Madurai students discovered a divice which sensor ground water level | ரோட்டின் மேடு, பள்ளத்தை கண்டறியும் "சென்சார்': மதுரை மாணவர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டின் மேடு, பள்ளத்தை கண்டறியும் "சென்சார்': மதுரை மாணவர்கள் அசத்தல்

Added : மார் 24, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Madurai students discovered a divice which sensor ground water level

ரோட்டின் மேடு, பள்ளங்களை கண்டறியும் "சென்சார்' கருவியை கண்டுபிடித்து உள்ளனர், மதுரை கே.எல்.என்., தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாலமாடசாமி, நிர்மல், யஷ்வந்த், பாண்டி, ராகுல் குமார், வெங்கடேஷ் பாபு.

கண்டுபிடிப்பு குறித்து, அவர்கள் கூறியதாவது: சாலை அமைப்பதற்கு முன் பள்ளம், மேட்டை "டம்பி லெவல்' "டெலஸ்கோப்' கருவி மூலம் அளவிட வேண்டும். இந்த அளவீடுகளை "கிராப்' வடிவில் கொண்டு வந்து, அதன்பின் பள்ளம், மேட்டை கணக்கிடுவது தான் தற்போதைய முறை. மேலும் குறிப்பிட்ட நீளத்திற்கு ஒருமுறை, மீட்டர் அளவில் பள்ளம், மேடு கணக்கிடப்படும். நாங்கள் கண்டுபிடித்த "சென்சார்' மூலம், ரோட்டின் மேடு, பள்ளங்களை தானாக அளவிட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும். "கிராப்' அமைத்துத் தருவதன் மூலம், மேடு, பள்ளங்களை மி.மீ., அளவு வித்தியாசத்தில் துல்லியமாக கண்டறியலாம். அதற்கேற்ப பள்ளமான இடத்தை சரிசெய்யலாம். புதிதாக ரோடு அமைப்பது மட்டுமின்றி, ஏற்கனவே அமைத்த ரோட்டில் பள்ளம் இருந்தாலும் கண்டறியலாம். நாங்கள் வடிவமைத்துள்ள "சென்சார்' கருவியை, காரின் அடியில் பொருத்தி, ரோட்டில் சீரான வேகத்தில் செல்லும் போது, அளவுகள் பதிவு செய்யப்படும். போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் பட்சத்தில், "ஹெலிகாப்டர் மூலம் அளவெடுக்கலாம். இதில் கேமராவையும் இணைக்கலாம். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு சரிபார்க்க, வயர்லெஸ் கருவி, கம்ப்யூட்டர் முறையிலும் "சென்சாரை' அமைக்கலாம்; நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும், என்றனர். தொடர்புக்கு: 77087 88363.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
27-மார்-201307:12:57 IST Report Abuse
Arvind Bharadwaj கடந்த மாதம் வடஅமெரிக்காவில் பாஸ்டன் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) சென்றிருந்த போது அங்குள்ள கண்காட்சியகத்தில் அக்கல்லூரி மாணவர் ஒருவர் இதே போன்றதொரு இயந்திரத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் இயக்கிக் காட்டி அசத்தினார். ஆனால், அந்த மாணவரின் கண்டுபிடிப்பல்ல அது, லெகோ என்கிற புகழ்பெற்ற விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. மதுரை மாணவர்கள் இதையே தாங்களாகவே வடிவமைத்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.
Rate this:
Share this comment
Cancel
M RAMAN - Vellore,இந்தியா
26-மார்-201314:18:34 IST Report Abuse
M RAMAN தம்பிகளே, உங்கள் கண்டுபிடிப்புக்கள் மேலும் தொடர வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
26-மார்-201306:56:34 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க சாலை போடுகின்ற கான்றாட்டுகாரர்களின் கண்களில் படாமல் இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Dominic Palraj - Bangalore,இந்தியா
25-மார்-201315:43:48 IST Report Abuse
Dominic Palraj மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
நடுநிலைவாதி - erode,இந்தியா
25-மார்-201315:31:08 IST Report Abuse
நடுநிலைவாதி  பள்ளம் மேடு இல்லாத சாலையில் ...எங்கயாவது பள்ளம் மேடு உள்ளதா என கண்டுபிடிக்க இதை பயன்படுத்தலாம் ...நம்மூரில் எல்லா சாலையும் பள்ளம் மேடுதான் .....இவர்கள் இந்த கண்டுபிடிப்பை வெளிநாட்டிற்கு சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
25-மார்-201314:29:50 IST Report Abuse
Mynuddeen Ibrahim வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
24-மார்-201313:31:22 IST Report Abuse
Ashok ,India வாழ்த்துக்கள் . என்னதான் நவீன கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் நம்ம அரசு போடும் ஒரு சில தூறல் மழைக்கே ரோடுகள் பள்ளமாகி விடுகிறதே.......அந்த ரகசியத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
24-மார்-201313:25:05 IST Report Abuse
chinnamanibalan கமிசன் பெற்று போடப்படும் மோசமான சாலைகளை கண்டறிய இந்த கருவி பயன்படுத்தப்பட்டால் மிகவும் பாராட்டிற்குரியது...
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
24-மார்-201312:03:59 IST Report Abuse
CHANDRA GUPTHAN சபாஷ் மாணவர்களே சபாஷ் . இன்னும் பல ஆராய்சிகளை செய்து மேன்மேலும் பெயரும் புகழும் அடையவேண்டும் . வாழ்த்துக்கள் . தொலைதூரத்தில் இந்தியா ஒளிர ஆரம்பித்துள்ளது .
Rate this:
Share this comment
Cancel
S. Saravanan - Karaikudi,இந்தியா
24-மார்-201309:30:36 IST Report Abuse
S. Saravanan தம்பிகளே, வானம் உங்கள் வசப்படட்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை