Mulayam Singh Yadav slams 'sycophants' in UP govt | "சமாஜ்வாதி அரசுக்கு அமைச்சர்களால் கெட்ட பெயர்': சொல்கிறார் முலாயம்| Dinamalar

"சமாஜ்வாதி அரசுக்கு அமைச்சர்களால் கெட்ட பெயர்': சொல்கிறார் முலாயம்

Updated : மார் 25, 2013 | Added : மார் 23, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Mulayam Singh Yadav slams 'sycophants' in UP govt

லக்னோ: ""உ.பி.,யில், அமைச்சர்களும், அதிகாரிகளும், தங்களின் தவறான நிர்வாகத்தால், சமாஜ்வாதி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர். முதல்வர், அகிலேஷ் யாதவ், இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், கூறியுள்ளார்.
உ.பி.,யில், சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவின் மகன், அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சில மாதங்களுக்கு முன், பொதுக் கூட்டத்தில் பேசிய, முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் தலைமையிலான அரசின் நிர்வாகம் சரியில்லை என்றும், உ.பி.,யில், அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது என்றும், கண்டித்திருந்தார்.
இந்நிலையில், லக்னோவில் நேற்று நடந்த விழாவில், முலாயம் சிங் யாதவ் பேசியதாவது: உ.பி.,யில் அரசு நிர்வாகம் சரியில்லை. அதிகாரிகள், ஜால்ரா அடித்தே, காலத்தை ஓட்டுகின்றனர். அமைச்சர் களுக்கு, எப்படி நிர்வாகம் செய்வதென தெரியவில்லை. இவர்களின், தவறான நிர்வாகத்தால், சமாஜ்வாதி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். இதை அனுமதிக்க கூடாது. போலீஸ் ஸ்டேஷன்களும், வருவாய் துறை அலுவலகங்களும், ஊழலின் ஊற்றுக் கண்களாக உருவெடுத்து விட்டன. முதல்வர், அகிலேஷ் யாதவ் இந்த விஷயத்தில், மிகவும் கண்டிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தவறு நடப்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், நிர்வாகப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். இது தான், முதல்வரின் கடமை. அதிகாரிகளுக்கு பயம் ஏற்படாவிட்டால், அரசின் செயல்பாடு சரியாக இருக்காது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாதவரை, முதல்வர் பதவிக்கு தகுதியற்ற நபராக கருத வேண்டியிருக்கும். சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டவர்களை எல்லாம், மேடையில் காண முடியவில்லை. அமைச்சர்கள் தான், மேடைகளை ஆக்கிரமிக்கின்றனர். இவ்வாறு, முலாயம் சிங் யாதவ் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahanidhi Anantharoopan - Frankfurt,ஜெர்மனி
24-மார்-201314:35:01 IST Report Abuse
Mahanidhi Anantharoopan மக்கள் எப்பொழுதுமே வெற்றியாளர்களை மட்டுமே விரும்புகிறார்கள், அத்துடன் அவர்கள் கோழைகளாக இருக்க கூடாது, என்றும் நினைக்கிறார்கள். இப்பொழுது இருக்கும் நிலையில் உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கு மற்ற இரண்டு கட்சிகளும் ஆதரவு, மக்கள் நிலையில் இருந்து பார்த்தால் மூன்று கட்சிகளுமே ஒன்று சேர்ந்து ஆட்சி நடக்கின்றது என்று தான் பொருள். தற்பொழுது உள்ள நிலையில் இதை மொத்தமாக அறுவடை செய்ய போவது பி ஜே பீ தான். இதே நிலை தொடர்ந்தால் பி ஜே பீ பெரிதாக ஒன்றும் செய்யாமலே அறுபது தொகுதிகளுக்கு மேல் பெறும். இதில் நஷ்டம் முலாயம் அவர்களுக்கு தான்.
Rate this:
Share this comment
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
24-மார்-201316:34:16 IST Report Abuse
Hasan Abdullahஉபி அரசியல் தெரியாமல் பேசுகிறீர்கள்...
Rate this:
Share this comment
Mahanidhi Anantharoopan - Frankfurt,ஜெர்மனி
26-மார்-201313:40:45 IST Report Abuse
Mahanidhi Anantharoopanநீங்கள் கொஞ்சம் சொல்லி கொடுங்கள் தெரிந்து கொள்கின்றேன்....
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
24-மார்-201311:08:17 IST Report Abuse
கோமனத்தாண்டி என்ன சிறுபிள்ளை தனம்
Rate this:
Share this comment
Cancel
Kesavan Karthik - Tiruvannamalai,இந்தியா
24-மார்-201308:18:27 IST Report Abuse
Kesavan Karthik மிக சிறந்த அரசியல் வாதி
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
24-மார்-201308:01:17 IST Report Abuse
naagai jagathratchagan கெட்டவன் கெட்டிடில்...கிட்டிடும் ..ராஜ யோகம் ..."அதிகமாக சலிப்பவர் ..குப்பையைத்தான் சேர்ப்பார் .." எங்கோ கேட்ட பழமொழி
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
24-மார்-201307:44:19 IST Report Abuse
திராவிடன்  இங்கேயும் ஆரம்பித்துவிட்டது கலகம்...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
24-மார்-201304:28:46 IST Report Abuse
Thangairaja அடுத்தவங்க குறை சொல்றதுக்கு முன்னால நாம முந்திக்குவோம்னு தான்......இன்று காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்களுக்கு இவரும் ஒரு காரணம். நேர்மையும் அனுபவமுமிக்க அத்வானியை பாராட்டி பற்றி இவர் சொன்ன கருத்து இங்கு பதிக்கப்படவில்லை, நல்ல பிரதமராக அத்வானி இருப்பார் என்ற அவரது நம்பிக்கை....பரவலாக்கப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
24-மார்-201304:50:53 IST Report Abuse
Seshadri Krishnanதங்கை ராஜா, காங்கிரசின் அட்டூழியங்களுக்கு கருணாநிதியும் மிகமுக்கிய காரணம். இதையும் அழுத்தம் திருத்தமா பதிவு செய்யுங்க. நீங்க எப்ப பஜக ஆதரவாளரா????...
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
24-மார்-201300:27:29 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் அகிலேஷின் ஆட்சி மிகப்பெரிய ஏமாற்றம்........அவர் தந்தையே சொல்லுகிறார் என்றால், நாம எதுவும் சொல்ல வேண்டாம்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை