E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013,23:36 IST
கருத்துகள் (82)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், தி.மு.க., வின் உள்கட்சி மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் தென் மண்டல செயலருமான அழகிரி, அக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். "அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சி மத்தியில் நீடிக்க வேண்டும்' என, பொதுச் செயலர் அன்பழகனும், "காங் கிரசுக்கு நன்றி இல்லை' என, பொருளாளர் ஸ்டாலினும் பேசினர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கவில்லை. மென்மையான போக்கில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தி.மு.க.,வின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வராததால், மத்திய அமைச்சரவையில்இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்இருந்தும் தி.மு.க., விலகிய பின், முதல் செயற்குழுக் கூட்டம் நேற்று அறிவாலயத்தில் நடந்தது.
எதிர்பார்ப்பு: இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்று, மத்திய அமைச்சரவையி லிருந்து தி.மு.க., விலகிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவார் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் வீட்டில், அழகிரி 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., அவசரமாக விலக வேண்டிய அவசியம் ஏன்? என, கருணாநிதியிடம் அழகிரி கேட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை வரை சென்னையில் அழகிரி தங்கியிருந்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல், மதுரைக்கு அழகிரி புறப்பட்டு சென்றார். செயற்குழுக் கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை வகித்தார். அக்கூட்டம் துவங்கியதும், 16 தீர்மானங்களை, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உட்பட ஐந்து பேர் வாசித்தனர்.
சரியான முடிவு: கூட்டத்தில் அன்பழகன் பேசியதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணன், தம்பி பாசம் என்பது போற்றி பாது காக்கக் கூடியது. எனக்கோ, கருணாநிதிக்கோ ஏதோ ஒன்று நடந்து விட்டால், தி.மு.க., என்ற குடும்பத்தில் அண்ணன், தம்பியாக பழகிய நீங்கள் தான் ரொம்ப வருத்தப்படுவீர்கள். அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவுகள் மீண்டும் பிறக்கப் போவதில்லை; திரும்பி வரப்போவதுமில்லை. அதனால், உறவுகள் போற்றப்பட வேண்டும்.

அண்ணன், தம்பி, தங்கைக்கு இடையே, ஒற்றுமையாக இருக்க வேண்டும். பொறுப்புடன் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, எதையும் சாதிக்க முடியும். ஒற்றுமையில்லை என்றால், நாம் வீழ்ந்து விடுவோம். நானும், தலைவர் கருணாநிதியும் தள்ளாடிய நிலையில் உள்ளோம். எனக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது. எங்களுடைய காலத்திற்கு பின் கழகத்தையும், கழகத்தின் கடமைகளையும், தமிழர்களையும் அவர் காப்பாற்றுவார். கருணாநிதி பேசாமல் இருப்பதற்கு, தொண்டை வலி மட்டும் காரணமல்ல, மன வலியும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் ஆட்சியே தொடர வேண்டும். அதேசமயம், நமது உணர்வுக்கு மதிப்பளிக்காத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நாம் வெளியே வந்தது சரியான முடிவு. இந்த முடிவு கூட காலந்தாழ்த்தி எடுக்கப்பட்ட முடிவாகத் தான் கருதுகிறேன். தன் குடும்பத்தைப் பற்றி கருணாநிதி கவலைப்பட வில்லை. கட்சியின் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன. காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், நதி நீர் இணைப்பு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
குஷ்பு ஆஜர்: கருணாநிதிக்கு பின், தலைவர் பதவி குறித்தும், ஸ்டாலினை பற்றியும் நடிகை குஷ்பு, சமீபத்தில் கூறிய கருத்து, தி.மு.க., வில் சர்ச்சையும், சலசலப்பையும் ஏற் படுத்தியது. குஷ்பு மீதும், அவரது வீடு மீதும், தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். இதனால், குஷ்பு செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுவாரா? அழைத்தால் அவர் வருவாரா? என, செயற்குழு உறுப் பினர்கள் பட்டி மன்றம் நடத்தி வந்தனர். குஷ்பு செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மவுனம்: காங்கிரஸ் உறவு முறிவு, ஈழத்தமிழர் பிரச்னை மற்றும் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மோதல் போக்கால், கருணாநிதி மனமுடைந்த நிலையில் இருந்ததால், நேற்று செயற்குழு கூட்டத்தில் அவர் கடைசி வரை பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அதனால், அவருக்கு பதில், ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரை மட்டும் பேச சொல்லி விட்டதாகவும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Advertisement

புறக்கணித்தது ஏன்? மதுரையில் அழகிரி பேட்டி:தி.மு.க., செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு, தென்மண்டல அமைப்பாளர் அழகிரி, மனைவி காந்தியுடன் மதுரை திரும்பினார். விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

* தி.மு.க., செயற்குழுவை புறக்கணித்து விட்டு வந்துள்ளீர்களே ஏன்?

எனக்கு உடல்நிலை சரியில்லை. அதான் கலந்துக்கலை. செயற்குழுவில் 100 பேர் இருக்காங்க. எல்லாருமா கலந்துக்குறாங்க.

* திடீர்னு சிதம்பரத்தை சந்தித்துள்ளீர்களே?

அது நட்பு ரீதியானது. அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை. சோனியா, பிரதமரை கூட சந்திச்சேன்.

* ராஜினாமா செய்த பின் உங்கள் நிலை?

அலுவலகத்திற்கு போக முடியலை. மக்களுக்கு சேவை செய்ய முடியலை, என்றார்.

கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கட்சியின் முடிவுபடி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல், அழகிரிக்கு ஏற்பட்டது. மீண்டும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அழகிரி விருப்பம். அதைத் தான் சிதம்பரத்திடமும், கருணாநிதியிடமும் நேரில் வலியுறுத்தினார், என்றனர்.- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
26-மார்-201311:22:51 IST Report Abuse
Sundeli Siththar சோனியா அவர்களும் அழகிரியும் சந்தித்தால்... எந்த பாஷையில் பேசுவார்கள்.. அந்த அம்மையாருக்கு தமிழ் தெரியாது. அழகிரிக்கோ தமிழை தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது. பிரதமருடன் சந்தித்தது நல்ல சந்திப்பாகவே இருக்கும். இருவருக்கும் தெரிந்த ஒரு பாஷை.. மவுனம்...
Rate this:
0 members
0 members
73 members
Cancel
mirudan - kailaayam,இந்தியா
26-மார்-201310:45:01 IST Report Abuse
mirudan உடம்பு சரியில்லாதவர் மாதிரி தெரியவில்லையே, உடல் நல குறைவிலும் டை மட்டும் பளிச் என்று தெரிகிறதே ?
Rate this:
0 members
2 members
45 members
Cancel
mirudan - kailaayam,இந்தியா
26-மார்-201310:43:06 IST Report Abuse
mirudan எம்.பியாக இருந்து பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேசாத சிங்கம் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என ஏங்குவது ரொம்ப வருத்தமாகவே இருக்கு ?
Rate this:
1 members
0 members
83 members
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
26-மார்-201310:04:29 IST Report Abuse
amukkusaamy தி மு க ஒன்னும் மடம் இல்லை ....இப்போ ( சோனியா ) மேடமும் இல்லை...எதிர்கால இளமைத் தலைவி குஷ்பூ வாழ்க ... தி மு க வின் எதிர்காலமே குஷ்பூ கிட்டதான் ...தலீவி வாழ்க ...அவங்களின் குழந்தைகள் வாழ்க ....சுந்தர் சீசீ வாழ்க
Rate this:
5 members
1 members
59 members
LAX - Trichy,இந்தியா
27-மார்-201315:08:03 IST Report Abuse
LAX//சுந்தர் சீசீ வாழ்க?// நீங்க உண்மையிலேயே 'அமுக்குசாமி'தான்....
Rate this:
0 members
0 members
5 members
Cancel
sathya - chennai,கத்தார்
26-மார்-201310:02:25 IST Report Abuse
sathya அலுவலகத்திற்கு போக முடியலை. மக்களுக்கு சேவை செய்ய முடியலை, ....என்ன ஒரு நகைச்சுவையான பதில் சொல்லிருக்கார் பாருங்கள் ..அஞ்சாநெஞ்சன் அழகிரி ...
Rate this:
2 members
1 members
56 members
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201309:55:10 IST Report Abuse
Jeyaseelan அழகிரியின் புறக்கணிப்பு நேற்று breaking news, பெட்டி செய்தி, குட்டி செய்தி, தலைப்பு செய்தியாக தினமலரில் வந்து தினமலர் வாசகர்களை மகிழ்வித்தது மட்டுமில்லாமல் இன்றும் அந்த செய்தி முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. அழகிரிக்கு தினமலர் கொடுக்கும் அளவுக்கு கூட திமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை, கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
Rate this:
8 members
2 members
31 members
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201309:53:51 IST Report Abuse
GANAPATHI V இந்த கொசு கூட்டம் தொல்லை தாங்க முடியலப்பா .....? அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா?
Rate this:
3 members
1 members
12 members
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
26-மார்-201309:43:33 IST Report Abuse
JAY JAY நிருபர் ரசித்து ருசித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.. ஏனென்றால் செயற்குழு என்கிற பெயரில் ஒரு முழு நீள காமெடி படம் அரங்கேறியுள்ளது அங்கே.. கலைஞருக்கு தொண்டை வலியாம்..அதனால் பேசமுடியவில்லையாம்..ஏங்க, அறிவாலயத்துல ஒரு VICKS ACTION 500 கூடவா இல்லை? ......காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமாம்...அது என்ன திமுக செயற்குழுவா? அழகிரி புறக்கணித்தது போல, இந்தியாவும் புறக்கணிக்க?.....குஷ்பு , சிறப்பு விருந்தினராமே... அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் சிரிப்பு விருந்தினர்களா?....." அலுவலகத்துக்கு போக முடியல...அதனால சேவை செய்ய முடியல... " ஒரு வேளை அழகிரி , கருணாநிதியை முதலில் சந்திக்கும்போதே , இதே கருத்தை சொல்லியிருப்பாரோ... அதுல வாயடைத்து போனவர் தான்.. செயற்குழு முடியும் வரை வாயே திறக்கவில்லை போலும்.... ஆக மொத்தம் காமெடி தான் போங்க... அரசியலில் சந்தானமும் , பவர் ஸ்டாரும் இல்லாத குறையை ஸ்டாலினும் அழகிரியும் தீர்த்து வைத்து விடுவார்கள் போல....
Rate this:
2 members
0 members
85 members
Cancel
spk - tirupur,இந்தியா
26-மார்-201309:43:31 IST Report Abuse
spk engu கரண்ட் இல்லாம 16 மணி நேரம் அவன் அவன் சாகுறான், அதை கேட்காம அழகிரி வரல ஆட்டு குட்டி வரல ன்று நியூஸ் போடர தினமலரே, நீர் நமது எம் ஜி ஆ ரையும் மிஞ்சிவிட்டீர்.
Rate this:
17 members
1 members
35 members
LAX - Trichy,இந்தியா
27-மார்-201315:13:32 IST Report Abuse
LAXகேட்டா உடனே வர்றதுக்கு கரண்ட்டு என்ன ஜீபூம்பாவா? எதுக்கெடுத்தாலும் எப்போ பாத்தாலும் "16 மணிநேரம் 26 மணிநேரம் கரண்ட்டு வரலை"ன்னு பஜனை பல்லவி பாடாதீங்க.. காலைல பல் தேய்க்க தண்ணி வரலன்னா.... அதையே சொல்லிக்கிட்டு உக்காந்துட்டே இருப்பீங்களா? வேறு வேலைகளையும் பாருங்க.....
Rate this:
0 members
0 members
106 members
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-மார்-201309:42:32 IST Report Abuse
villupuram jeevithan ஹா, ஹா, அலுவலகத்திற்கு போக முடியலை. மக்களுக்கு சேவை செய்ய முடியலை,
Rate this:
1 members
0 members
32 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.