Why Eelam problem did not cross TN boundary? | தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?

Updated : மார் 25, 2013 | Added : மார் 23, 2013 | கருத்துகள் (90)
Advertisement
Why Eelam problem did not cross TN boundary? தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஈழப் பிரச்னை செல்லவில்லை. டில்லியில், லோக்சபா சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இது வெளிச்சத்துக்கு வந்தது.
பார்லிமென்டில், ஈழம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீராகுமார், கூட்டினார். கூட்டத்தில், ஈழப் பிரச்னைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதே தவிர, ஆதரவு கிடைக்கவில்லை. பா.ஜ., - சமாஜ்வாதி, - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், "தனியொரு நாட்டிற்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இலங்கையில், நடந்தது இனப் படுகொலை எனக் கூற முடியாது' என, தெரிவித்தன. சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், "காங்கிரசுக்கும், - தி.மு.க.,வுக்கும் இடையிலான பிரச்னையை, அவர்கள் இருவரும் பேசித் தீர்க்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற்குக் கூட்டினீர்கள்' என, பெரும் கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், ஈழப் பிரச்னையை, தமிழகத்தைத் தாண்டி, தேசிய பிரச்னையாக கொண்டு செல்ல முடியாததற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழப் பிரச்னையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்; பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் என, தன் முதுகை தானே தட்டிக் கொள்ளும் தி.மு.க., தமிழகத்தைத் தாண்டி இப்பிரச்னை செல்வதற்கு என்ன செய்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். லோக்சபாவில், கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு ஈழத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், ராஜ்யசபாவில் போதிய ஆதரவில்லை. தீர்மானம் தோற்றுவிடும் என, கூறிவிட்டு விலகி நின்றதற்கான காரணத்தையும், காங்கிரஸ் கூற வேண்டும் என, தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள பிற கட்சிகளிடம் ஈழப் பிரச்னையை எடுத்துச் சென்று ஆதரவைத் திரட்டாதது, தேசிய அளவில், கருத்தொற்றுமையை உருவாக்காதது ஆகியவற்றுக்கு, தமிழக கட்சிகளே பொறுப்பாளிகள் என்றும், மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே, ஈழப் பிரச்னை குறித்து பொதுக் கருத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ் எழுத்தாளர்களோ, ஆர்வலர்களோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ஆங்கிலம், இந்தி போன்ற பொது மொழிகளில் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்தி - Bangalore,இந்தியா
24-மார்-201311:59:12 IST Report Abuse
சத்தி தமிழ் உணர்வுக்கு அங்கனெ எதிரான நிலை, அங்க போயி இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஆதரவு தானா கெடைக்குமா. பாலிவுட் பெரிய மெகா ஸ்டார புடிங்க, அவுங்கள வெச்சு கான்வாஸ் பண்ணுங்க. மற்றபடி இறந்த ஒரு சிறுவனின் போட்டவ வெச்சுகிட்டு, போஸ்டர் அடிச்சு ஓட்டும் கீழ்தரமான அரசியல் செய்பவரை ஆட்சியை விட்டே தூக்கி எறியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thanjaithamilan - QATAR,இந்தியா
24-மார்-201311:52:39 IST Report Abuse
Thanjaithamilan இது... திராவிடம் என்று கூறி கொள்ளும் கட்சிகள்மட்டுமே கூறவேண்டும், இவ்வளவு நாட்களாக என்ன கிழித்து கொண்டு இருந்தீர்கள் என்று மத்தியில் கேட்கத்தான் செய்வார்கள். அன்று நமது துடிப்பான பிரதமர் என்ற இளைஞரை கொன்ற விடுதலை புலிகள் அந்த செயலுக்கு முன்பே அவர்களின் நியாத்தை காந்தியடிகளின் அர போராட்டத்தை கையில் எடுக்காமல், ஆயுத போராட்டத்தை கையில் எடுத்ததனால் மட்டுமே லட்ச கணக்கான அப்பாவி பொது மக்கள் சாவுக்கு காரணம். 78 சதவீதம் சிங்களர்களும், 28 சதவீதம் உள்ள தமிழர்களும் சண்டை இட்டு, இன்று - அன்று தாங்கள் செய்த தவறுக்கு இந்தியாவின் மூலன் தங்கள் தவறை நியாயப்படுத்த வேண்டும் என்று தமிழன் மட்டும் நினைத்தை எங்களால் முடியாது என்று மத்தியில் "கை" காட்டி விட்டார்கள். 30 வருடங்களுக்கான போராட்ட போரின் விளைவுகளை வரும் எம்பி எலேக்சனுக்காக ஓட்டாக மாற்ற மட்டுமே, இன்று அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற ஒன்றை தூக்கி கொண்டுள்ளது. பல நாட்களாக நிச்சயம் இந்தியா இந்த விசயத்தில் நேரடியாக இலங்கை ஏய் கட்டாய படுத்தி தமிழர்களுக்காக செய் என்று சொல்ல முடியாது என்று நான் கூறி வந்தேன். நானும் ஒரு தமிழன்தான். இன்றுள்ள இலங்கை தமிழர்களின் கஷ்டங்களை, உலக மக்களுக்கு தெரிய படுத்தி அணைத்து உலக மக்களின் ஆதரவை, உலக மொழிகளில் அனைத்து மொழிகளிலும் எடுத்து சொல்லி, உலக மக்களின் உதவிகள் அனைத்தும் இலங்கை தமிழர்களுக்கும் கிடைக்க செய்து அவர்களின் துன்பத்தை போக்கி அவர்களின் புது வாழ்க்கைக்கு முனேற்றம் காண வேண்டும். தமிழ் ஈழம் என்பது, நிச்சயம் இலங்கஏய் இரு துண்டாடி பெறுவது என்பதைவிட அவர்களின் வாழ்க்கை முன்னேற இந்தியாவும் நிச்சயம் தோல் கொடுக்கத்தான் வேண்டும். வியட்நாம் போர் என்பது உலக போரைவிட கொடுமையானது. இன்று வியட்நாம் எப்படி உள்ளது... சும்மா வருடா வருடம் தமிழகத்தின் அரசியல்வாதிகள் போராடாமல் உலக அரங்கில் உலக நீதி மன்றத்தில் அழுத்தம் கொடுத்து இன்றிலிருந்தே ஒன்று சேர்ந்து கோரினால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு விடிவு ...
Rate this:
Share this comment
Cancel
Erodeiva - ERODE,இந்தியா
24-மார்-201311:51:31 IST Report Abuse
Erodeiva செந்தமிழ் கார்த்திக்- ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இலங்கை தமிழர்களை கொன்றது ஏதோ ராஜபக்சே மட்டும் தான் என்ற பிரச்சாரமே பொய்யானது. பிரபாகரனால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதை விட அதிகம். தீவிர வாதம் எங்கிருந்தாலும் அதை ஒடுக்க வேண்டியது, ஒழிக்கவேண்டியது அந்த நாட்டின் நாட்டு அரசின் கடமை. அந்த வகையில் பிரபாகரனை ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது பிரபாகரனால் கேடயமாக பயன் படுத்தப்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சில அது மீறல்கள் இருந்திருக்கலாம். ( நாம் கூட இங்கே வந்த புத்த பிட்சுவை எதற்கு அடித்து விரட்டினோம்? உங்களை பார்க்க வந்த தங்க பாலுவை எதற்கு விரட்டினீர்கள்? ஹிந்தியை திணிக்க கூடாது என்று உங்களுக்கு எப்படி சொல்ல உரிமை இருந்ததோ அதே போல ஹிந்தியை எனக்கு சொல்லிக்கொடு என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அடியோடு ஹிந்தி மொழியை மாநில கல்வி திட்டத்தில் இருந்து அகற்றும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள்? இது மனித உரிமை மீறல் இல்லையா? ). அயல் நாட்டு கொள்கை அர்த்தமற்றது என்று சொல்லும் நீங்கள் நம் நாட்டில் நடக்கும் வரம்பு மீறல்கள் பற்றி - இங்கு முற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித உரிமை மீறல்கள் இல்லையா? ஒரு பிராமணன் குடுமி வைத்துக்கொண்டால் அவனது குடுமியை அறுக்க சொன்ன உங்கள் முன்னோடிகளுக்கு ஒரு முஸ்லிம் பர்தா போட்டால் அதை உருவி ஏறி என்று சொல்ல ஏன் திராணி இல்லாமல் போனது? எவன் பயந்து ஒதுங்கிகின்றானோ அவனை விரட்டுவது இந்த மொழி வெறி நாடக நடிகர்களுக்கு சவுகர்யமான காரியம். இவற்றை எல்லாம் ஏன் இங்கு சொல்ல விரும்புகின்றேன் என்றால் தமிழர்கள் மீது மற்றவர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட, இங்கு நடக்கும் போராட்டங்களை கூத்துக்களாக ( உண்மையில் இவை கூத்துகள் தான் என்பது வேறு விஷயம் ) அவர்கள் பார்ப்பதற்கு காரணம் உங்களை போன்ற மாணவர்கள் தவறானவர்களால் தவறான பாதைக்கு உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சுக்களால் இழுத்து செல்லப்படுவதே. நாம் இந்தியனாக இருக்கும் வரை நமக்கு உலகளவில் மதிப்பு அதிகம். தமிழனாக உங்களை தனிமைப்படுத்திகொண்டு காட்ட விரும்பினால் வெளி உலகம் உங்களை எலி அளவு கூட மதிக்காது. நாம் நம்மை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு நம் மற்ற இந்திய சகோதரர்களை அரவணைத்து சென்றால் நிச்சயம் நமக்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைக்கும். அட அரசாங்கத்தை விடுங்க சார், மற்ற மாநில பொது மக்கள் நமக்கு ஆதரவு தரட்டும் 100 கோடி மக்களின் குரலாக இது ஒலிக்கட்டும் ஐ நா சபை மட்டுமல்ல, அமெரிக்கா வும் கண்டிப்பாக மசியும்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
24-மார்-201311:46:37 IST Report Abuse
arabuthamilan ஈழப் பிரச்சனைய விடுங்கள்..தமிழ்நாட்டுப் பிரச்சனைய விடுங்கள். தவிக்கிற வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் அண்டை மாநிலத்திலிருந்து கொடுக்க மறுக்கிறான். இவர்களா ஈழத் தமிழனுக்கும், தமிழ் நாட்டுப் பிரிச்சனைக்கும் குரல் கொடுக்கப் போகிறான்... சிரிப்புதான் வருகிறது. எல்லாம் சுயநலம், ஒவொரு இந்தியனுக்கும் நாம் எல்லோரும் சகோதரர்கள் சகோதரிகள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்ற எண்ணம் வந்தாலே 90 சதமானம் (தண்ணீர் பிரச்னை உள்பட) தீர்ந்து போகும். அதை விட்டு முகவையும், ஜெ வையும் மற்ற அரசியல் வியாதிகளையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். நம் இந்தியர்களுக்குள்ளேயே ஒருமனம், ஒற்றுமை இல்லையே. இங்கு ஒரு பெரிய நிறுவனம் உள்ளது அங்கு வேலை செய்பவர்களில் 95 சதமானம் மலையாளிகள். வேலை காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தெரிவு செய்வதற்கு இங்குள்ள தினசரி பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பார்கள். விளம்பரம் வந்த அரை மணிக்குள் அந்த நிறுவனத்தை அழைத்துப் பேசினால் வேலை காலி இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் பதில் வரும். காரணம் செய்தி தினசரிக்குப் போவதற்கு முன்பே ஆட்களை தேர்வு செய்து விடுவார்கள். மட்டுமல்ல மலையாளிகளைத் தவிர வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்பு படிவங்கள் அந்த நிருவனத்துக்கு அனுப்பி இருந்தால் அவர்களின் கடிதங்கள் எல்லாம் குப்பை கூடைக்கு அனுப்பி விடுவார்கள். இங்கு பெருமப் பான்மை மலையாளிகள் வேலை செய்யும் நிறுவனங்களில் நடக்கும் அன்றாட செயல்கள். இப்படி இருக்கையில் தமிழர்களின் கூக்குரல் ஒரு நாளும் அண்டை மாநிலங்களில் கொண்டு சென்றாலும் எட்டவே எட்டாது. இது தான் நிதர்சனமான உண்மை.
Rate this:
Share this comment
Krisraj - chennai,இந்தியா
25-மார்-201302:37:05 IST Report Abuse
Krisrajசரியாக சொன்னிர்கள் நானும் அப்படி ஒரு நிறுவதில் வேலை செய்து இருக்கிறேன் . தமிழ் நாட்டில் . ஒரு மலையாளி இருந்தால் ஒரு வேலை காலியாகும் பொது உடன மற்ற மலையாளிய apply பண்ண சொல்லுவான் . paperla ad கூட வந்து இருகாது அதுக்குள்ள தன்னோட ஆளை உள்ள கொண்டு வர என்னலாம் செய்ய முடியுமோ அவ்ளூவும் செய்வானுங்க . இன்னக்கி தமிழ் நாடுள்ள நெறைய கம்பெனில மலையாளிங்க தான் அதிகம் இருக்கனுங்க ....
Rate this:
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
24-மார்-201311:46:19 IST Report Abuse
raj tbm சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு கால்பங்கு என்றால், மானங்கெட்ட மீடியாக்ககுக்கு முக்கால் பங்கு.
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
24-மார்-201311:45:55 IST Report Abuse
Hasan Abdullah திமுக ஈழ பிரச்சனையை தமிழகத்தை தாண்டி நாட்டு பிரச்சனையாக ஆக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு, ஆனால் அதை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக போன்ற கட்சிகள் என்ன செய்தன, அவர்கள் ஒன்றும் செய்யவில்லையானால், இதுவரை ஈழ பிரச்சனைக்காக இந்திய உதவிகள் அனைத்தும் திமுக மூலம் வந்தது என்று ஒத்து கொள்வீர்களா? திமுக பல உதவிகள் செய்தும் இந்த பிரச்னை தமிழகத்தை தாண்ட வில்லை என்று தான் சொல்லமுடியும், ஆனால் திமுக, தமிழகத்தை தாண்டியும் இந்த பிரச்சனையை பலமுறை கொண்டுசென்றுள்ளது, கடந்த இரு வருடம் முன்பே மாநில கட்சிகளின் ஆதரவை பெற திமுக முனைந்தது, ஆனால் நாம் அவர்களிடம் ஆதரவு கேட்கலாமே அன்றி அவர்களை கட்டாயபடுத்த முடியாது, கூட்டணி கட்சியாக இருந்தால் கூட அதிக உரிமையுடன் கேட்கலாமே அன்றி, நீங்கள் ஆதரித்தே தீர வேண்டும் என்று சொல்லமுடியாது. நடந்து முடிந்த அணைத்து கட்சி கூட்டத்தில் சரத் பவார் மற்றும் மாயாவதி போன்றோர் திமுக கேட்ட தீர்மானத்தை ஏற்று கொண்டனர், அப்படிஎன்றால் இந்த பிரச்னை தமிழகத்தை தாண்டி அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது என்று தானே அர்த்தம், இது எல்லாவற்றிக்கும் மேலாக "சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், "காங்கிரசுக்கும், - தி.மு.க.,வுக்கும் இடையிலான பிரச்னையை, அவர்கள் இருவரும் பேசித் தீர்க்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற்குக் கூட்டினீர்கள்' " என்று குறிப்பிட்ட இந்த செய்திவரிகள் தவறு, இவ்வாறு சொல்லியது முலாயம் அல்ல, பிஜேபியின் சுஷ்மா சுவராஜ். காங்கிரஸ் ஈழ பிரச்சனைக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள், பிஜேபி என்ன செய்தது என்று சொல்லுங்களேன். இலங்கைக்கு தமிழர்கள் நிலையை பார்வை இட, இந்திய MP க்கள் குழுவை சுஷ்மா தலைமையில் அனுப்பினால், சுஷ்மா, ராஜபக்சேவை தனியாக சந்தித்து தன சுய நலனுக்காக பேசி பரிசு பெற்று வந்தார், அதேபோல் மத்திய பிரதேசத்திற்கு, ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அழைத்தனர் இந்த பிஜேபியினர். அதே போல் காங்கிரஸ், இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயன்ற போது, லோக் சபாவில் காங்கிரஸ்க்கு பெரும்பான்மை உள்ள காரணமாக இந்த தீர்மானம் வெல்லும், ராஜ்ய சபாவில் பிஜேபி ஆதரித்திருந்தால் அங்கும் நிறைவேறி இருக்கும். ஆக இந்த தீர்மானம் அவைக்கு வராததிற்கு காரணம், பிஜேபி அந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்த்ததின் விளைவாக தான். ஆனால் ஈழ ஆதரவு பேசுவோர் யாரும் பிஜேபியின் இந்த ஈழ விரோத போக்கை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிஜேபியினர் சென்னை வந்தால் மட்டும் தான் ஈழ பிரச்னை ஞாபகம் வரும். சென்னை எல்லையை விமானம் கடக்கும் போது, ஈழ சிந்தனையை வங்க கடலில் தூக்கி எரிந்து தான் செல்வார்கள். இந்த இல. கணேசனும், பொன்.