E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கரூர் - சேலம் பயணிகள் ரயில் இயக்குவது தாமதமாகும்: தி.மு.க., விலகல் எதிரொலி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2013
23:30

கரூர்: மத்திய அரசில் இருந்து, தி.மு.க., விலகியுள்ளதால், கரூர் - சேலம் இடையே, பயணிகள் ரயில் இயக்குவதில், மேலும் கால தாமதம் ஆகும் என, ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் - சேலம் இடையே, நாமக்கல் வழியாக, 1997ம் ஆண்டு, 85 கி.மீ., ரயில் பாதை அமைக்கும் திட்டம், 630 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக பாதை அமைக்கப்பட்ட பின், பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, கடந்த நவ., 15ம் தேதி, சரக்கு ரயில் இயக்கப்பட்டது.
ஆணையர் ஆய்வு: இதையடுத்து, முதல்கட்டமாக கடந்த மாதம், 21ம் தேதி சேலம் - கரூர் புதிய ரயில் பாதையில், ஆளில்லாத பயணிகள் ரயில் சோதனை ஓட்டம், 110 கி.மீ., வேகத்தில் முதன் முதலாக நடந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த, 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை, 85 கி.மீ., தூரம் உள்ள, கரூர் - சேலம் புதிய ரயில் பாதையில் டிராலி மூலம், பாதுகாப்பு ஆணையர் மிட்டல் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில், கரூர், சேலம் இடையே, பயணிகள் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சேலம் எம்.பி., செம்மலை, கரூர் எம்.பி., தம்பி துரையும் உள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் காந்தி செல்வன் வெற்றி பெற்ற நாமக்கல்லில், துவக்க விழா நடக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் முன் கூறப்பட்டது.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, மத்திய கூட்டணி அரசில் இருந்து, தி.மு.க., விலகியது. இதையடுத்து, மத்திய அரசை பொறுத்தவரை, தமிழகத்தில், தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. இதனால், கரூர் - சேலம் இடையே, பயணிகள் ரயில் துவக்க விழா குறித்து, தி.மு.க.,- அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, மக்கள் பிரதிநிதிகளை ஆலோசிப்பதில், ரயில்வே துறை அதிகாரிகளுக்கு, தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே துறை வட்டாரத்தில் கூறியதாவது: கடந்த, ஒன்பது ஆண்டுகளாக மத்திய காங்., கூட்டணி அரசில், தி.மு.க., இடம் பெற்றிருந்தது. இதனால், தமிழகத்தில் உள்ள, தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களை ஆலோசித்து, ரயில்வே தொடர்பான பணிகளை செய்து வந்தோம். ஆனால், மத்திய அரசில் இருந்து, தி.மு.க., விலகியுள்ளதால், இனிமேல், தி.மு.க.,வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்க முடியாது. இனிமேல் ரயில்வே தொடர்பான திட்டங்கள், பணிகள், உள்ளிட்டவற்றிற்கு, தென்னக ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் காங்., கட்சியைச் சேர்ந்த, மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசித்து தான் தேதி அறிவிக்க முடியும். இவ்வாறு கூறப்படுகிறது.

கேள்வி எழுந்துள்ளது: தி.மு.க.,-அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்., கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, கரூர் -சேலம் இடையே, புதிய பயணிகள் ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால், கரூர் - சேலம் இடையே, பயணிகள் ரயில் இயக்குவதில் மேலும் தாமதம் ஆகும் என தெரிகிறது.

எழும்பூர் - பழநி ரயிலும் தாமதம்: "சென்னை எழும்பூரில் இருந்து, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக, பழநிக்கு நாள்தோறும் புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும்' என, கடந்த ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்திருந்தார். ஆனால், கரூர்-சேலம் இடையே, பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு தான், சென்னை எழும்பூரில் இருந்து, கரூர் வழியாக, பழநிக்கு புதிய ரயில் இயக்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram prasad - Sri rangam,இந்தியா
26-மார்-201311:48:36 IST Report Abuse
ram prasad திமுக மத்திய அரசில் இருந்தால் தமிழகதிற்கு நிறைய பலன் கிடைத்து இருக்கு என்று ஒப்பு கொண்டமைக்கு நன்றி
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
25-மார்-201315:21:56 IST Report Abuse
saeikkilaar மாறி மாறி நம்ம மக்கள் போட்ட வோட் , ஒரு பிரசன்னையும் உருபடிய ஒரு பிரச்னையும் தீர்கல
Rate this:
0 members
0 members
25 members
Share this comment
Cancel
Karthik Arumugam - Jurong West,சிங்கப்பூர்
25-மார்-201313:03:00 IST Report Abuse
Karthik Arumugam ரயில் தான தாமதமாக வரும்னு சொல்லுவாங்க. இப்ப புது ரயில் இயக்கவும் தாமதமா ...........? கேவலம் ஒரு ஆரம்பித்த திட்டம் கூட செயல் படுத்த கட்சி கூட்டணினு எதிர்ப்பார்க்க வேண்டிஇருக்கு......
Rate this:
0 members
1 members
15 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
25-மார்-201312:04:53 IST Report Abuse
s.maria alphonse pandian திமுக விலகினால்தான் தெரிகிறது...அதன் முக்கியத்துவம் என்னவென்று....
Rate this:
505 members
1 members
120 members
Share this comment
Cancel
Aravind Kumar - Chennai,இந்தியா
25-மார்-201311:52:14 IST Report Abuse
Aravind Kumar அட நாசமா போன எடுபட்ட பயலுகளா.....சீக்கிரம் கொண்டு வாங்கடா.....ஊருக்கு போகணும்...
Rate this:
0 members
1 members
28 members
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
25-மார்-201311:44:07 IST Report Abuse
ksv மக்கள் நலத்திட்ட பணிகளை துவக்க நல்ல ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்வு செய்யுங்கள். அதை விடுத்து இந்த கயவர்களை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Rate this:
0 members
12 members
23 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
25-மார்-201311:15:10 IST Report Abuse
சகுனி இத்தனை நாளு இருந்து ஒண்ணும் செய்யல ........ இப்போ பதவி போனதால ஓட இருந்த ரயிலும் ஓடல ..... சபாஷ்
Rate this:
19 members
1 members
489 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
25-மார்-201311:14:23 IST Report Abuse
சகுனி கூட்டணியில் இருந்தாலும் சரி ...... இல்லாவிட்டாலும் சரி .......... திமுகாவால் ஜனங்களுக்கு ஒன்றும் லாபம் இல்லை என்பது மட்டும் உண்மை ........
Rate this:
24 members
1 members
422 members
Share this comment
Cancel
mani - coimbatore,இந்தியா
25-மார்-201310:34:52 IST Report Abuse
mani தி மு க வில் மக்களுக்காக செய்வதை விட சொந்த அரசியல் நாடகங்களுக்காக அதிக விஷயம் தேவை. அதில் இதுவும் ஒன்று.
Rate this:
12 members
1 members
340 members
Share this comment
Cancel
vittalraman ramakrishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மார்-201309:55:51 IST Report Abuse
vittalraman ramakrishnan இதுலே எதுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி ஆளுகள எதிர்பர்க்கணும்? ரயில்வே துறை பொதுமக்கள் சேவைக்கா அல்லது கட்சிகளின் சேவைக்கா? எந்த ஒரு அணியையும் எதிர்பார்க்காமல் உண்மையான ரயில் பயணியாக வரும் ஒரு முதியவரையோ அல்லது மூதட்டியையோ கொண்டு ரயில் சேவை சர்வீஸ் தொடங்குவதற்கு என்ன தயக்கம்? இதுமாதிரி செய்து என்னைக்குத்தான் நாட்டுக்கு ஒரு முன் மாதிரியாக ரயில்வே போர்டு திகழுமோ தெரியவில்லை?
Rate this:
0 members
1 members
24 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.