2G scam: A Raja accuses Attorney General Vahanvati of telling untruths | அட்டர்னி ஜெனரல் மீது "மாஜி' அமைச்சர் ராஜா பாய்ச்சல்: "2ஜி' விவகாரத்தில் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு| Dinamalar
Advertisement
அட்டர்னி ஜெனரல் மீது "மாஜி' அமைச்சர் ராஜா பாய்ச்சல்: "2ஜி' விவகாரத்தில் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், வாகன்வதி, என் மீது, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்போதைய வெளியுறவு அமைச்சர், பிரணாப் முகர்ஜிக்கும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது' என, மத்திய தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர், ராஜா, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு (ஜே.பி.சி.,) அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., அப்போதைய, தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட, பலரை கைது செய்தது.இவர்கள் அனைவரும், தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுவான, ஜே.பி.சி.,யும், விசாரித்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜா, ஜே.பி.சி.,யில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.


17 பக்கங்களை உடைய, இந்த அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமங்கள் வழங்கும் கொள்கை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு, ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.


உண்மைக்கு மாறானது: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இது தொடர்பாக, 2007, நவ., 2ல், கடிதம் எழுதினேன். அதே ஆண்டு, நவம்பரில், அப்போதைய வெளியுறவு அமைச்சரும், அமைச்சரைவை குழு தலைவருமான, பிரணாப் முகர்ஜியுடனும், ஆலோசித்தேன். புதிய உரிமங்கள் வழங்குவது, கூடுதலாக உள்ள ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்த விவாதம், இந்த சந்திப்பில் நடந்தது. தற்போதைய, அட்டர்னி ஜெனரலும், ஒதுக்கீடு நடந்த காலத்தில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தவருமான, வாகன்வதி, ஜே.பி.சி.,யில், எனக்கு எதிராக, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். "2ஜி' உரிமம் வழங்குவது தொடர்பான, பத்திரிகை குறிப்பு, கடைசி நேரத்தில், என்னால் (ராஜா) திருத்தப்பட்டதாக, அவர் கூறியுள்ளார். கடந்த, இரண்டு ஆண்டுகளாக, இது குறித்து பல்வேறு கோர்ட்டுகளில் நடந்த விசாரணைகளில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத, வாகன்வதி, இப்போது திடீரென, இந்த புகாரை தெரிவித்து உள்ளார்.


தவறான வாதம்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2007, டிச., 26ல், வாகன்வதி தயாரித்த குறிப்புகளின் அடிப்படையில், பிரணாப் முகர்ஜியும், ஒரு குறிப்பை தயார் செய்து, அந்த இரண்டு குறிப்புகளையும், பிரதமருக்கு அனுப்பி வைத்தார். இதேபோல், பிரணாப் முகர்ஜியும், வாகன்வதியும் அளித்த குறிப்புகளின் அடிப்படையில், நானும் ஒரு குறிப்பை தயார் செய்து, அதே தேதியில் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், தனக்கும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, வாகன்வதி தற்போது கூறியுள்ளார். இது தவறான வாதம். பிரணாப் முகர்ஜிக்கு, அவர் அனுப்பிய குறிப்பில், ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவது குறித்த, அனைத்து விஷயங்களும் இடம் பெற்றுள்ளதே, இதற்கு சாட்சி. இவ்வாறு, அறிக்கையில், ராஜா தெரிவித்து உள்ளார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201313:22:39 IST Report Abuse
Pugazh V அபாண்டமாய் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தன்னிலை விளக்கம் சொல்ல அனுமதிக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் பார்லிமென்ட் கூட்டுக் குழுவும், சில அதிகாரிகளும் செயல்படுவது ஜனநாயக விதிக்குட்பட்டது தானா? நடந்தவை என்ன என்று இரு தரப்பினரையும் விசாரிக்காமல், ஒரு தலைப் பட்சமாக சில முடிவுகளுக்கு வரலாமா? ராஜா சொல்ல விழைவதைக் கேட்க வேண்டாமா? அநியாயம், அக்கிரமம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201313:19:21 IST Report Abuse
Pugazh V தமிழனைப் பொறுத்தவரை //சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்// என்பது கேவலமான விதி. வேறு என்ன சொல்ல? இதே அட்டர்னி ஜெனெரல் ஆகாசத்திலிருந்து நேரே குதித்தவரோ/ பொய்யே சொல்ல மாட்டாராம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201313:15:08 IST Report Abuse
Pugazh V ஜே பி சி முன் ராஜா ஆஜராகவும், விளக்கங்கள் அளிக்கவும் அனுமதி கேட்டும் மறுக்கும் போதே தெரிந்து விட்டது, இது சில சதிகார வட இந்தியக் கும்பலின் பெரு தலைப் பட்சமான அறிக்கை, விசாரணை என்று. ஆனால் நம் மாநிலத்தவரே வட இந்தியனின் வாய் கூசாமல் சொல்லும் பொய்களுக்கு அச்சாரம் கொடுத்து விடுவார்கள். ராணுவ மந்திரி அந்தோனி சொல்கிறார், // ஹெலிகாப்டர் விவகாரத்தில் பலரும் பணம் அடித்துவிட்டனர், ஆதாரங்கள் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை// என்று. விசாரணைக்கு முன்பே மந்திரி தீர்ப்பு சொல்லியிருக்கிறார், பலரும் பணம் சுருட்டிவிட்டதாக. இது பற்றி ஊடகங்கள் உட்பட யாரும் எதுவும் பேசாதது ஏனோ? அந்தோனி - தமிழனோ, ஹிந்துவோ அல்லாதது தான் காரணமா? அது எப்படி சார், குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றைக் கேட்காமல், பதிவு செய்யாமல் ஒரு விசாரணையை ஒரு குழு நடத்தி, தீர்ப்பு அறிக்கையும் சமர்ப்பிக்கும்? இது என்ன விதத்தில் நியாயம் ? ஏற்றுக் கொள்ளவே முடியவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
25-மார்-201305:49:22 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நைனா, இப்போ கூட்டணி நிர்பந்தம் எதுவும் கடயாது.... வாயை பொத்திகிட்டு சும்மா இரு... இல்லைனா... நோண்டி நொங்கு எடுத்துடுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
25-மார்-201305:17:19 IST Report Abuse
adithyan இவனும் வக்கீல். அவனும் வக்கீல். இதை பற்றி விவாதிக்க போனையே, அப்போது நடந்ததை எழுத்தில் பதிவு செய்திருக்கிறாயா. இல்லையானால் உனக்கு அப்போது அது சௌகரியமாக இருந்திருக்கும். இப்போது கத்தி என்ன பயன்.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
25-மார்-201305:08:39 IST Report Abuse
Samy Chinnathambi இந்த அறிவு காய்கறி மண்டி வச்சிருக்கிரவனுக்கு எல்லாம் ஸ்பெக்ட்ரம் விக்கும்போது வந்து இருக்கணும்....
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
25-மார்-201305:04:53 IST Report Abuse
Panchu Mani ராசாவோட "ப்ரீ ரோமிங்" கட் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
25-மார்-201303:21:05 IST Report Abuse
Baskaran Kasimani அட்டர்னி ஜெனெரல் என்ன திமுக காரரா - கண்டமேனிக்கு பொய் சொல்ல? அவர் அரசாங்கத்தின் முக்கிய அங்கம். உண்மையை சொல்ல வேண்டிய கடமைப்பட்டவர். இதே கருத்தை நீதிமன்றத்தில் ஏன் இராஜா சொல்லவில்லை? அப்படி சொல்லி இருந்தால் அங்கேயே இராஜாவின் பல்லை நீதிபதி பிடுங்கி இருப்பார். இராஜாவின் இந்த கருத்து கண்டனத்துக்கு உரியது. இதுவே ஜாமீனை ரத்து செய்ய போதுமானது.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
25-மார்-201303:11:17 IST Report Abuse
Sekar Sekaran தகவல் தெரிவிக்கப்பட்டது உண்மைதான்..ஒதுக்கீடு செய்வதாக..அனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை..திடீர் கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்ட விதம்..காலையில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது...மாலையில் பல்லாயிரம் கோடிகளில் பங்கு ஒதுக்கீடு..அதுதானே முறைகேடு எனப்படுவது..அதனால்தானே ஊழலில் உச்சம் தொடும் அளவுக்கு சுருட்டிக்கொள்ள முடிந்தது. ராசாவின் வாதம் இமயத்தையே சோற்றில் மறைக்க பார்க்க முயலும் செய்கை. மக்கள் மறதியானவர்கள் என்பதாய் நினைத்து திகார் பயணம் நோக்கி பயந்து....
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
25-மார்-201302:23:00 IST Report Abuse
Vettri பிரதமர் அலுவலகத்துக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் தெரிந்து நடந்ததா இல்லை தெரியாமல் நடந்ததா என்பதை விட அலைகற்றை ஒதுக்கிட்டில் பலன் அடைந்தவர்களை பற்றி பேசுங்கள். அவரு பொய் பேசுறாரு இவரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுறாரு என்று சொல்லும் உண்மை விளம்பியான நீங்கள், பெற்றதையும் பிரித்ததையும் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்