Action against Divakaran: Mannarkudi family in fear | திவாகரன் மீது மீண்டும் சுழன்றது "சாட்டை': கைது பீதியில் மன்னார்குடி பிரபலங்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சசிகலாவின் தம்பி திவாகரன், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால், "கைது பட்டியலில் நாமும் சிக்குவோமோ' என, மன்னார்குடியை சேர்ந்தவர்கள், பீதியில் உறைந்துள்ளனர்.


கடந்தாண்டு, வீடு இடிப்பு சம்பவத்தில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, சசிகலாவின் தம்பி திவாகரனை, கைது செய்தனர். கல்லூரியில் படிக்கும் பெண்ணின் உறவினரை மிரட்டியது உள்ளிட்ட, தொடர் வழக்குகள் காரணமாக, திருச்சி மத்தியச் சிறையில், திவாகரன் அடைக்கப்பட்டார். அதன் பின், ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், ரிஷியூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தமிழார்வனுக்கு, கொலை மிரட்டல் மற்றும் கொலை செய்ய முயன்ற வழக்கில், நேற்று முன்தினம் இரவு, திவாகரன், அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், திருச்சி மத்திய சிறையில்

அடைக்கப்பட்டார்.

"ரீ என்ட்ரி': தமிழக அரசின் வக்கீல் நவநீத கிருஷ்ணன், திவாகரனுடன் ஒன்றாக படித்தவர். திவாகரன் கைதுக்கு பிறகு, அவரது பதவி பறிபோகும் என்று எதிர்பார்த்த நிலையில், பதவி உயர்வாக, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவி கிடைத்தது, திவாகரன் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோல, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் இணை கமிஷனராக இருந்த தனபால், தமிழகத்தில் இதுவரை நடந்திராத வகையில், ஐ.ஏ.எஸ்., அல்லாத கமிஷனராக, முதல்முறையாக நியமிக்கப்பட்டார். இதுவும், திவாகரனை உசுப்பேற்றியது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, வரகூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும், உறியடி உற்சவம், மிகுந்த சிறப்பு வாய்ந்தது. அரசு தன்னிடம் கடைபிடிக்கும், "மென்மையான' நடவடிக்கையால், உற்சாகமடைந்த திவாகரன், திருவிழாவுக்குச் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க., கொடி கட்டிய கார்கள்

Advertisement

சென்றன. சில முக்கிய பிரமுகர்கள் புடைசூழ, திவாகரன், விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்தும் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சசி உறவினர் பீதி:
இதைக் கண்டு, மேலிடம் கோபத்தின் உச்சிக்கு சென்றதால், திவாகரன் மீது அடுத்த, "ரவுண்டு' கைது படலம் துவங்கியுள்ளது. கடந்தாண்டு, இது போல தலைமையின் கோபத்துக்கு ஆளானபோது, முதலில் கைது செய்யப்பட்டவர் திவாகரன் தான். அதன் பின்பே, ராவணன், சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் உறவினர்கள், அனுதாபிகள் கட்சியில் இருந்து, "கட்டம்' கட்டப்பட்டனர். இறுதியாக, சசிகலாவும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் திவாகரன் கைது செய்யப்பட்டுள்ளதால், அடுத்த கைது யாரோ என, சசிகலாவின் உறவினர்கள் பீதியடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
24-மார்-201312:49:37 IST Report Abuse
B Sivanesan அரசு அதிகாரம் தவறாக பயன்படுத்த கூடாது என்று இந்த அரசு செயல் பட்டால் அது பாராட்டப்பட வேண்டியதே..
Rate this:
Share this comment
BATMANABIN - paris,பிரான்ஸ்
27-மார்-201311:25:59 IST Report Abuse
BATMANABINஇந்த திவாகரன் போன்ற பாவிகளால் எத்தனை உண்மையான கட்சிகாரர்கள் பழிவாங்கப்பட்டு ,பதவி பிடுங்கப்பட்டு,கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பார்கள். இவர்கள் பணம் வாங்கிகொண்டு குறுக்கு வழியில் பதவி வாங்கி கொடுக்க ,பலிகிடா ஆகியது ஏழை தொண்டர்கள் அல்லவா .பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டம் இந்த மன்னார்குடி குடும்பத்தாலும் ,கருணாவின் திருவாரூர் குடும்பத்தாலும் சிறுமை அடைந்து காணபடுகிறது....
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
24-மார்-201311:06:53 IST Report Abuse
amukkusaamy ஐயோ ஐயோ வடைபோச்சே ...எல்லாரும் நல்லா பாத்துக்குங்க நானும் ஜெயிலுக்கு போறேன்....இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா ....நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு.....ஐயோ ஐயோ தனியா பொலம்பற அளவுக்கு கொண்டு விட்டுடீயலே ..அம்மா தயவு செஞ்சு இதே மாதிரி அதிரடியா கொஞ்சம் கரெண்டும் தாங்கம்மா ....தூக்கத்துல கண்ட கண்ட கனவும் வருது...
Rate this:
Share this comment
Cancel
sung mong ku - chennai,இந்தியா
24-மார்-201310:26:56 IST Report Abuse
sung mong ku கபட நாடகம்
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
24-மார்-201309:53:03 IST Report Abuse
naagai jagathratchagan வேட்டையாடு ... விளையாடு ...விருப்பம் போல ஆட்டம் போடு ...எதற்கும் ஒரு எல்லை உண்டு ...கட்டளை போடும் மனிதரை எண்ணிப்பார்
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
24-மார்-201308:17:33 IST Report Abuse
itashokkumar ஏதாவது வேண்டுதல் அல்லது பரிகாரமா இருக்குங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.