குடோனில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மஞ்சள் எரிந்து நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடோனில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மஞ்சள் எரிந்து நாசம்

Added : மார் 25, 2013
Advertisement
குடோனில் தீ விபத்து: ரூ.50 லட்சம்  மஞ்சள் எரிந்து நாசம்

ஈரோடு: ஈரோட்டில், நள்ளிரவு, மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள், எரிந்து நாசமானது. ஈரோடு, பவானியில், ராஜேந்திரகுமார் அகர்வால், சஞ்சீவ்குமார் அகர்வாலுக்கு சொந்தமான, ஏ.பி., மஞ்சள் எக்ஸ்போர்டர், குடோன் உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை வாங்கி, குடோனில், "ஸ்டாக்' வைத்து, உலர்த்தி, இரண்டாவது முறை பாலிஷ் செய்து, முதல் தர மஞ்சளாக மாற்றி, வெளிநாடு மற்றும் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். குடோனில், 60 டன் மஞ்சள், இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், மஞ்சள் குடோனில் இருந்து, புகை வருவதை பார்த்து, அவ்வழியே சென்றவர்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குடோனுக்கு செல்ல, போதிய வழி இல்லாததால், சுவரை உடைத்து நுழைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலிஷ் செய்வதற்காக மஞ்சளை பிரித்துக் கொட்டி இருந்ததால், அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம், குடோனில் இருந்த மஞ்சள், லாரிகளில் வெளியேற்றப்பட்டது. இந்த தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் வீணானது. காலை, 10:00 மணி வரை, தீயணைப்பு வீரர்கள் பணி தொடர்ந்தது. விபத்து குறித்து, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயணைப்பு கோட்ட அலுவலர், மதியழகன் கூறியதாவது: குறுகலான இடத்தில் குடோன் அமைந்துள்ளதால், வாகனம் செல்ல வசதியின்றி, மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. 1,000 மூட்டை மஞ்சள் வைத்திருந்ததாக, உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால், குடோனில் தீத்தடுப்பு கருவிகள் இல்லை; குடோன் மற்றும் மஞ்சளுக்கு காப்பீடு செய்யவில்லை. மஞ்சளை பாலிஷ் செய்யும் போது, இயந்திரத்தில் ஏற்பட்ட நெருப்பு, மஞ்சள் கழிவுக் குப்பையில் விழுந்து, காலி சாக்குகள், பிற மஞ்சள் என, அனைத்திலும் பரவியது. மஞ்சளுக்கு பரவத் துவங்கியதும், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தோம். இல்லாவிடில், அருகில் உள்ள, நூல் குடோனுக்கும், தீ பரவி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை