E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
டில்லி பாலியல் பலாத்கார குற்றவாளிக்குஉடல்நல குறைவு: விசாரணை ஒத்திவைப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
23:06

பதுடில்லி:டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முகேஷுக்கு உடல்நிலை சரியில்லாததால், விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
மருத்துவ மாணவி:கடந்த ஆண்டு டிசம்பரில், தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த வழக்கில், ராம் சிங், அவன் தம்பி, முகேஷ் மற்றும் நான்கு பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. டில்லி, சாகேத் கோர்ட் வளாகத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, குற்றம் சாட்டப்பட்டுள்ள முகேஷிடம், விசாரணை நடப்பதாக இருந்தது.நெஞ்சு வலி:இந்த நிலையில், "அவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அதனால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங், தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனின் தம்பி, முகேஷுக்கு உடல்நிலை சரியில்லை என, தெரிவிக்கப்பட்டதால், முகேஷ் தரப்பு வழக்கறிஞர், சந்தேகம் தெரிவித்து, "அவனை பார்க்க உடனே அனுமதிக்க வேண்டும்' என, நீதிபதி, யோகேஷ் கன்னாவிடம் கேட்டார்.
அதை மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை, ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில், ஐந்தாவது குற்றவாளியான, அக்ஷய் தாக்குரின், தாய், லீலாவதி தேவி, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பீகாரின், அவுரங்கபாத் நகரைச் சேர்ந்த அவர், ""ராம் சிங்குக்கு நேர்ந்த கதியே, என் மகனுக்கும் கிடைக்கும் என, நினைக்கிறேன். இதுவரை அவனை சந்திக்க எங்களுக்கு அனுமதி இல்லை,'' என்றார்.அக்ஷய் தாக்குரின் மனைவி, புனிதா தேவி கூறுகையில், ""வேலை தேடி டில்லிக்கு சென்ற என் கணவரை, ராம் சிங் தான், அந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளான். மகிழ்ச்சியாக இருந்த எங்கள் வாழ்க்கை, அந்த சம்பவத்திற்கு பிறகு, சோக மயமாகிவிட்டது. எங்கள், ஒன்றரை வயது மகன், அமித், தந்தையை தேடுகிறான்,'' என்று கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:44:18 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தூக்கில் தொங்கினாதான் பிரச்சனை.... உடல் நல குறைவால் செத்துட்டார் நு சொன்ன ஒன்னும் பிரச்சனை கிடையாது....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.