ராதாவும் ஈழ பிரச்சனைக்காக என்ன செய்தனர், இதற்காக ஒருமுறையேனும் டில்லி சென்று அவர்கள் கட்சி தலைமையிடமாவது ஆதரவு கேட்டனரா? காங்கிரஸ் ஞானசேகரனாவது, கடந்த ஒரு மாதம் மட்டும் மூன்று முறை, டெல்லி சென்று தன் கட்சி தலைமையிடம் இங்கு நடக்கும் மாணவர் போராட்டங்களை பற்றி விளக்கி இருக்கிறார். ஆயினும் இங்கு எல்லோருமே காங்கிரஸ் & திமுக மட்டும் தான் குறை சொல்லுகிறீர்கள், ஆனால் அதற்காக அதிமுக, பிஜேபி போன்றோர் என்ன செய்தனர் என்பது யாரும் யோசிப்பதில்லை,
Rate this:
Share this comment
Cancel
uma - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-201311:36:50 IST Report Abuse
uma ராஜீவ் கொலை ஐ புலிகளோடு தொடர்பு படுத்துபவர்களுக்கு , அந்த வழக்கில் விடை தெரியாத கேள்விகள் பல இருக்கிறது என்பது தெரியுமா? அந்த சம்பவத்தின் போது ஒரு வட்டச்செயலாள்ராவது காங்கிரசில் இருந்து செத்தானா? இறந்தவர்கள் கண்மூடித்தனமாக பாசம் வைத்த வெகுஜனம் தானே ...பலமுறை மத்தியிலே அமைச்சர்கள் சுகம் அனுபவிக்கும் இவர்கள் எல்லாம் எங்கே சென்றிருந்தார்கள் .வடக்கில் இருந்து வந்த ஆரிய வர்க்கத்திற்கு தமிழனை மனிதனாக நினைக்கும் எண்ணம் துளியும் கிடையாது ..பழமையான தொன்மையான மூத்த மொழி நம் தமிழ் .அதற்கென்று ஒரு தனித்துவம் , சிறப்பு இருப்பது ஏன் உங்களுக்கெல்லாம் புரியாமல் போனது என்று இன்றுவரை யோசித்தது உண்டா?. இன்று ஈழத்திலே சிங்களன் மட்டும் தான் வாழ வேண்டும் என்று தமிழர்களை கொல்கிறார்கள். சிங்கள வெறியர்கள் இந்தியரசின் துணைக்கொண்டு.இன்னும் 50 ஆண்டுகளில் இதே போன்றொரு செயல் தமிழகத்திலும் வடமாநிலத்தவர்களும் சிங்களன் உதவியோடு நடக்காமல் இராது என்பதற்கு யாரேனும் உறுதி தர முடியுமா? ஈழம் ஒன்றுதான் நமக்கு பாதுகாப்பு இதை உணர்ந்தவர்கள் ஆதரவு திரட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jafar Sadique - RUWI,ஓமன்
24-மார்-201311:19:13 IST Report Abuse
Jafar Sadique ஒன்றை நாம் எப்போதும் வசதியாக மறந்துவிட்டோம். இங்க ஈழத்தமிழர் என்பது புலிகளை மையப்படுத்தி செய்யப்படுகிறது. புலிகளின் செயல்பாடுகளை வெறுக்கும் பொதுமக்கள் இதில் முழுமையாக பங்கெடுக்கவில்லை, அதை போராட்டக்காரர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. புலிகளை பொருத்தவரை அது மற்றொரு சர்வாதிகார அமைப்பாகவே இயங்கியதை எவரும் மறுக்க முடியாது. அது சிங்கள அரசாங்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை, சக மக்களான முஸ்லிம் தமிழர்களை விரோதியாக்கிக் கொண்டது , சக தமிழ் அமைப்புகளை அரவனைக்காதது மட்டுமல்லாமல் அவர்களை எதிர்க்காது அவர்களை அழித்தது என என்னற்ற தவறுகளை செய்தது. அவர்களின் வீரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதுமட்டுமல்ல அவர்களின் வீரத்திற்கு நிகரானவர்கள் சக காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ஒரு விவேகமற்ற, தொலைநோக்கு பார்வையற்ற சர்வாதிகார தலைமை காரணமாக அவர்களின் தியாகம் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விட்டது. இந்திய அரசாங்கம் என்பது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே நேரு குடும்பத்தின் அடிமையாகவே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தமிழராகிய நாம் வட இந்தியாவில் கலந்துரையாடுவதே இல்லை. அதோடு அவர்கள் ஆரம்பம் முதலே நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இலங்கை அரசாங்கம் தமிழர்களை எப்படி நடத்துகிறதோ அதைவிட ஒரு சில சதவிகிதம் கூடுதல் உரிமையை இந்திய அரசாங்கம் தமிழருக்கு தருகிறது . பெரியார் இலங்கை தமிழருக்கு கூறியதை போல நீயும் அடிமை நானும் அடிமை பின் எப்படி நான் உனக்கு உதவோது என்ற அவரின் வாக்கு நிஜமாகிறது.
Rate this:
Share this comment
Cancel
குமரி முத்து - Nagercoil,இந்தியா
24-மார்-201311:17:22 IST Report Abuse
குமரி முத்து ஈழ விடுதலைக்காக போராடிய மற்ற அற வழி தலைவர்களையெல்லாம் கொன்றொழித்து விட்டு, பின்பு இறுதி போரின் பொது அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி அதனால் அவர்களையும் கொலைக்கு கொடுத்து விட்டு, இறுதியின் தாங்களும் மாண்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை தலையில் தூக்கி வைத்து நடக்கின்ற போராட்டத்தை வரலாறு தெரிந்த ஒருவன் கூட ஆதரிக்க மாட்டான். போராடும் இந்த மாணவர்களிடம் சூர்யாவின் குழைந்தையின் பெயரை கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள். ஆனால் அமிர்தலிங்கம் யார் என்று கேட்டு பாருங்கள், ஒருவனுக்கும் தெரியாது. அது தான் உண்மை. இந்த போராட்டங்கள் மற்றவர்களின் பார்வையில் ஒரு தெளிவற்றதாகவே படுகிறது.
Rate this:
Share this comment
Maiuran Ar - Hatfield,பின்லாந்து
25-மார்-201302:51:41 IST Report Abuse
Maiuran Arவீடுக்கு ஒருவன் போராட வா என்று. ஈழ மக்களை தூண்டி விட்டு பின்பு JR ஜெயவர்த்தன விடம் பதவி வாங்கி கொண்டு கொழும்பில் பொய் ஒளிந்து கொண்ட அமிர்தலிகம் அரவளிதலைவர் அல்ல. இதை உங்கள் வசதி போல் மறைகதே, புலிகள் தீவிரவாதிகள் என்றால் அவர்களை ஆயுதம் பயிற்சி கொடுத்து தாம் ஆடிவிக்கும் பொம்மை ஆக்க நினைத்த இந்திய வும் தீவிரவாதி தான். பாதுகாப்பு வலயம் என அறிவித்து விட்டு அங்கே போன மக்களை திட்ட மிட்டே அழித்து விட்டு. மனித கேடயம் என்றும் கதை விட்டது இலங்கை. அவர்கள் ராணுவம் எடுத்த புகை படங்கள் மட்டு வெளிவராவிட்டால் இன்று அது ஒரு சாட்சிகள் அற்ற யுத்தமாக இருந்திருக்கும். ...
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
24-மார்-201310:59:14 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana இங்கே செந்தமிழ் கார்த்திக்கு எதிர்ப்பு கருது சொனவர்கள் ஏன் தங்களின் முகம் கட்டவில்லை ? இதை தான் பல ஆண்டுகளாக செய்து கொண்டு இருகிறிர்கள் ..அதனாலதான் தமிழனக்கு ஒரு அங்கிகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.சென்ற தலைமுறை ஒரு கோழை ,ஒரு சுயநலவாதி ...ஆனால் இன்றைய தலைமுறை பல சாதனைகளுக்கு சொந்தமானது ...இவர்கள் சாதித்து காட்டுவார்கள். நீங்கள் எல்லாம் குறை சொல்லியே செத்துபோவிர்கள் இதுதான் இன்றுவரை நடந்தூலது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை