Centre betrayed tamils: Tamilnadu MP.,s in Loksabha | இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்| Dinamalar

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்

Updated : மார் 24, 2013 | Added : மார் 22, 2013 | கருத்துகள் (34)
Advertisement
Centre betrayed tamils: Tamilnadu MP.,s in Loksabha மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: எம்.பி.,க்கள்

"இலங்கை விவகாரத்தில், மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது' என, குற்றம்சாட்டி, லோக்சபாவில், தமிழக எம்.பி.,க்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டதால், சபை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோஷம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் ஆரம்பமானது. அடுத்த கணமே, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும், தென்காசி லோக்சபா தொகுதி, இந்திய கம்யூ., - எம்.பி., லிங்கமும் எழுந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சபையில், பலத்த அமளி காணப்பட்டது. திடீரென, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அதே போல், தி.மு.க.,வைச் சேர்ந்த, பெரும்பாலான, எம்.பி.க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டாலும், மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த, பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர், சபாநாயகர் பக்கம் வராமல், தங்கள் இருக்கை அருகே, நின்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சரான அழகிரி, சபையில் இல்லை.
ஸ்தம்பிப்பு: "தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது' என, தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டாக குரல் எழுப்பியதால், சபையே ஸ்தம்பித்தது. ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, வலுவான தீர்மானம் வர விடாமல், மத்திய அரசு சதி செய்து விட்டது என்றும் கோஷமிட்டனர். பத்து நிமிடங்களுக்கு மேலாக, இந்த அமளி நீடித்ததால், கேள்வி நேரம் ரத்தானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரையிடம் வந்த, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத், ""பங்குச் சந்தை குறித்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். கூச்சல், குழப்பமாக இருந்தாலும், பரவாயில்லை. அமளிக்கு மத்தியில், மசோதாவை நிறைவேற்ற சம்மதம் தெரிவியுங்கள்,'' என்றார். அதற்கு, தம்பித்துரையும், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர், டி.ஆர்.பாலுவும் மறுப்புத் தெரிவித்து விட்டனர். அதேபோல், அரசின் இந்த வேண்டுகோளுக்கு, இந்திய கம்யூ., - எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தாவும், எதிர்ப்பு தெரிவித்தார். கமல்நாத் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், யாரும் சம்மதிக்கவில்லை.
ஒத்தி வைப்பு: தமிழக எம்.பி.,க்களால், சபையில் பலத்த அமளி நிலவவே, பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், செய்தவதறியாது திகைப்புடன் அமர்ந்திருந்தனர். இதனால், வேறு வழியின்றி சபையை, அடுத்த மாதம், 22ம் தேதிக்கு, ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
23-மார்-201319:00:49 IST Report Abuse
Krish Sami என்ன இது? அதில் மட்டும்தானா? இல்லை காங்கிரஸ் மட்டும்தானா?
Rate this:
Share this comment
Cancel
Narayanan K - Tirunelveli,இந்தியா
23-மார்-201318:42:24 IST Report Abuse
Narayanan K இந்த துரோகம் எல்லாம் இப்ப தான் தெரியுதா ????????????? அட போங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க ....
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
23-மார்-201313:14:38 IST Report Abuse
Prabu.KTK தமிழ் நாட்டில் திமுக,காங்கிரஸ் இரண்டு கட்சிக்குமே ஆப்பு வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சியை கொண்டு வர வேண்டும். திரு மோடியின் கரங்களை வலுப் படுத்தலாம்
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
23-மார்-201320:26:22 IST Report Abuse
Krishதிரு பிரபு அவர்களே, நீங்கள் கூறுவது மட்டும் நடந்தால் நமது மீனவர்களும் காப்பாற்றப்படுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201312:35:50 IST Report Abuse
Tamilarasu Rajakkili இலங்கையில் தமிழன் இரண்டு பிரிவுகளாக இருக்கும்வரை முடிவு ஏற்படாது... இங்குள்ள அரசியல் கட்சிகளும் நாய்கள் போல ( இலங்கையில் நாய்கள் போல் இருந்ததன் விளைவு தமிழன் அழிக்கப்பட்டான். பிரபாகரன் கருணா பிளவு இல்லையென்றால்.. விளைவுகள் வேறாக இருந்திருக்கும்.) இதையெல்லாம் சிந்திக்காமல் அறிவற்றவர்களாக தமிழினம் உள்ளது.... அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் படித்து ஆளாகி விட்டார்கள்... ஆனால் மற்றவர்களின் பிள்ளைகளை பலிகடா ஆக்கி போராட்டம் நடத்துகிறார்கள்... இதையெல்லாம் மாணவர்கள் சிந்தித்து உடனடியாக கல்வி கற்க செல்ல வேண்டும்... தமிழக மாணவர்கள் இனி பத்து வருடம் போராடினாலும் ஒன்றும் நடக்காது.. ஆனால் மாணவர்கள் ரோட்டில் நிற்கவேண்டிய நிலை வந்துவிடும்... அறிவுடன் செயல்பாடு இருக்க வேண்டும்... யாராவது அரசியல் தலைவர்களின் வாரிசு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்களா... அவர்களெல்லாம் விடுமுறை கிடைத்தால் டியூஷன் வைத்து நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள்.. போராட்டகார மாணவர்கள் ஒன்றுமில்லாமல் ஏங்குவதுதான் மிச்சம்.... ஆக மாணவர்கள் போராட்டம் அறிவீனமான ஒன்றே... படிப்புவராதவர்கள் தானும் கேட்டு பிறரையும் கெடுப்பவர்கள்... போராட்டகாரர்கள்... எவிவிட்டவன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றான் .. பகடைக்காய்கள் அழிந்து போகும்.. இதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
23-மார்-201311:57:35 IST Report Abuse
Sesha Narayanan நடுநிலையை பார்க்க வேண்டியது நியாம்தான். உச்சகட்ட போரின் போது அப்பாவி மக்கள் கொல்லபடுவது எந்த விதத்தில் நியாயம்? no firing zone உள்ள மக்களின் மீது சரமாரியாக குண்டுகளை போட்டது எந்த விதத்தில் நியாயம்? பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது எந்த விதத்தில் நியாயம்? இரவில் பெண்களின் கதறல்களும், சிறுவர்களும் சிறுமியர்களும் ஈவு இறக்கம் இன்றி கொல்ல பட்டது, மகளின் முன் தந்தையும், மகனின் முன் அம்மாவும் நிர்வாணமாக சரண்டர் ஆக சொன்ன இலங்கை ராணுவத்தின் வெறி செயல் கண்டிக்க தக்கதே. இதற்கு இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் சர்வ தேச விசாரணையில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
DuraiRaj - Chennai,இந்தியா
23-மார்-201311:28:40 IST Report Abuse
DuraiRaj வீடியோவை பார்த்தும், போட்டோக்களை பார்த்தும் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர்களுக்காக இன்ஸ்டால்மென்டில் போராடியதை தவிர தமிழக கட்சிகள் என்ன செய்துவிட்டன? தமிழக கட்சிகள் இன்று ஒட்டு மொத்தமாய் காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு என்று தங்களை நியாயவாதிகள் போல் காட்டிக்கொள்வதற்கு தமிழக மக்களும் ஒரு காரணம்? பொது கூட்டங்களில் மூச்சை பிடித்துக்கொண்டு பேசியதை தவிர நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதம் வெளி வந்திருக்கும்? திமுக இன்று மத்திய அரசிற்கான ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதைவிட மத்திய அரசில் சேருவதற்கு முன்னரே இலங்கை தமிழர்களுக்கான நலனை நிபந்தனையாக வைத்து ஆதரவு கொடுத்திருக்கலாமே? கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இருக்கும் அதிமுக நடு நிலையோடுதான் பேசிக் கொண்டிருந்தார்கள்? தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக அரசியல் கட்சிகள் நடத்திய உண்ணாவிரதங்களில் அரசியலும் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே? பிஜேபி கட்சியை பொருத்தமட்டில் அதன் மக்களவை தலைவர் சுஷ்மா சுவராஜ் ராஜபக்க்ஷே போர் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது , இலங்கை நம் நட்பு நாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார்? தமிழக பிஜேபி கட்சிகாரர்களோ தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சொல்கிறார்களே தவிர, தமிழகத்திற்கு தண்ணீர் தராத பிஜேபிக்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியவில்லை? கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா பார்லிமென்ட் விவாதத்தின் போது இது திமுகவிற்கும், மத்திய அரசிற்கும் உள்ள பிரச்சனை என்று சொல்லி தமிழ்நாடு அமெரிக்காவில் இருப்பது மாதிரி நடந்து கொண்டார் (அமெரிக்கா என்றாலே இவர்களுக்குதான் ஆகாதே). கம்யூனிஸ்ட் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஏதாவது ஒரு கட்சிக்கு அடிமையாக இருப்பதையே பாக்கியமாக கருதும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்போதெல்லாம் தொலைக் காட்சி விவாதத்திற்கு தங்களை அர்பணித்து கொண்டார்கள்? வைகோ, சீமான் போன்றவர்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை? கட்சி உருவாக்கப்பட்டதே இலங்கை தமிழர்கள் பிரச்னையை முன் வைத்துதான் என்பதால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தமிழன், தமிழன் என்று சொல்லியே கடைசிவரை கட்சியை ஒட்டிக்கொண்டு இருப்பார்கள்? இப்படி இலங்கை தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல அனைத்து கட்சிகளுமே சுயநலத்தோடுதான் நடந்துகொண்டார்கள்? இன்று போராடும் மாணவர்கள் கூட ஏதோ கீ கொடுத்து விட்ட பொம்மை மாதிரி ஒரு விஷயத்தை ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்துக்கொண்டு, ஒரே பேச்சை பேசிக்கொண்டு இருப்பதை விட ஒவ்வொரு சந்தர்பத்திலும் இலங்கை தமிழ்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று நடப்பு சூழ் நிலைகளையும் பார்த்து தவறு செய்கிற ஒவ்வொரு கட்சியினரையும் பார்த்து கேள்வி கேட்க வேண்டும்? மக்களும் தான் சார்ந்த கட்சிக்கு வலுகட்டாயமாக ஆதரவு தெரிவிப்பதை விட்டு விட்டு சம நிலையோடு பார்க்கவேண்டும்? காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பிஜேபியோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மக்கள் நினைத்தால் தாரளமாக காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் எதிராக போராடுங்கள் தவறில்லை?
Rate this:
Share this comment
Cancel
SELVAA - Doha,கத்தார்
23-மார்-201311:05:54 IST Report Abuse
SELVAA இந்த வேகம் 2009 இல் ஏன் இல்லை, அப்போது இருந்த தி மு க ஏன் மௌனம் சாதித்தது, எல்லாம் வேஷம். தி மு க ஒரு நல்ல நாடக கம்பெனி. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் ஒரு நடிகர் மற்றும் நடிகை.
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
23-மார்-201310:57:42 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar அனைத்து கட்சிகளும் இவ்விசயத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டுகிறோம்.. தமிழர் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசுக்கு நாம் யார் என்று புரிய வையுங்கள்.. தினமலரின் செய்திக்கு நன்றி.. தொடர்ந்து இலங்கை தமிழர் விசயத்தில் தினமலரும் பங்காற்ற வேண்டுகிறோம்.. அரசியல் செய்தியாக பார்க்காமல் தமிழுணர்வு செய்தியாக வெளியிடுங்கள் .. நன்றி
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
23-மார்-201308:34:06 IST Report Abuse
JALRA JAYRAMAN சபையை நடத்தவிடவில்லை சரி ஆனால் படி மட்டும் ஏன்?
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
23-மார்-201307:56:56 IST Report Abuse
யமதர்மன் ஆறறிவு உள்ள மனிதனாக கடவுள் நம்மை படைத்திருக்கும்போது நம்மை மிருககங்களின் நிலைக்கு நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு, புலி என்றும், சிறுத்தை என்றும், பூனை என்றும், பெருமை பட்டுக்கொள்கிறோம். ஒரு நிஜ புலிக்கு அல்லது சிறுத்தைக்கு பக்கத்தில் நிற்க நமக்கு தைரியம் உண்டா? ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை