சோனியாவின் தொகுதியில்"ஏவியேஷன்' பல்கலை| Dinamalar

சோனியாவின் தொகுதியில்"ஏவியேஷன்' பல்கலை

Updated : மார் 26, 2013 | Added : மார் 25, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சோனியாவின் தொகுதியில்"ஏவியேஷன்' பல்கலை

புதுடில்லி:நாட்டின், முதல், விமானத்துறை கல்விக்கான பல்கலை கழகம் (ஏவியேஷன் யுனிவர்சிட்டி), காங்., தலைவர், சோனியாவின் ரேபரேலி தொகுதியில் செயல்படவுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், வேணுகோபால், காங்., துணை தலைவர், ராகுல் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது.இதில், காங்., தலைவர் சோனியாவின், ரேபரேலி தொகுதியில், நாட்டின், முதல், விமானத் துறை கல்விக்கான பல்கலையை அமைப்பது என்றும், அடுத்தாண்டு, ஜூலை முதல், இந்த பல்கலை செயல்படத் துவங்கும் என்றும், முடிவெடுக்கப்பட்டது.இதற்கான, அடிக்கல் நாட்டும் விழா, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த திட்டம், 202 கோடி ரூபாய் மதிப்பில், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மார்-201305:06:35 IST Report Abuse
Krish Sami திரு. முலாயம் சிங் யாதவ் & மேடம். மாயவதி அவர்களே, மைனாரிட்டி காங்கிரஸ் நோக்கம் புரிகிறதா? விழித்துக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மார்-201305:01:48 IST Report Abuse
Krish Sami நடக்கட்டும், நடக்கட்டும். இதான கடைசி வருஷம். நடக்கட்டும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மிக பெருமை வாய்ந்த பழைய பெரும் நகரம் மதுரையை சேர்ந்தவர்கள் நினைத்து பார்க்கட்டும் - சோனியா காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், ஏன் நேருவின் காங்கிரஸ் நமது ஊருக்கு என்ன கொடுத்தது என்பதை. குறிப்பாக, 1967க்கு பிறகு இவர்கள் தமிழ் நாட்டுக்கு செய்த துரோகத்தை போல , இந்திய வரலாற்றில் யாருமே செய்ததில்லை. இந்த கூட்டம் யாருடன் சேர்ந்து வந்தாலும், தமிழக மக்கள் எந்த தேர்தலிலும் இவர்களுக்கு ஒரே - ஒரே - ஒரே - பதிலைத்தான் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை