E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்தியாவுக்கு இறக்குமதியான சொகுசு கார்கள் பறிமுதல்: மோசடிக்கு காரணமானவர் தலைமறைவு?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

24 மார்
2013
01:14
பதிவு செய்த நாள்
மார் 22,2013 23:38

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததில், 50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சி.பி.ஐ., இரண்டு நாட்களாக நடத்திய அதிரடி சோதனை மூலம், இந்த மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, 2011 வரை, வெளிநாடுகளில் இருந்து, பல நிறுவன தயாரிப்புகளான, 33 சொகுசு கார்களை, சிலர் வாங்கியுள்ளனர். இந்த கார்கள் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு, பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியும், அந்த விசாரணை முறையாக நடக்கவில்லை. அதனால், இந்த விசாரணை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த மூன்று மாதங்களாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், நேற்று முன் தினம், 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றதுதான், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சோதனை தொடர்பாக, நேற்று சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீடு உட்பட, 18 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, 17 வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருவாய் புலனாய்வு துறை அதிகாரி, முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார். நேற்றும் இதேபோல், சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில், மேலும், 16 கார்கள் கைப்பற்றப்பட்டன. வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி, முருகானந்தம், வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப் மற்றும் சில அதிகாரிகள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 33 சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சில கார்கள் இறக்குமதி செய்ததில், இறக்குமதி விதிகள் மீறப்பட்டுள்ளதால், அரசு, 48 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்த விபரங்கள் தெரிந்தும், வருவாய் புலனாய்வு துறை அதிகாரி, முருகானந்தம் யார் மீதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் வேந்தர் ஆர்.வெங்கடாசலம் வீட்டிலிருந்து, ஏழு, எம்.ஜி.எம்., குரூப் நிறுவனங்களிடமிருந்து, இரண்டு, ஜான்சன், ஜி.கே.ஷெட்டி ரமணா, ராஜா சங்கர் ஆகியோரிடமிருந்து, எட்டு என, சென்னையில் மட்டும், மொத்தம், 17 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 16 கார்கள், ஐதராபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தனர். இத்தனை சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்டாலின் மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள, விளையாட்டு பயன்பாட்டு வாகனமான, "ஹம்மர்' வாகனத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாமி - மதுரை,இந்தியா
23-மார்-201313:34:04 IST Report Abuse
சாமி ஸ்டாலின் மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள, விளையாட்டு பயன்பாட்டு வாகனமான, "ஹம்மர்' வாகனத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.// இது என்ன கொடுமை காரை அவங்களே ஒப்படைபதாக சொள்ராங்களே அவுங்களா கொடுத்தாலும் நீங்க வாங்க மாட்டிங்க போல
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
23-மார்-201313:15:52 IST Report Abuse
Kavee எதற்கும் ஒரு எல்லை உண்டு "வரி" உட்பட.... எல்லை தாண்டினால் இப்படி தான் நடக்கும். அதுக்கு மேலும் எவ்ளோ பேருக்கு எவ்ளோ கொடுக்கணும் தெரியுமா? கண்டுக்காமல் இருக்க .... இப்போ கூட யாருக்கோ என்னவோ மிஸ் ஆகி இருக்கு, பங்கு தகராறு போல அதுதான் மேட்டர் வெளியிலே வந்து இருக்கு .... அரசும் அரசு ஊழியர்களும் சரியாக இருந்தால் எல்லாம் எல்லோரும் சரியா இருப்பாங்க ....
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
23-மார்-201313:05:23 IST Report Abuse
tamilaa thamila தொடரட்டும்,வேட்டை. கருப்பு வெளியில் வரும். வெல்டன் சிபிஐ
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-மார்-201312:49:44 IST Report Abuse
Nallavan Nallavan சீனு மாமாவும் மாட்டிக்கினாரா? மதுரை விருமாண்டிக்கு விஷயத்தைச் சொல்லுங்கப்பா
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
23-மார்-201312:47:07 IST Report Abuse
Thamilan-indian வரி எய்ப்பு ஒன்றும் பெரிய விசயமல்ல. தினமும் வெளியாகும் ஒரு தின செய்தி. இதில் யாரும் குற்றம் காண முடியாது.
Rate this:
3 members
1 members
5 members
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
23-மார்-201312:45:31 IST Report Abuse
Thamilan-indian காரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அரசியல் சட்டத்தால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-மார்-201312:32:04 IST Report Abuse
BLACK CAT நமக்கு இனி அம்பசடோர் காரில் பயணம் செய்யலாம் ... கவலை வேண்டாம் ...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
23-மார்-201312:25:11 IST Report Abuse
Sesha Narayanan 50 கோடியா? ஜுஜுபி. இதெல்லாம் மோசடியே அல்ல.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
23-மார்-201311:47:47 IST Report Abuse
NavaMayam கலைஞர் ஆட்சிய விட்டு செல்லும் பொது 90,000 கோடி , இப்போ மூன்று வருசத்தில் 1,41,000 கோடி அதாவது மூன்று வருசத்தில் 51, 000 கோடி அதிகம் ... ஆண்டுக்கு 17,000 கோடி அதிகம் இன்னும் மீதியுள்ள இரண்டு வருடத்தில் இன்னும் 34,000 கோடி ஆக மொத்தம் 1,75,000 கோடி ....எனவே மீண்டும் ஆட்சியை பிடித்து ஒன்னும் சுரண்ட முடியாது ... எனவே திமிக , தேமுக இவைகள் ஜெயித்து பிரயோஜனம் இல்லை , தேர்தல் செலவாவது மிச்சம் என்று கட்சியை கலைத்து விடுவார்கள் .... அம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்... அம்மாவின் ரஜ தந்திரம் யாருக்கு வரும்.....
Rate this:
8 members
0 members
6 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
23-மார்-201316:56:20 IST Report Abuse
Pannadai Pandianஎந்த செய்திக்கு எந்த கருத்து ? சரக்கு இல்லையா ???...
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
23-மார்-201311:32:52 IST Report Abuse
mirudan 33 சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது நாள் வருமானம் ரூபாய் 28/- உள்ளவர்களால் தான் அதனால் இதை பெருசா எடுத்து கொள்ள தேவையில்லை. ரூபாய் 28/- வருமானத்தில் எப்படி இவ்வளவு வரி கட்ட முடியும் யோசிக்க வேண்டாமா ?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.