முதல்வர் மீது முழு நம்பிக்கை வைக்கணும் :நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் மீது முழு நம்பிக்கை வைக்கணும் :நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

Added : மார் 23, 2013 | கருத்துகள் (1)
Advertisement

நாமக்கல்: ""தமிழக முதல்வர், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து அறிவிப்பார். விவசாயிகள், தமிழக முதல்வர் மீது, முழு நம்பிக்கை வைக்க வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில், வறட்சி பகுதியை பார்வையிடும் வகையில், தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், உயர்மட்டக்குழுவினர், நேற்று, நாமக்கல் வந்தனர். அக்குழுவினர், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில், பாதிக்கப்பட்ட நிலைக்கடலை பயிர்களை பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து, புதுச்சத்திரத்தில், விவசாயிகளிடம் கலந்துரையாடினர். மேலும், உஞ்சனை, கருமகவுண்டம்பாளையம் பகுதிகளில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், பள்ளிபாளையம் அணைமேடு பகுதியில், காய்ந்துபோன விளை நிலங்களையும் பார்வையிட்டனர்.
முன்னதாக, அக்குழுவினரை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் வரவேற்றார். வறட்சி பகுதிகளை பார்வையிட செல்லும்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நில உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து, மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இழப்புகள் குறித்து உயர்மட்டக்குழுவினர் கேட்டறிந்தனர்.
அப்போது, அப்பகுதி விவசாயிகள், கோரிக்கை மனுக்களை, குழுவினரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட நிதியமைச்சர் பன்னீர்செல்வம், ""விவசாயிகளின் நிலை குறித்தும், வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,'' எனத் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தின், வறட்சி பகுதிகளை உயர்மட்டக்குழுவினர் தெரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும், விளை நிலங்களில் பரப்பளவு, பாதிக்கப்பட்ட நிலங்களின் பரப்பு, என்ன பயிர் சாகுபடி, எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், பத்து ஆண்டுகளாக மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு போன்ற விபரங்கள், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம், விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:
விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும், தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் அறிவிப்பார். வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் பரப்பளவு, விவசாயிகளின் எண்ணிக்கை, குடிநீர் பிரச்னை குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, முன்பே கலெக்டர் தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
அதன் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து அறிவிப்பார். விவசாயிகள், தமிழக முதல்வர் மீது, முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், தாமோதரன், தோப்பு வெங்கடாஜலம், தங்கமணி, கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர், வருவாய் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வேளாண் துறை செயலாளர் சந்திப் சக்சேனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-மார்-201315:55:09 IST Report Abuse
Nallavan Nallavan நம்பிட்டோமுங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை