E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக் -எல்.முருகராஜ்.
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

24 மார்
2013
06:48
பதிவு செய்த நாள்
மார் 23,2013 18:01

பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக்.

தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் "கருட பார்வை' என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக். ஒரு பாட்டை "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு "ரீரிக்கார்டிங்' எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை.

காரணம் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், மழை பெய்யும்,கார் ஒடும்,கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார்,பறவைகள் சத்தமிடும்,வாகனங்கள் அலறும் இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து பிறகே, ரீரிக்கார்டிங் செய்ய முடியும்.

அதிலும் திகில் படம் என்றால் இசைதான் பிரதானம். ரசிகர்ளை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன,அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்கவைப்பதும், படபடவென கண் இமைகளை துடிக்கவைப்பதும் திகில் பட இசையின் இலக்கணமாகும். இந்த இலக்கணத்தை வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இதை எப்படி செய்தேன் ,ஏன் செய்தேன் என்பதை அருகிலிருந்து அவர் விளக்கம் கொடுத்த போது படத்தின் இசையில் இன்னும் சுவராசியம் கூடியது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்விக்கு பதில் தருவதற்கு முன் கொஞ்சம் கார்த்திக்கின் வலி மிகுந்த ஆரம்பகால வாழ்க்கையை பார்த்துவிடுவோம்.

கார்த்திக்கின் தந்தை பொன்ராம் ஒரு ராணுவ வீரர். இந்தியா -பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பிறகு கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாயார் சாவித்திரி தான். வெளி உலகம் தெரியாமல் இருந்தவர் கணவரின் இழப்பீட்டு தொகையைக் கொண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார்.

மூன்று வயதான போது இடது கண்ணில் ஒரு சின்ன பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் கார்த்திக். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால் இடது கண் பார்வையை இழந்தார்.,பிறகு மூத்த டாக்டர்கள் பார்த்துவிட்டு வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிச்சி தகவலையும் தந்தார்கள். யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால் வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.

இது நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.

அடித்த ஒரு மணி நேரத்தில் வலது கண் பார்வையும் போய்விட எதிரே இருந்தவை மட்டுமல்ல ,எதிர்காலமே இருண்டதைப் போல இவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில் இருந்த பணத்தையும் இழந்ததுதான் கண்ட பலனாக இருந்தது. வறுமையும்,வாழ்க்கையும் துரத்த சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக். இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்து எடுத்தார். எதிலும் வேகத்துடனும்,விவேகத்துடனும் செயல்படும் இவரது திறமையால் சிறந்த பியானோ கலைஞரானார்., 1800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.

இசை,இசை என்று எந்த நேரமும் இசைக்காக அலைந்தார், நல்ல பாடல்களை பல ராகங்களில் இசைப்பதற்காக,தேடித்தேடி நிறைய கற்றார், ரத்ததானம் செய்தும், இசைக்கருவிகளை அடகு வைத்தும் கூட இசை பயின்றிருக்கிறார். சாப்பாடு இல்லாமல் கூட இருக்கமுடியும் ஆனால் இசை இல்லாமல் இவரால் இருக்கமுடியாது. அதன் பிறகு மதுரையில் நல்லதொரு மியூசிக் ஸ்டூடியோவை அமைத்து நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வருகிறார். சென்னையில் இவருக்கு பெரிதும் உதவுபவர் உறவினர் தில்லைநாயகன்.

இந்த நிலையில்தான் சினிமாவில் ரீரிக்கார்டிங் செய்வது என்பது நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, ஏன் முடியாது நம்மால் முடியும், அதுவும் நானே இதை நிகழ்த்திக்காட்டுவேன் என்று சபதமும் செய்தார்.

சபதத்தின்படி ,முழுக்க மாற்றுத்திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மா' படத்திற்கு இசை அமைத்தார், பலராலும் பாராட்டப்பெற்றது.

என்னைப்பற்றி கேள்விப்பட்ட "கருட பார்வை' இயக்குனர் விவேகானந்தன்,"" நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன் இதற்கு இசை அமைக்கமுடியுமா?'' என்று கேட்டார்,அவருக்கு சில "நோட்ஸ்' போட்டுக் காண்பித்தேன்,நம்பிக்கையுடன் என்னை இசைஅமைப்பாளராக்கினார்.

சுமார் 48 நாட்கள் இரவு பகலாக உட்கார்ந்து படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்தேன். நான் ஒரு பார்வையுள்ள உதவியாளரை மட்டும் வைத்துக்கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்துக்கொண்டு ,படத்தோடு எனது ரீரிக்கார்டிங் இசையை கலவை செய்தேன். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது வெகுஜனங்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள்.

சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், சென்றடைய வாழ்த்துங்கள், வளர்கிறேன் என்று கூறி விடைபெற்ற கார்த்திக்கின் தொடர்பு எண்: 9976916847.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
08-மே-201317:49:41 IST Report Abuse
R.Saminathan வாழ்த்துக்கள் திரு.கிரியோன் கார்த்திக் அவர்களே.நீங்க மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
27-மார்-201315:11:36 IST Report Abuse
ksv நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamil - Bengalooru ,இந்தியா
25-மார்-201303:39:53 IST Report Abuse
Tamil திரு. முருகராஜ் உங்களுக்கும் தினமலருக்கும் நம் முதல் நன்றிகள். திரு. தவசியண்ணன் குழந்தைகளுக்கு உலகத்தமிழ் உன்னத நேசங்களின் உதவி நேரடியாய் சென்று அடையும் முயற்சியில் உள்ளேன். நம்புங்கள் நம் தாய் தமிழ் நெஞ்சங்களால் முடியும். அன்னார் தம் குடும்பத்துக்கு நம் அன்பான ஆறுதல். நன்றியுடன்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
24-மார்-201301:54:04 IST Report Abuse
GOWSALYA சகோதரர் கார்த்திக் வாழ்த்துகள் பல கோடி.....உங்களின் இந்த மகாவளர்ச்சி மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு......"' நம்மால் முடியும் "என்ற தன்னம்பிக்கை எல்லார் மனதிலும் வந்தால்,இருந்தால் நமது வாழ்க்கை மேம்படும்.......வளர்க உங்கள் இசை,அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவாராக......
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-மார்-201301:08:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி நாட்டிலே மழை பெய்றது இவரது தாயார் சாவித்திரி போன்ற உண்மையான அம்மாக்களால் தான்..ஊழல் செய்யாத தந்தை, நடுக்கடலில் கொல்லப்பட்ட சோகம் ..இவரது வாழ்க்கை கடலை கடக்க காலாவதியான கட்டுமரங்கள் காப்பாற்றவில்லை..கடவுளும் தான்..கடல் அளவு சொத்தைக் குவித்த ஒரே கட்டுமரம் எனக்கு தெரிந்து நம்மூர் கட்டுமரம் தான்..திரு.கார்த்திக் அவர்களின் அயராத திறமையை சினிமா உலகம் மட்டும் அல்ல, அகில உலகமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. இவர் மேல் மேலும் உயர இவரது அயராத உழைப்பும், நம்பிக்கையும் கட்டாயம் கை கொடுக்கும்..
Rate this:
0 members
0 members
32 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.