைக்கும் கோரிக்கைக்குப் பணிந்து ... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201315:32:23 IST Report Abuse
ganesan b(ganesh) "தங்கள் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என கேட்டுக் கொண்டது. மத்திய அரசும், அத்தகைய தண்டனை வழங்கும் எண்ணம் கிடையாது என தெரிவித்தது. அடுத்ததாக, இந்தியா திரும்பும் வீரர்களை கைது செய்யக் கூடாது என மற்றொரு நிபந்தனையும் விதித்தது. "சுப்ரீம் கோர்ட் விதித்த, 22ம் தேதி கெடுவுக்குள் திரும்பி விட்டால், கைது செய்யப்பட மாட்டார்கள்' என, உறுதியளிக்கப்பட்டது". "இந்திய நீதித்துறையின் மாண்பு, நேர்மை காப்பாற்றப்பட்டுள்ளது". புரியாத புதிர்.ஒரு குற்றவாளிக்கு நீதி மன்றம் தானே தீர்ப்பு சொல்லவேண்டும்.அதுதானே நடைமுறை. ஒரு குற்றவாளி முதலிலேயே "என்னை கைது செய்யக் கூடாது " என்பதும்,"தீர்ப்பு தனக்கு சாதகமாக வரவேண்டும்' என்றெல்லாம் சொல்வது ஒன்றும் புரியவில்லை சாமியோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மார்-201314:59:20 IST Report Abuse
தமிழ்வேல் //தங்கள் வீரர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, கேட்டுக் கொண்டது. மத்திய அரசும், அத்தகைய தண்டனை வழங்கும் எண்ணம் கிடையாது என, தெரிவித்தது. // தண்டனைகள் கோர்ட்டு முடிவெடுப்பதா ? அல்லது கோர்டிற்கு மத்திய அரசு நிர்பந்திப்பதா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-மார்-201314:40:25 IST Report Abuse
Nallavan Nallavan தூக்குல போடமாட்டோம் .... இங்கேயே வெச்சு வகை வகையா .... நாக்குக்கு ருசியா ... வக்கனையாச் சமைச்சுக் கொட்டுவோம் ... வழக்கு அவனுங்க ஆயுசு வரைக்கும் நடக்கும் ... இப்படியெல்லாம் வாக்குறுதி கொடுத்திருப்பீங்க ....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
23-மார்-201311:56:05 IST Report Abuse
Devanand Louis இதே மாதிரி பாகிஸ்தான் விசயத்தில் இருந்தால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
23-மார்-201311:55:02 IST Report Abuse
News Commitor இதன் பின்னணியிலாவது அன்னையின் உதவி இல்லாமல் இருக்கும் என நம்புவோமாக.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.