சோனியா தொகுதியில் முறைகேடு:விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு? | Dinamalar

சோனியா தொகுதியில் முறைகேடு:விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு?

Added : மார் 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரேபரேலி:காங்., தலைவர், சோனியாவின் தொகுதியில், கிராமப்புற சாலைகள் திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.காங்., தலைவர், சோனியா, உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியிலிருந்து, லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதாக, புகார்கள் வந்தன.

இதுகுறித்து, நேற்று ரேபரேலி தொகுதியில், கலெக்டர், அமித் குப்தா தலைமையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காங்., தலைவர், சோனியா மற்றும் அதிகாரிகள், இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இதன்பின், கலெக்டர் கூறுகையில்,""சாலைகள் போடும் திட்டத்தில் முறைகேடு நடந்தாக புகார் வந்துள்ளதை அடுத்து, இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவது என, இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.முன்னதாக, இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த, மக்கள் பிரதிநிதிகள், ஒருவரை ஒருவர் தாக்கி பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது. சோனியா முன்னிலையில், இந்த மோதல் நடந்ததால், காங்., கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை