அரசியல் காழ்புணர்ச்சியால் எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்' : விஜயகாந்த் கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காழ்புணர்ச்சியால் எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்' : விஜயகாந்த் கருத்து

Added : மார் 25, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசியல் காழ்புணர்ச்சியால் எம்.எல்.ஏ.,க்கள்  "சஸ்பெண்ட்' : விஜயகாந்த் கருத்து

சென்னை: ""தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும்கட்சி எடுத்த நடவடிக்கையாக கருதுகிறேன். இதை கண்டித்து, வரும், 30ம்தேதி, தே.மு.தி.க., சார்பில், மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்,'' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டசபை வளாகத்தில், எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் தாக்கப்பட்டது தொடர்பாக, உரிமை குழு விசாரணை நடத்தப்பட்டு, தே.மு.தி.க.,வை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், ஓராண்டிற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கை இது' என, விமர்சித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, தே.மு.தி.க.,வினர், சென்னையில், சைதாப்பேட்டை உட்பட பல இடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும், அவர்கள் கலைந்து போகாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
26-மார்-201305:25:19 IST Report Abuse
naagai jagathratchagan என்னதான் நடக்கட்டும் ...நடக்கட்டுமே ....உள்ளதை உள்ளபடி ,,சொல்லும்படி ...சொல்லுவதை நம்பும்படி ...இதில் நேரத்தை செலவழிக்க கட்சியை விட்டா வேறு ஆள் இல்லை ...பொது காரியம் செய்ய வந்தால் ...போட்ட திட்டம், செய்திட ,,சுத்தியிருக்கும் கூட்டமும் சரியில்லை ...பெயரில் ஒட்டிக்கொண்ட ஈர்ப்புத் தன்மை ...அரசியலில் ஓட்டமாட்டேன்குதே ...இது யாரை சொல்லி குற்றம் ...நடந்த காலம் செய்த குற்றமடி ...ஆட்சியோ ...ஐந்தாண்டு எண்ணிக்கையிலே ....தண்டனையோ ..ஓர் ..ஆண்டு ...இதுக்கு ஒரே வழி ...எல்லோரும் கூண்டோடு ராஜினாமா செய்து விடவேண்டியதுதான் ...அப்புறம் பார்ப்போம் ...வெற்றி வேண்டுமா ...போட்டு பார் எதிர் நீச்சல் ...அப்போ தெரியும் ...நாலும் தெரிஞ்சவர் யார் யார்
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201304:41:21 IST Report Abuse
Sivakumar Manikandan நீங்க ஒன்னு புரியாத பிள்ளைய இருகாங்க............சரியாய் சொல்லுங்க பார்க்கலாம் உங்க MLA எத்தனை பேர் எந்தெந்த தொகுதி அவகளோட பெயர் கடகடன்னு சொல்லுங்க பார்க்கலாம் .............Mcdowel XXXRUM VSOP பத்தி கேட்ட சொல்லுவிங்களா ...............
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
26-மார்-201301:31:51 IST Report Abuse
Vettri இந்த நடவடிக்கை காழ்ப்புணர்ச்சி என்றால், உங்களுடைய நண்பனாக இருந்து எம்.எல்.ஏ ஆனவரை உங்க ஆட்கள் அடித்தது அரசியல் நாகரீகமா? கூட இருந்தவர்கள் மாற்று கருத்து கொண்டுஇருந்தால் நைய புடைக்கும் செயல் தான் காழ்புணர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வினை விதைத்துவிட்டு திணை வேண்டும் என்றால் அது அறியாமை என்று தான் கருதப்படும்.
Rate this:
Share this comment
Cancel
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201301:07:18 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam அய்யா விசயகாந்து ..ஆண்டவன் எங்களுக்கு தந்த தண்டனையாகத்தான் உங்களின் கட்சியையும் உங்கள் சட்ட மன்ற உறுப்பினர்களையும் உங்களையும் ( மேடம் மற்றும் சதீஷ் அய்யாவையும் சேத்துக்கோங்க) நினக்கிறோம். நேத்து வந்த நீங்கள் திமுக அதிமுக காங்கிரஸ் மூன்றையும் மிரட்ட பாக்கலாமா? இந்த ஆறுபேரையும் நீக்க சொன்னது அய்யா பண்ட்ருட்டியும் கலைஞரும் தான் என கேள்வி. என்னதான் அம்மாவும் கலைஞரும் அரசியலில் எதிரியாக இருந்தாலும் மூன்றாவது எதிரி உருவாவதை விரும்பமாட்டார்கள். பாமக மதிமுக இதோட கதிஎல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். எங்க தொகுதியும் உங்க கூட வந்து மாட்டிகிச்சே என்றுதான் என் கவலை. மச்சானுக்கு எம்பி பதவி வேணுமா? அம்மா ஆப்பு வச்சாங்க்கல்ல. இதுலேந்து வெளியில வரணும்னா நல்ல நிதானமா .............எப்படி நல்ல நிதானமா....சிந்தனை செய்யுங்கள். 1967 முதல் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள பண்ருட்டி அய்யா எப்படி உங்களை எத்துகிட்டார்னு எனக்கு புரியவேயில்லை. அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா கூட எல்லாம் இருந்தவர் இப்போ நொந்து நூலாக இருப்பதாக கேள்வி. உண்மையா?
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
26-மார்-201300:16:30 IST Report Abuse
Mohamed Nawaz நீங்கள் படத்தில் பலரை அடிக்கலாம், ஒரு பெரும் ஜன கூட்டத்தையே கட்டுபடுத்தலாம். ஆனால் இது நிஜ வாழ்க்கை இதில் உங்களுக்கு அனுபவம் போதாது. ஆனால் ungal கட்சியை அம்மையாரே வளர்த்துவிடுவார் கவலை வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை