காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Added : மார் 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூரில் காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு சார்பில், இலங்கை அதிபர் ராஜ பக்ஷே உருவ பொம்மை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ஐ.நா., சபை கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, வேலூர் காமராஜர் சிலைக்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு சார்பில், மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். காங்கிரஸ் கொடியை எரித்த தி.மு.க., ம.தி.மு.க., கட்சிகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியதற்காக, மாவட்ட தலைவர் எத்திராஜ் இனிப்பு வழங்கினார். பின், இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவின் உருவ பொம்மையை எரித்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் காமராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித், பொதுச் செயலாளர் ஜெய பிரகாஷ், எஸ்.சி., எஸ்.டி., அமைப்பாளர் சிவராஜ், சேவாதளம் வேலூர் சட்டசபை தலைவர் ரவி, மாநகர காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பழனி. காங்கிரஸ் நிர்வாகிகள் குதர்மல் பண்டாரி, வேதகிரி, ரங்கநாதடு, கிருஷ்ண குமார், ஜானகிராமன், நரசிம்மன், சேகர், பலராமன், வேணு கோபால் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். மெய்யப்பன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை