E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஹவாலா வழக்கு குற்றவாளிகளிடம்லஞ்சம் பெற்ற "மாஜி' அதிகாரிக்கு சிறை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
22:25

புதுடில்லி:ஹவாலா வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், சி.பி.ஐ., முன்னாள் அதிகாரிக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த, 1991ல், டில்லியை கலக்கிய ஹவாலா வழக்கு, மிகவும் பிரபலம். ஜெயின் சகோதரர்கள் எனப்படும், சுரேந்திர ஜெயின் மற்றும் ஜனேந்திர ஜெயின் ஆகியோர், ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.

அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த, பி.சி.சர்மா, ஜெயின் சகோதர்களை, இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி, பிரதீப் சத்தா அளித்த தீர்ப்பு: சி.பி.ஐ.,யின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி, தன் பொறுப்பை உணராமல், சட்டத்துக்கு புறம்பாக லஞ்சம் பெற்றது, மிகவும் கடுமையான குற்றம்; இதை ஏற்க முடியாது. லஞ்சம் பெற்ற, முன்னாள் அதிகாரி, சர்மாவுக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.அவருக்கு, தற்போது, 75 வயதாகி விட்டதால், இதை கருத்தில் வைத்து, அடுத்த மாதம், 25ம் தேதி வரை, அவருக்கு ஜாமின் அளிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:45:51 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நம்ம தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரை (தி மு க அனுதாபி) கொஞ்ச நாள் முன்பு கைது செய்தீர்களே.... அந்த கேஸ் என்ன நிலைமையில் இருக்கு..?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.