கெஜ்ரிவால் உண்ணாவிரதம்:மக்களிடையே ஆதரவில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கெஜ்ரிவால் உண்ணாவிரதம்:மக்களிடையே ஆதரவில்லை

Updated : மார் 26, 2013 | Added : மார் 25, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கெஜ்ரிவால் உண்ணாவிரதம்:மக்களிடையே ஆதரவில்லை

புதுடில்லி:டில்லி மாநில அரசுக்கு எதிராக, ஏழை மக்கள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தி வரும், உண்ணாவிரத போராட்டத்தில், போதிய அளவில் கூட்டம் சேரவில்லை."தண்ணீர் மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என, முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான, டில்லி மாநில காங்., அரசை வலியுறுத்தி, ஏழை மக்கள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

மூன்றாவது நாளாக, அவரது உண்ணாவிரத போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. ஆனாலும், போராட்டம் நடக்கும் இடத்தில், பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லை.இதுகுறித்து, கெஜ்ரிவால் கூறுகையில், "" இந்த போராட்டம், மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பது தான், எங்களின் குறிக்கோள். போராட்டம் நடக்கும் இடத்தில், கூட்டம் கூட வேண்டிய அவசியமில்லை. எங்களின் போராட்டத்துக்கு, டில்லியைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:25:45 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கூடிய சீக்கிரம் அவர் ஆரம்பித்த காங்கிரஸ் க்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கும் நயவஞ்சக கட்சிக்கும் இதே கதிதான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை