தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.13,862: பட்ஜெட் காட்டும் அதிர்ச்சி தகவல்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழக அரசுக்கு தற்போதுள்ள கடனில், ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய்க்கு பொறுப்பாளியாக உள்ளனர். தமிழக அரசின் கடன் தொகை, 2013-14ல், 1.41 லட்சம் கோடியாக உயரும். இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை: இக்கடன் தொகையை, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகைக்கு கணக்கிடும்போது, ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய், 19 காசுகளுக்கு பொறுப்பாளி ஆகிறார். இந்த கணக்கீடு, 2011ல் தமிழகத்தில் உள்ள, 7.21 கோடி மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், மக்கள் தொகை அதிகரித்திருக்கும் பட்சத்தில், இதில், கொஞ்சம் குறையலாம். தமிழகத்தின், 2013-14ம் நிதி ஆண்டின் வருவாய், 1 லட்சத்து 18 ஆயிரத்து 579 கோடி ரூபாய்; வருவாயில் செலவு, 1 லட்சத்து 17 ஆயிரத்து 916 கோடி ரூபாய்; வருவாய் உபரி, 664 கோடி ரூபாய். நடப்பு, 2012-13ம் நிதி ஆண்டில் வருவாய், 1 லட்சத்து ஆயிரத்து 777 கோடி ரூபாயாக இருந்தது. செலவினம், 1 லட்சத்து ஆயிரத்து 325 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டது. இதனால், 451 கோடி ரூபாய் வருவாய் உபரி கிடைத்தது.
பற்றாக்குறை: வரும் நிதி ஆண்டில், 664 கோடி ரூபாய் வருவாய் உபரியாக இருந்தாலும், நிதி பற்றாக்குறை, 22 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக இருக்கும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், இப்பற்றாக்குறை, 2.84 சதவீதமாகவே இருக்கும் என்பதால், 13வது நிதிக்குழு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது என, பட்ஜெட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இது, சற்று நிம்மதி தரும் தகவல். அதே சமயம், மத்திய அரசு கடன் தொகையில், ஒரு தனி நபர், எவ்வளவு கட்ட வேண்டும் என்றும், அதையும் சேர்ந்த சுமையைக் கணக்கிட்டால், அனாவசிய குழப்பம் தான் அதிகரிக்கும். தமிழகம், 2012-13ம் ஆண்டில் பெற்ற கடன், 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு, 10 ஆயிரத்து 754 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டது. இக்கடன் தொகை, 2013-14ம் ஆண்டில், 1.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது. இதற்காக, 13 ஆயிரத்து 584 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, 6,000 கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது. இத்தொகையை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டதால், கடந்த ஆண்டை விட, கடன் தொகை அதிகரித்து உள்ளது.
குறையும் கடன்: ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட, கடன் பெறுவது அனுமதிக்கப்படுகிறது. 2012-13ம் நிதியாண்டில், 20 ஆயிரத்து, 716 கோடி ரூபாய், கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 15 ஆயிரத்து 675 கோடி ரூபாய் தான், கடன் வாங்கப்பட்டது. கடன் பெறுவது குறைவதற்கு, வரி வருவாய் அதிகரித்துள்ளது முக்கிய காரணம். வரும், 2013-14ம் நிதி ஆண்டில் பெற உள்ள, 24 ஆயிரத்து 263 கோடி ரூபாய் கடனில், 21 ஆயிரத்து 142 கோடி ரூபாய் அளவிற்கே கடன் பெற, தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளமும், ஓய்வூதியமும்: தமிழத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அளிக்க, 49 ஆயிரத்து 687 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இத்தொகை, மொத்த செலவினத்தில், 42 சதவீதம். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பியதால், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (38)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Balasundaram - nagapattinam,இந்தியா
28-மார்-201311:50:24 IST Report Abuse
R Balasundaram தவறு செய்யும் அரசியல் வாதிகளும் ,லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களும் ,வேலை செய்யாமல் பணம் சம்பாதிக்கவும் ,இலவசத்தையும் வாங்கவும் நம் பொதுமக்கள் இருக்கும் வரை தனிநபர் கடன் குறையாது,அதிகம் ஆகிகொண்டேதான் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-மார்-201310:56:01 IST Report Abuse
mirudan பட்டிகாட்டான் அவர்களே RBI இன் சட்ட திட்டங்களை தான் இந்தியாவில் அனைத்து வங்கிகளும் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள், ஆனால் எந்த வங்கியும் RBI இன் சட்ட திட்டங்களை கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் ஒரே போக்கிடம் கன்சூமர் கோர்ட் இங்கே பியூன் முதல் நீதிபதி வரை லஞ்சம் வாங்கி கொண்டு வங்கிகளுக்கு சாதகமாக தான் தீர்ப்பே சொல்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-மார்-201310:50:57 IST Report Abuse
mirudan அய்யா பட்டிகாட்டான், நானும் உங்களை போன்று தான் 2005 இல் 450000 வீட்டு கடன் வாங்கி இதுவரை 600000 கட்டி இருக்கிறேன் இதற்க்கான கணக்கை தர மறுக்கிறார்கள், கன்சூமர் கோர்டுக்கு போனேன் கிழட்டு தலைவர் நான் கொடுத்த தகவல்களை கொண்டு கேசை டிஸ்மிஸ் செய்து விட்டார், இதை மேல்முறையீடு செய்து ஒருவாரத்திற்கு மேலாகியும் வாயுதா வாயுத என்று போய் கொண்டு இருக்கு, சரி சிதம்பரம் செட்டியாருடன் இது நியாயமாக இருக்க என ஒரு புகார் கொடுத்தேன் அதை National Housing இல் முதலில் இருந்து சொல்லுங்கள் என்று என்னக்கே திருப்பி அனுப்பி விட்டார், இவர் நாட்டின் நிதி மந்திரியா ? இல்லை காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டி கொடுக்கும் மந்திரியா ?
Rate this:
Share this comment
Cancel
sathish kumar - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
25-மார்-201309:04:31 IST Report Abuse
sathish kumar அவங்களுக்கு அறிவு இல்ல??????? வாங்குன கடனையே தள்ளுபடி பண்ணும்போது வாங்காத கடனையெல்லாம் தள்ளுபடி செய்துடுவாங்க பாஸ்>>>>>>>>>> யெல dont worry be happy.................................................
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-மார்-201300:30:37 IST Report Abuse
g.s,rajan ஒரு சிலர் ஆட்சிக்கு வந்து அரசாங்க கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந்ததால் வந்த வினை அவர்களிடம் பல லட்சம் கோடிகள் சொத்து சேர்ந்து விட்டது நாட்டு மக்களை கடனாளி ஆக்கிவிட்டனர் வெகு விரைவில் ஒன்றும் இல்லாமல் ,பரதேசியும் ஆக்கப்போகின்றனர் .இது உறுதி .
Rate this:
Share this comment
Cancel
Ajith Nair - Singapore,சிங்கப்பூர்
23-மார்-201316:44:02 IST Report Abuse
Ajith Nair நான் பதினங்கயிரம் ரூபாய் கொடுத்தால் தமிழக அரசு என்னை முதல் கடனாளி அல்ல என அறிக்கை வெளியி‌டுமா. இதன் பிறகு எந்த கடன் வந்தாலும் அரசு அடைக்குமா
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-மார்-201300:20:13 IST Report Abuse
Matt Pஉங்களது நாட்டு பற்று பாராட்டுக்குரியது....அஜித்......இந்த பதினான்காயிரம் ஜயாவினாலும் கருனநிதியினாலும் விஜய்கந்தினாலும் கொடுக்கப்பட்டு அடைக்கபட்டபிறகு உங்களை நான்காவது -கடனாளி அல்ல என்று அறிவிக்கட்டுமே .......
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
28-மார்-201308:11:00 IST Report Abuse
mohanதமிழ் நாட்டு கடன் மட்டும், 13,000/= இந்திய கடன் ஒரு ஆளுக்கு எவ்வளவு.........
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
23-மார்-201316:27:01 IST Report Abuse
Kavee அட இவ்ளோதானே... நோ ப்ரோப்ளம் ... அப்போ தமிழ் நாட்டுலே தனி நபர் வருமானம் என்னங்க சாமி அதையும் கொஞ்சம் கால்குலேட் பண்ணி சொல்லிடுங்க, அப்படியே தனி நபர் வருமான உயர்வுக்கு நம்ம அரசு என்ன பண்ணி இருக்காங்கன்னும் சொல்லுங்க, அப்புறம் தொழில் விவசாயம் கல்வி மேன்பாடு இதுக்கெல்லாம் ஆக்கப்பூர்வமா இதுவரைக்கும் ஏதாச்சும் (அறிக்கைய விடுங்க நாங்க கொடுப்போம் 10000 அறிக்கை இதை விட சுப்பரா)... ஒன்னும் பண்ணலே இல்ல .... ஹி ஹி மொத்தமா அல்வா கொடுத்துடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rajkumar Rajamanian - juffair,பஹ்ரைன்
23-மார்-201316:07:01 IST Report Abuse
Rajkumar Rajamanian கடன் பிரச்னையை கணக்கு எடுத்த அரசு அதிகாரிகளும் அரசாங்கமும் தன்னுடைய வருமானததையும் தனி நபர் தினசரி வருமானத்தையும் ஒப்பிட்டு பார்த்து நாட்டு மக்கள் மீது கடன் சுமைகளை திணிக்கவும் நாட்டு கடனுக்கஹ ஒரு ஒரு குடிமகனும் கடமை பட்டவன். ஆனால் நாட்டு கடன் என்பது நாட்டின் வளர்சிக்கு மட்டும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அரசு அதிகாரம் அரசியல் அதிகாரம் அரசு துறை அதிகரிகள் இவை அனைத்திலும் சரியாக செயல் பட்டால் நாம் கடனாளி நாடாக பெயர் எடுக்கும் அவசியம் இருந்து இருக்காது. போகட்டும் இனி அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டாள் கடன் பிரச்னை பெரிய விஷயம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
govind - Muscat,இந்தியா
23-மார்-201315:11:25 IST Report Abuse
govind எங்களுக்கு இலவசம் வேணாம் என்று நல்ல புள்ளைகளா சொல்லட்டும் மக்கள்....? அட நீங்களும் தாங்க.... சும்மாவா சொன்னாங்க.... சும்மா வந்தா சித்தப்பனுக்கு ரெண்டு..... இங்கே உங்கள் பகுதியில் கதை எல்லாம் அளக்க கூடாது.... சும்மா ஊர் வம்பளப்பு வேணாம்.... இலவசம் வாங்க போகாதீங்க..... அதற்க்கு பிரசாரம் செய்யுங்க.... சொல்லுங்க... நடத்தையில் காண்பிங்க....
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
23-மார்-201314:47:37 IST Report Abuse
Mustafa எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியதும் இந்நாடே. எம்மை கடனாளியாக்கி களிப்படைவதும் இந்நாடே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்