Pakistani Taliban threaten to assassinate ex-President Pervez Musharraf | "முஷாரப் நாடு திரும்பினால், நரகத்துக்கு அனுப்புவோம்!': தலிபான்கள் மிரட்டல்| Dinamalar

"முஷாரப் நாடு திரும்பினால், நரகத்துக்கு அனுப்புவோம்!': தலிபான்கள் மிரட்டல்

Updated : மார் 25, 2013 | Added : மார் 23, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Pakistani Taliban threaten to assassinate ex-President Pervez Musharraf

இஸ்லாமாபாத்: இன்று நாடு திரும்ப உள்ள, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, கொலை செய்யப் போவதாக, அந்நாட்டு தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரப். முன்னாள் பிரதமர், பெனாசிர் புட்டோ கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், நீதிபதிகளை சட்ட விரோதமாக கைது செய்த வழக்கும் அவர் மீது உள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, 2008ல் பதவி விலகிய இவர், பின், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் மாறி, மாறி தங்கி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானில், மே, 11ம் தேதி, பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், முஷாரப்பின், "பாக்., முஸ்லிம் லீக்' கட்சி பங்கேற்கவுள்ளது. அதனால், தேர்தல் பணிகளில் பங்கேற்பதற்காக, முஷாரப் இன்று நாடு திரும்புகிறார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் தலிபான்கள் சார்பில், நேற்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பேசியுள்ள தலிபான் பயங்கரவாதி, அட்னான் ரஷீத், "முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்பினால், தற்கொலைப் படையினர் மூலம் கொல்லப்படுவார். தற்கொலைப் படை வீரர்கள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் அடங்கிய போர்க்குழுவினர், முஷாரபை நரகத்துக்கு அனுப்ப, தயாராக உள்ளனர்' என, கூறியுள்ளார். முஷாரப் அதிபராக இருந்த போது, தலிபான்கள் மீது, கடும் நடவடிக்கை எடுத்ததால், அவர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
24-மார்-201313:21:14 IST Report Abuse
Baskaran Kasimani நரகத்தில் இருப்பவர்களுக்கு அது சொர்க்கமாக தெரிவது ஆண்டவனின் அருள்.
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
24-மார்-201300:25:33 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் இவரை எதுக்கு நரகத்துக்கு அனுப்ப வேண்டும்? அவரே நரகத்துக்குதானே வருகிறார்........தாலிபான்கள் இருக்கும் நாடு எப்படி சொர்க்கமாய் இருக்கும்?......எல்லோரையும் டப், டுப்புன்னு சுட்டால், நீங்க சுட அப்புறம் ஆட்களே இருக்காது......உங்களையே சுட்டுக்கனும்......
Rate this:
Share this comment
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
24-மார்-201301:19:46 IST Report Abuse
Selvaraj Sennaiappanஉண்மை தான்......
Rate this:
Share this comment
iyyan - chennai,இந்தியா
24-மார்-201302:53:55 IST Report Abuse
iyyan100 சதவீதம் உண்மை. மனுச்சனுன்களா அவர்கள்... காட்டு மிராண்டிகள்........
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
24-மார்-201309:23:09 IST Report Abuse
Pannadai Pandianநீங்க இப்படி எழுதினா ஹாசன் அப்துல்லாவுக்கு கோவம் வரும். அவரை கொவமூட்டாதீங்க, இல்லேனா அவரு காவி பயன்கரவாதம்னு விக்க ஆரம்பிச்சுடுவாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை