College students confused about the time of reopen? | கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

Added : மார் 24, 2013 | கருத்துகள் (16)
Advertisement
College students confused about the time of reopen?

சென்னை: மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 9ம் தேதி, லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம், கலை கல்லூரிகளும், கடந்த, 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகளுக்கு, கடந்த, 18ம் தேதியும் காலவரையற்ற விடுமுறையை அரசு அறிவித்தது. கல்லூரி விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி தேர்வுகளும், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டும், மாணவர்கள் ஒன்றிணைந்து, அமைப்புகளை உருவாக்கி, கடந்த, 14 நாட்களாக போராட்டங்கள் செய்தனர்.
இந்நிலையில், நேற்று மாணவர்கள் சார்பில் எந்தவித போராட்டங்களும் நடைபெறாத நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, எஸ்.எம்.எஸ்., மூலம், மாணவர்களிடையே, பரபரப்பாக செய்தி பரவியது. உயர்கல்வி துறை தரப்பில், கல்லூரி திறப்பு குறித்து நேற்று வரை, எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், எஸ்.எம்.எஸ்., குழப்பத்தால், இன்று கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து உயர் கல்லூரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூலம், மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்து செய்திகள் சேகரிக்கப்பட்டு, உயர்கல்வி துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும், மாணவர்களின் போராட்ட நிலவரங்களை, உயர்கல்வி துறை விசாரித்து வருகிறது. மாணவர்களின் போராட்டங்கள் தணிந்துள்ள நிலையில், கல்லூரி திறப்பு குறித்து, உயர்கல்வி துறை விவாதித்து, இன்று முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Raguraman - Sungai Petani,மலேஷியா
25-மார்-201314:38:23 IST Report Abuse
Raman Raguraman if the lessons are taught for whole sessions,students wont score .Imagine already ample days have been spoiled. Student you need to breath for you. Go and att the classes.Bu cutting the classes,disturbing the tem you can not solve an international problem.
Rate this:
Share this comment
Cancel
T K Ravichandran - Tirupattur,இந்தியா
25-மார்-201314:11:22 IST Report Abuse
T K Ravichandran மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்காமல் வேறு வடிவில் போராட்டங்களை நடத்துவது அனைவருக்கும் நல்லது. மாணவர் போராட்டங்களுக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு உள்ளது. ஆட்சி யாருக்கு என்று முடிவு செய்யும் தேர்தல் வாக்கு வங்கியாக அவர்கள் அமைந்து தமிழீழம் மட்டுமின்றி வேறு பல நல்ல கோரிக்கைகளை முன் வைத்து செயல் படவேண்டும். ஆனால் எந்த அரசியல் சாயமும் கொள்ள வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
25-மார்-201311:06:29 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar கல்லூரிகளை மாணவர்கள் நலம் முன்னிட்டு அரசு கல்லூரிகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் கட்சிகள் மாணவர்கள் அமைப்புக்கள் தான் போரட்டங்களில் ஈடுபடுகிறது இவர்கள் எந்த கல்லூரிகளிலும் படிப்பதில்லை.., பொதுமக்கள் பிள்ளைகள் மாணவர்கள் போரட்டங்களில் ஈடுபடுவதில்லை ஏற்கனவே மாணவர்கள் போரட்டங்களில் ஈடுபட்டு அவஸ்தை பட்ட பெற்றோர்கள் பிள்ளைகள் கூட போராட்டங்களில் ஈடுபட வருவதில்லை..,அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்புக்கள் தான் இதற்க்கு காரணம் இவற்றை கலைக்க அரசு உதவிட வேண்டும் உத்திரவு இடவேண்டும் இவைகள் செய்யும் குறும்புகள் தான் போராட்டம் என்பதை அறிய வேண்டும் போரட்ட மின்றி பிரச்சனைக்கள் தெரிவிக்க வழி இருக்கு பொதுமக்கள் நன்கு அறிவர்: இதையும் அறிய வேண்டும்- பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-மார்-201310:53:48 IST Report Abuse
pattikkaattaan தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை , தண்ணீர் இல்லை , வேலை இல்லை என ஆயிரம் பிரட்சினைகள் உள்ளன ... 16 மணி நேரம் மின்சாரம் இல்லை .. நிறைய ஊர்களில் குடிக்ககூட தண்ணீர் இல்லை ... இதை கேட்க யாருக்கும் தோன்றவில்லை ... அடுத்த நாட்டின் அதிபதி ராஜபக்ஷேவை எதிர்த்து போராடுகின்றனராம் ... இங்கு நீங்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் ராஜபக்ஷேவின் ஒரு _____கூட புடுங்க முடியாது ... இந்தியாவின் உள்ள மற்ற மாநிலத்துகாரன் முதலில் உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறானா?... பக்கத்துக்கு மாநிலத்திலிருந்து தண்ணீர் தர தயாரில்லை ... மத்தியிலிருந்து மின்சாரம் தர தயாரில்லை .... முதலில் நம் நாட்டு பிரச்சினைக்கு போராடுங்கள் ... உங்களை தூண்டிவிடும் அரசியல்வாதிகளின் பேச்சில் மயங்காதிர்கள்....
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
25-மார்-201310:06:56 IST Report Abuse
R.Subramanian தமிழ் உணர்வாளர்கள் எவ்வுளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் மாணவர்களின் படிப்பு வாழ்கையை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் அவர்களை போராட்டம் வன்முறை என்று இழுத்து வந்து மாணவர்களின் வாழ்கையை மட்டும் அழித்தது பத்தாமல் தமிழகத்திற்கும் தீங்கு செய்கிறார்கள்... முதலில் இந்த தமிழ் உணர்வாளர்களை நம் தமிழக நலனுக்காக் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் அப்போது தான் தமிழகம் உருப்படும்... இலையென்றால் தமிழகத்தை அழித்து விட்டு தான் இந்த தமிழ் உணர்வாளர்கள் அடங்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
25-மார்-201310:05:40 IST Report Abuse
K.Sugavanam அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பாதி மாணவர்கள் வகுப்புக்கே செல்வதில்லை.எங்கூருல பக்கத்துல மாவட்ட மைய்ய நூலகம் வேற இருக்கா.அங்க வந்து பாருங்க...கல்லூரி திறந்தா அட்டெண்டன்ஸ் கிடைக்கும்.இல்லேன்னா புஸ்ஸு தான்..மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்து கொள்ள கூடாது.நல்லா படிங்க.அதான் முக்கியம்..
Rate this:
Share this comment
Cancel
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
25-மார்-201309:44:26 IST Report Abuse
நெற்றிக்கண் மாணவர்கள் படிப்பதற்கு மின்சாரம் வேண்டும், ஆனால் தமிழ்நாட்டில் அது சுத்தமாக இல்லை..... அதற்கு அரசு என்ன உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இதற்கு மாணவர்கள் தான் போராட வேண்டும்.......
Rate this:
Share this comment
Cancel
Ramu - Sivagangai,இந்தியா
25-மார்-201308:57:23 IST Report Abuse
Ramu waiting
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
25-மார்-201308:01:18 IST Report Abuse
Durai selvaraju மாயமான் வேட்டையில் ஈடுபடவேண்டாம்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.... உண்ணாமலும் உறங்காமலும் உழைத்து உங்களைப் படிக்க வைக்கும் உங்கள் தாய் தந்தையரை ஒரு கணம் .. ஒரே ஒரு கணம் .. மனசாட்சியுடன் நினைத்துப் பார்த்து விட்டு கல்வியைத் தொடருங்கள்... நல்வாழ்த்துக்கள...
Rate this:
Share this comment
Cancel
25-மார்-201307:29:50 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் உடனே காலேஜுக்குப் போங்க .படித்தவுடன் எல்லாக் கலை அறிவியல் பட்டதாரிகளுக்குமே ஐ டி நிறுவனங்களில் சேர்மன் போஸ்ட் கொடுக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை