Continued power cut in night time: Students studies fall in dark | இரவு நேர தொடர் மின்வெட்டால் மாணவர்கள் அவதி: பொதுத்தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் புலம்பல்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (10)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை: தேர்வு சமயத்தில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக, படிக்க முடியாததுடன், போதுமான தூக்கமின்றி, உடலளவிலும், மனதளவிலும், பள்ளி மாணவ,மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம் என அனைத்துதுறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள், படிக்க முடியாமல் தவிக்கின்றனர்; உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 1ல் துவங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுகள், வரும் 27ல் நிறைவடைகின்றன. அதே தேதியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வு துவங்குகிறது. தவிர, பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு என, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு நிலவுகிறது. தொடர் மின்வெட்டால் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு படிக்க முடியாததுடன், தூக்கமும் வருவதில்லையென புலம்புகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி மாணவர்கள் கூறுகையில்,""இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. பாடங்களை கண்விழித்தும் படிக்க முடிவதில்லை. அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்து தூங்கினால், உஷ்ணம், கொசுத் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் சரிவர தூங்க முடிவதில்லை. தேர்வறையில் தூக்கம் தூக்கமாக

வருகிறது. மூளையும்
சோர்வடைவதால் சிந்தித்து தேர்வெழுதமுடிவில்லை. எதிர்வரும்
தேர்வுகளை எதிர்கொள்வதை
நினைத்தாலே பயமாக உள்ளது.
இரவு நேர மின்வெட்டை தவிர்க்க
அரசு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என்றனர்.


கோவை, மின்வாரிய

தலைமைப்பொறியாளர் தங்கவேலு

கூறியதாவது: கோடை காலம்

துவங்கியுள்ள நிலையில்,

வழக்கம்போல் காற்றாலைகளின்

மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.
கடந்த ஜன., மாதத்தில் காற்றாலை உற்பத்தித்திறன் குறைந்தது 1,000 மெகாவாட்டாக இருந்தது தற்போது 15 மெகா வாட்டாக குறைந்துள்ளது; மின் தேவையும் அதிகரித்துள்ளது. மழையின்மையால் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனல் மின்சாரமும் கைகொடுக்கவில்லை. இரவுநேர மின் பயன்பாட்டை குறைக்க கடைகள், ஓட்டல்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது தேர்வு சமயம் என்பதால், கேரள மாநிலத்தில் இரவு 8.00 மணி முன்னதாக கடைகள், ஓட்டல்களை மூடிவிடுகின்றனர். இதனால், மின்தட்டுபாடு குறைகிறது. அதேபோல், இங்கும் மின்பயன்பாட்டை குறைத்து, தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆறு மணிநேர தூக்கம் அவசியம்:
டாக்டர்கள் கூறுகையில்,"நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் தேவை என்ற நிலையில், இரவு

Advertisement

நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் மாணவர்களுக்கு தூங்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதனால், சிந்திக்கும் திறன் குறைவதுடன், உடல் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். தேர்வில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. குறிப்பாக சிந்தித்து எழுதும் கணிதத் தேர்வில் பாதிப்புகள் அதிகம் இருக்கும். எனவே, தேர்வு சமயத்தில், மாணவ,மாணவியருக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேர தூக்கம் தேவை,'' என்றனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lavanya - Gobi ,இந்தியா
27-மார்-201308:50:13 IST Report Abuse
Lavanya ஆனா பாருங்க ரிசல்ட் மட்டும் பயங்கரமா வரும்.. மார்க்ஸ் அள்ளி அள்ளி போட்ருவாங்க ..
Rate this:
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
25-மார்-201311:37:31 IST Report Abuse
Kuwait Tamilan இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. இது தான் தமிழகத்தின் இருண்ட காலம்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-மார்-201310:31:20 IST Report Abuse
pattikkaattaan பொது தேர்வுக்கெல்லாம் மின்சாரம் கிடையாது ... பொது தேர்தல் வந்தால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-மார்-201310:12:18 IST Report Abuse
mirudan நாற்பதில் நாலு வந்தால் போதும், கருணாநிதியின் மீது இருக்கும் வெறுப்பில் போட்டால் உண்டு ? இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது அம்மா வென்றால் ஒரு சும்மா தான்
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
25-மார்-201310:01:24 IST Report Abuse
Ram முதலில் அணைத்து ஹைமாஸ் தெருவிளக்குகள் உபயோகத்தை கட்டுபடுத்தவும்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
25-மார்-201309:41:37 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மாணவர்களின் கனவை சிதறடிக்காதீர்கள்...தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
25-மார்-201309:38:36 IST Report Abuse
நெற்றிக்கண் மாணவர்கள் இந்த கடுமையான மின்வெட்டை எதிர்த்து போராட்டங்களை செய்யவேண்டும்.... அப்போதுதான் இந்த தமிழக அரசு சற்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்......... இல்லையெனில் காலமும் இருட்டில் தான் தமிழகம்...........
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
25-மார்-201309:01:43 IST Report Abuse
JALRA JAYRAMAN இரவுநேர மின் பயன்பாட்டை குறைக்க கடைகள், ஓட்டல்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இது நல்ல காமெடி இந்த ஊர்லே(நாட்டில்) யார் சொல்லி யார் கேட்பார்கள்?
Rate this:
Share this comment
Cancel
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
25-மார்-201303:01:16 IST Report Abuse
நெற்றிக்கண் இந்த கஷ்டமெல்லாம் அந்த அம்மாவுக்கு எங்க தெரியப்போகுது? அவர் 'நாற்பதும் நமதே' என்ற கனவில் அல்லவா இருக்கிறார்....
Rate this:
Share this comment
GURU - Coimbatore,இந்தியா
25-மார்-201307:03:51 IST Report Abuse
GURUஇதே போல மின்வெட்டு தொடர்ந்தால் 1 தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.