திரும்பி வந்தது திருடப்பட்ட கார்| Dinamalar

திரும்பி வந்தது திருடப்பட்ட கார்

Added : மார் 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திரும்பி வந்தது திருடப்பட்ட கார்

பெங்களூரு:வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த, "மெர்சிடஸ் பென்ஸ்' காரை, ஓராண்டுக்கு முன் திருடிச் சென்ற கும்பல், நேற்று முன்தினம், திருடிய இடத்திலேயே விட்டுச் சென்ற, அதிசய சம்பவம் நிகழ்ந்து உள்ளது.பெங்களூரு, மடிவாலா பகுதியில் வசிப்பவர், மருத்துவர் அனுராதா ராஜ்புத். மருத்துவ நிறுவனம் ஒன்றை, நடத்தி வருகிறார். இவரின் கணவர், கர்னல் கே.ஜே.சிங், கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்.

கடந்த ஆண்டு ஜனவரியில், அனுராதா, தனக்கு சொந்தமான, "மெர்சிடஸ் பென்ஸ்' காரை, தன் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு, வெளியே வந்து பார்த்த போது, காரைக் காணவில்லை.போலீசில் புகார் செய்தும், 15 மாதங்களாக எந்த பலனும் இல்லை. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, காரை பறி கொடுத்த அனுராதா, தன் சோக கதையை, பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த செய்தி, இரண்டு நாட்களுக்கு முன், பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

நேற்று முன்தினம் காலை, வீட்டு ஜன்னலை திறந்து, வெளியே பார்த்த அனுராதாவுக்கு, ஆச்சர்யம் தாங்கவில்லை. திருடப்பட்ட, அவரின், புத்தம் புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார், வாசலில் நின்றிருந்தது.ஓடிப் போய் பார்த்தார். அதே கார்; அதே எண்; கொஞ்சம் கூட தூசு படாமல் அழகாக, அப்படியே இருந்தது. தன் கண்களை நம்பாமல், உறவினர்களை அழைத்து, தன் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டார்.ஓராண்டுக்கும் மேலாக காரை தேடிய போலீசாருக்கு சிக்காத கார், அப்படியே, புத்தம் புதிதாக வந்திறங்கியதில், அனுராதாவுக்கு மகிழ்ச்சி தான் என்ற போதிலும், போலீசாரின் விசாரணை எந்த அளவுக்கு இருந்தது என, அவர் எண்ணி வேதனை அடைந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை