Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013,23:21 IST
கருத்துகள் (96)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், தி.மு.க., வெளியேறிய பின், அக்கட்சியின், அவசர செயற்குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று கூடுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியதற்கான காரணங்கள், இலங்கை பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை, லோக்சபா தேர்தலில், புதுக் கூட்டணி வியூகம் குறித்து, இன்றைய கூட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட உள்ளது.
அதிருப்தி அழகிரி: மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். செயற்குழுவில், அவர் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திண்டிவனம் பொதுக்கூட்டம் ரத்து தொடர்பாக, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பினருக்கும், மாவட்டச் செயலர், பொன்முடி தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு, இன்று முடிவு தெரிய வரும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்னையில், தி.மு.க., கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., விலகியது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., விலகியதில், அழகிரிக்கு உடன்பாடு இல்லை. அவர், தன் பதவியை ராஜினாமா செய்த பின், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களிடம், "காங்கிரசுடன், தி.மு.க., நட்பாகவே இருக்கும்' என, தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியதற்கு, ஸ்டாலின் காரணம் என்பதால், அவர் மீது, அழகிரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். திண்டிவனத்தில், தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.
வரவேற்புக்கு திட்டம்:
வன்னியர், நாடார் சமுதாயத்தினர் இணைந்து, கனிமொழிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். மத்திய அரசிலிருந்து, தி.மு.க., விலகலுக்கான காரணத்தை, விளக்கிப் பேச கனிமொழி திட்டமிட்டிருந்தார். இதனால், அக்கூட்டம், தி.மு.க.,வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி

இருந்தது. அக்கூட்டம் நடத்துவது தொடர்பாக, மாவட்டச் செயலர், பொன்முடியிடம் அனுமதி பெறவில்லை என்ற புகார், நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர், அன்பழகன், ஸ்டாலின் ஆகியோரிடம் கூறப்பட்டது. கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில், கனிமொழி பங்கேற்பதில் என்ன தவறு என, கனிமொழிக்கு ஆதரவாக கருணாநிதி, அன்பழகன் ஆகிய இருவரும் பேசியுள்ளனர். ஆனால், பொன்முடி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. "கனிமொழி அக்கூட்டத்தில் பங்கேற்றால், கூட்டம் நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார் பொன்முடி.
பொன்முடி தரப்பு: இதையடுத்து, பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் திட்டமிட்டு, கனிமொழியை புறக்கணிக்கும் நடவடிக்கையை, பொன்முடி தரப்பு மேற்கொண்டுள்ளது என்ற புகாரை, கனிமொழி ஆதரவாளர்கள் எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, இன்று நடக்கும் செயற்குழுவில் முடிவு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகிய மூவருமே ஒற்றுமை இல்லாமல் செயல்படுவதால், கருணாநிதி மன வேதனை அடைந்துள்ளார். அதனால், அவர்கள் மூவரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த, தொ.மு.ச., கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், "யாரையும் எதிரியாகக் கருதாமல், அன்போடு பழகுங்கள்; ஒற்றுமையாக இருங்கள். நமக்குள் பிரிவினை வேண்டாம்; பிரிவினை பெருவினையாகி நம்மையே அழித்து விடும்'

Advertisement

என்றார். இது, அதிருப்தியாளர்களுக்கு கூறப்பட்ட அறிவுரை என, கட்சித் தொண்டர்களிடம் பேசப்படுகிறது.
250 பேர்:
இச்சூழ்நிலையில், தி.மு.க., செயற்குழுக் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் கூடுகிறது. கருணாநிதி தலைமை வகிக்கிறார். செயற்குழு உறுப்பினர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என, 250 பேர் பங்கேற்க உள்ளனர். அதில், கனிமொழியும் பங்கேற்கிறார். ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள அழகிரி, செயற்குழுவில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பங்கேற்றால், அவர் தன் கருத்தை வெளிப்படையாக வைப்பாரா என்பதும் இன்று தெரியும். லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புதுக் கூட்டணி அமைக்கலாமா? தேசிய அளவில், பா.ஜ., அணியில் தி.மு.க., இடம் பெறலாமா? என்பது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (96)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
26-மார்-201310:55:39 IST Report Abuse
MOHAMED GANI "கனிமொழி அக்கூட்டத்தில் பங்கேற்றால், கூட்டம் நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார் பொன்முடி. - கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் கூறியபிறகும் பொன்முடி இவ்வாறு தெரிவித்திருந்தால், தலைமையின் கட்டுப்பாட்டை மீறுகிறார் என்பதுதானே அர்த்தம். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கனிமொழி அந்தக் கூட்டத்தை ரத்துசெய்துள்ளார். பொன்முடி போன்றவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறுநில மன்னர்கள்போல நடந்துகொண்டதால்தான் கடந்த தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. இதுபோல பல ஆண்டுகளாகத் தாங்களே மாவட்டத்தில் கோலோச்சவேண்டும் என்று நினைத்து செயல்பட்டு தொண்டர்களையும் அரவணைக்காமல் செயல்படுபவர்களுக்கு ஸ்டாலினும் ஆதரவளிப்பது தி.மு.க கட்சிக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
John - Josh,பிரான்ஸ்
25-மார்-201320:32:12 IST Report Abuse
John Enna oru kevalamana arasiyal ethu...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
25-மார்-201319:04:45 IST Report Abuse
Sundeli Siththar முதலில் சகோதர சண்டையை கருணாநிதி அவர்கள் மூவரையும், மாறன் போன்றோரையும் அழைத்து தீர்த்து வைக்கவேண்டும். இல்லையெனில் திமுக சிதறும். இது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல. வலுவான எதிர்கட்சியாக திமுக தொடர்ந்து இருந்தால்தான் அடுத்த 10 வருடங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
25-மார்-201318:42:45 IST Report Abuse
elzhalan மரியா, இப்ப என்ன சொல்ல வராரு அழகிரி. வைகோ மாறிதான் உள்குத்து வேலை செய்ரது மாறி சொல்றாரு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
25-மார்-201316:34:14 IST Report Abuse
K.Balasubramanian செயல் வீரர் இல்ல செயற்குழு என்ன செய்ய போகிறதோ ?திருமங்கலம் பார்மூலா புகழுக்கு களங்கம் வரக்கூடாது .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
25-மார்-201313:09:03 IST Report Abuse
vandu murugan உடம்பு மட்டும் நல்லா இருந்தா வந்து கலக்கி புடுவேன் கலக்கி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
25-மார்-201312:04:51 IST Report Abuse
Vaal Payyan தாத்தாவுக்கு ஒரு ரோசனை ... தமிழ் நாட்ட ரெண்டா பிரிங்க ... ஒரு பகுதி பேரு சிலம்பு தமிழ் நாடு ... இன்னொரு பகுதி பேரு சீவக தமிழ் நாடு ... ஒண்ணுக்கு முதல்வர் தளபதி ... இன்னொன்றுக்கு முதல்வர் அஞ்சா நெஞ்சன் ... ஒட்டு மொத்த பெண்களுக்கு பாதுகாப்பு தர கனி துணை முதல்வர் .. எல்லா ப்ரொப்லெம் தீர்ந்தது ... மரியா அல்போன்சோ கை தட்டும் ஓசை என் காதுகளில் விழுகிறது ... மறக்காம khusboovirkku கொள்கை பரப்பு செயலாளர் பட்டமும் தர வேண்டும் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
25-மார்-201311:19:26 IST Report Abuse
JAY JAY தமிழகத்தில் அணைத்து கட்சிகளுமே குழப்பத்தில் தான் உள்ளன... 1 . முதலில் பாஜகவை பார்ப்போம்.. பாஜகவிற்கு தமிழகத்தில் கொடிக்கம்பு இன்னும் கிடைக்கவில்லை, தாமரையை படர வைக்க,.. ஜெயலலிதாவே பிரதமாராக வேண்டும் என்று அவரது கட்சியினர் உசுப்பேத்தி விடுவதால், ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி சேர தயங்குகிறார்.. மோடி பிரதமர் என்ற நிலை வந்தால், பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக இருந்தாலும் , திமுக, சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் உள்ளதால், ... பாஜகவின் நிலை தமிழகத்தை பொருத்தவரை திரிசங்கு சொர்க்கம் தான் வழக்கம் போல... 2 . பாமக வீறாப்புடன் காற்றுள்ள வரையிலும் கழகங்களுட கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டார்... அனால் அவர் தேர்தல் நேரத்தில் அவர் பேச்சையே அவர் கேட்க மாட்டார் , என்பது முந்தய வரலாறு என்பதால், பாமக் யாருடனும் கூட்டணி வைக்கலாம். அல்லது காங்கிரசுடன் இனைந்து ஒரு PACKAGE போல தொகுதி உடன்பாடு , மற்ற கட்சிகளுடன் செய்து கொள்ளலாம்.. 3 . தேமுதிக - இப்போதைக்கு இவர் தான் KING MAKER என்பது வேதனையான உண்மை.. 8 % லம்பான ஓட்டுக்களுக்கு சொந்த காரர்... காங்கிரஸ் இவரை 50 - 50 என்ற பாங்கில் வளைத்து போட்டால் கூட , காங்கிரசுக்கு லாபம் தான்... காங்கிரஸ் -பாமக 50 % இடங்கள், தேமுதிக 50 % இடங்கள் என்ற ரீதியில் போட்டியிட்டால் கணிசமான ஓட்டுகளை பெற்று , அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு உதவலாம்.. 4 . அதிமுக-... தேமுதிகவை கழட்டி விட்டு விட்டு, கூட்டணிக்காக அல்லாடுவது வெளிப்படையாக தெரிகிறது... மின்வெட்டு , குடிநீர் பிரச்சினை, போன்றவை அதிமுக எத்தகைய கூட்டணி வைத்தாலும் அதனை கவிழ்த்து விடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.. .. இலங்கை பிரச்சினையை வைத்தெல்லாம் , மக்கள் ஓட்டு போடுவார்கள் , என்று அதிமுக கருதுமேயானால் , நிச்சயம் அது தப்பாகவே முடியும்.. பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி பிரச்சினையை சமாளிக்கலாம் , என்று அதிமுக கருதுமேயானால், சுற்றியுள்ள 3 மாநிலமும் காங்கிரஸ் வசம் இருக்கபோவதால் அதுவும் கிடைக்காது... ஆகமொத்தம் ஆளும் கட்சியாக இருப்பதால் அதிமுகவிற்கு, கூட்டணி கணக்குகள் உதவாது... 5 . காங்கிரஸ் ... இந்த கட்சியே பிளவு படலாம்.. GK வாசன் மீண்டும் தமாகா ஆரம்பித்து , ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தால் கூட , அதிமுக கூட்டணி மின்வெட்டு பிரச்சினை இருந்தால் ஜெய்ப்பது கஷ்டம்.. ஆனால் காங்கிரசே புத்திசாலிதனமாக GK வாசனை காங்கிரஸ் இல் இருந்து தனியாக கட்சி ஆரம்பிக்க மறைமுகமாக சொல்லி, அவர் திமுக, மற்றும் தேமுதிக வுடன் [ மூப்பனார் , விஜயகாந்த் பழைய நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் ] கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம்.. .. அந்த கூட்டணி இலங்கை பிரச்சினையை சமாளித்து விடும்..40 லும் வெற்றி கூட பெறலாம்.. அப்படி பெறப்படும் அணைத்து தொகுதிகளும் தேர்தலுக்கு பின் MORE OR LESS காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் கூடுதல் தொகுதிகள் தான்.. திமுகவை இப்போது உடைத்தால் அது காங்கிரசுக்கு தான் இழப்பு,.. அதனால் திமுகவை , அழகிரியை வைத்து இப்போதைக்கு உடைக்க காங்கிரஸ் முயற்சி பண்ணாது.. ஒருவேளை காங்கிரஸ்- அதிமுக கூட்டணி [ . 0001 % சான்ஸ் ] அமைந்தால் மட்டுமே, காங்கிரஸ் , அழகிரி துணையுடன் திமுகவை உடைக்க முயற்சிக்கும்... 6 . திமுக - ஆயிரம் கூறினாலும் திமுக மிக சரியான நேரத்தில் சுதாகரித்து கொண்டு காங்கிரசை கழட்டி விட்டுள்ளது... காங்கிரஸ் தன மீது நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் உள்ளது திமுக...ஏனென்றால் தேர்தலுக்கு பின் திமுக மீண்டும் , காங்கிரஸ் கூட்டணிக்கு தான் செல்லும்.. அதனால் திமுக் மீது கை வைத்தாலோ, அல்லது திமுகவை உடைத்து பலவீனபடுதினாலோ, அது காங்கிரசுக்கு தான் நட்டம் என்பதை அரசியல் ? சாணக்கியர் கருணாநிதி [ இதற்கெல்லாம் அவரது மூளை நன்கு வேலை செய்யும் ] உணர்ந்து , மிக சாமார்த்தியமாக காய் நகர்த்துகிறார்... மின்வெட்டு பிரச்சினை நீடித்தால், திமுக - தேமுதிக- கம்யுனிஸ்ட் கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயம்.. இதில் GK வாசன்தமகா ஆரம்பித்து சேர்ந்து கொண்டால் 100 % வெற்றி... இந்த வெற்றி மறைமுக காங்கிரஸ் வெற்றி என்பதால், காங்கிரஸ் திமுகவின் மீது ACTION எடுக்காது என்பதே திமுகவின் துருப்பு சீட்டு.. இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் தமிழக ஆரசியல் செல்கிறது... காங்கிரஸ் மீண்டும் தென்னிந்தியாவில் மிக அதிகமான இடங்களை கைப்பற்றும்.. ஏனென்றால் இப்போதே ஜெகனுடன் ஆந்திராவில் ரகசிய பேச்சு வார்த்தையை காங்கிரஸ் நடத்தி கொண்டு உள்ளது.. விஜயம்மாவை , [ ஜெகன் அம்மா ] உடனேயே முதல்வராக்க நடவடிக்கை எடுக்கபட்டால் , அதற்க்கு ஜெகன் ஒத்து கொண்டால் , ஆந்திராவை மீண்டும் கிட்டத்தட்ட வளைத்து போட்டால் போன்றது தான்.. அதே போல தமிழகத்தில் ஜெயலலிதா , " மோடி " பிரதமராக ஆதரவு தெரிவித்து , மோடியுடன் கூட்டணி வைத்து கொண்டால், தேர்த்தல் சமயத்தில் " மோடி " அலை வீசினால், ஜெ - மோடி கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது..ஆக மொத்தம் தென்னிந்தியாவில் காங்கிரசின் எதிர்காலம் இரண்டு " ஜெ " க்கள் கையில் உள்ளது.. ஓன்று தமிழகத்து ஜெ .. இன்னொன்று ஆந்திரத்து ஜெ [ ஜெகன்]. இந்த இரண்டு ஜெ க்களும் சொதப்பினால், காங்கிரசுக்கு " ஜேஜே " தான்...
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
25-மார்-201311:07:34 IST Report Abuse
Vel எங்க தாத்தா, இப்போ போய் பிரிவினை, பெருவினை அப்புடின்னு புலம்புராரு அவருக்கு யாரோ செய்வினை வச்சிட்டாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
25-மார்-201310:50:35 IST Report Abuse
பட்டிகாட்டான்   இனிமே நீ கலந்துகிட்டா என்ன ....... கலந்துக்கலேன்னா என்னா? ....... தலைக்கு மேல வெள்ளம் போயாச்சி ........ போ . போயி பழயபடி வீடியோ கடை ஆரம்பிக்க முடியுமான்னு பாரு .........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.