TN house suspends 6 DMDK MLAs for a year | தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தண்டனை குறைப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தண்டனை குறைப்பு

Updated : மார் 26, 2013 | Added : மார் 25, 2013 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
TN house suspends 6 DMDK MLAs for a year தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் நீக்கம்

சென்னை: சட்டசபையில் நடந்த கை கலப்பு தொடர்பாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேருக்கு , ஓராண்டுக்கு தண்டனையை 6 மாதமாக குறைத்து முதல்வர் ஜெ., இன்று குறைத்தார். இதில் அதிருப்தி அடைந்த தி.மு.க., தே.தி.மு.க.,, இடதுசாரி கட்சியினர் இன்றும் வெளிநடப்பு செய்தனர். இந்த தண்டனை குறைப்பு போதாது என மு.க., ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில், சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை, பிப்., 2ம் தேதி, கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்து, உரை நிகழ்த்தினார். கூட்டத்தொடரின் கடைசி நாளான, பிப்., 8ம் தேதி, கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., ஆதரவு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., வான, தமிழழகன், துணை கேள்விக்கு அனுமதிக்கப்பட்டார்.புகழாரம்: அதில், ""முதல்வரை பார்த்த பின் தான், என் தொகுதியிலேயே என்னை மக்கள் மதித்தனர். ஒரு முறை பார்த்ததிலேயே, என் தொகுதி பிரச்னைகள் தீர்ந்துவிட்டன. தொடர்ந்து முதல்வரை நான் சந்தித்தால், என் தொகுதி, தமிழகத்தில் முதல் தொகுதியாக மாறும். எனவே, தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள், என் வழியைத் தொடருங்கள்,'' என்றார். இதற்கு, தே.மு.தி.க., கொறடா சந்திரகுமார் உட்பட அக்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, எழுந்து சென்று, தமிழழகனை முற்றுகையிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டினர். இவர்களை, அ.தி.மு.க., ஆதரவு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன், அருண் பாண்டியன் ஆகியோர் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஒரு கட்டத்தில், மைக்கேல் ராயப்பனை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாக்கினர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இடையே நடந்த மோதலால், சபை ரணகளமானது. இதையடுத்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். ""சபையில், கலவரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள், சபைக்கு உகந்ததாக இல்லாததால், "வீடியோ' காட்சிகளை பார்த்து, இவர்கள் மீது, சட்டசபை விதி, 226ன் கீழ் நடவடிக்கை எடுக்க, சட்டசபை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்,'' என, சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று, 2013 - 14ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான பொது விவாதம் துவங்கியது. சட்டசபை உரிமைக் குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், "உரிமைக் குழு' அறிக்கையை, சபையில் தாக்கல் செய்தார். அப்போது, நிதியமைச்சர் பன்னீர் செல்வம், ""சபை உரிமைக் குழு' தலைவர் தாக்கல் செய்த தீர்மானம் இன்றே, இப்போதே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,'' என்றார். இதையடுத்து, ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, தே.மு.தி.க., - தி.மு.க., மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், "இந்த தீர்மானம் குறித்து விவாதித்து நிறைவேற்ற வேண்டும்' என்றனர். இதற்கு சபாநாயகர், ""இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை; பிப்., 8ம் தேதி, சபையில் ஒரு சில உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை எல்லாரும் பார்த்தோம். உறுப்பினர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது,'' என்றார். இதன் பின், சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சபாநாயகர் அறிவித்தார்.


உத்தரவு: பேரவை முன்னவர் கொண்டு வந்து, சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், நல்லதம்பி, செந்தில் குமார், அருள்செல்வன் ஆகிய, ஆறு தே.மு.தி.க., உறுப்பினர்கள், இன்றிலிருந்து (நேற்று) ஓராண்டு காலத்திற்கு, சபை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த காலத்தில், சட்டசபை உறுப்பினர் என்ற முறையில், எவ்விதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற முடியாது. எனவே, தே.மு.தி.க., உறுப்பினர்கள் ஆறு பேரும், சபையை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க., - தி.மு.க., மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.


எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்குமா? தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்து தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆறு பேரும், எம்.எல்.ஏ.,வுக்கான தகுதிகளைப் பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தே.மு.தி.க.,வின் எம்.எல்.ஏ.,க்கள் பலம், 29ல்இருந்து, 23 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில், எதிர்க்கட்சி அந்தஸ்துடன் தே.மு.தி.க., நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, சட்டசபை செயலர் ஜமாலுதீன் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தை நீக்கி, என்ன தண்டனை அளிக்கப்பட்டதோ, அதே தண்டனை தான் ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஓராண்டு என, காலத்தின் அளவு, இந்த தண்டனையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, ஜமாலுதீன் கூறினார். இது பற்றி, தமிழக எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, பாலசுப்ரமணியம் கூறியதாவது: சட்டசபையில், தே.மு.தி.க.,வின் பலத்தைக் குறைக்க, ஆளும் கட்சி செயல்படுகிறது. ஏற்கனவே, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இப்போது, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டுக்கு நீக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆறு பேரும், தற்காலிக நீக்கம் தான் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், சட்டசபையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம் எப்போதுமே குறைந்து விடாது. எனவே, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், சட்டசபைக்குள், சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், என்ன நடக்கும் என்பதை, யூகிக்க முடியவில்லை. இவ்வாறு, பாலசுப்ரமணியம் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-மார்-201313:46:48 IST Report Abuse
Matt P முதலில் சபை உறுப்பினர்கள் தவறு செய்திருந்தால் செய்தவர்களுக்கு தண்டனை விதிப்பது சபாநாயகராக தான் இருக்க வேண்டும். ,,,முதல்வர் அல்ல...சட்டசபையில் முதல்வரும் ஒரு உறுப்பினர் எல்லா உறுப்பினர்களையும் போல் வளர்ந்து வரும் கட்சியான தே மு தி கவுக்கு (ஒரு வருட) தண்டனை விதிப்பது தே மு கவின் வளர்ச்சியை தடுத்து வ்ழல் கட்சியான தி மு கவின் வளர்ச்சிக்கு வித்தாக அமைந்து விடக்டாது. ,...சபாநாயகர் நீதிபதி போன்றவர் ஆளுங்கட்சியின் கையாள் இல்லை என்பதை நியாய உணர்வால் நியாயமாக நடந்து கொள்தல் தேவை
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
27-மார்-201300:28:29 IST Report Abuse
ANBE VAA J.P. நேற்றைய தினமலரில் எழுந்த வாசகர்களின் கண்டன கருத்தை பார்த்தாவது இந்த அம்மையார் திருத்தி கொள்வது நல்லது ., ஒருவேளை இந்த அளவுவாவது இறங்கி வந்தது அதனை படித்தபின்னர் தானா என்று தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Ragavi As - madurai vandiyur,இந்தியா
26-மார்-201309:55:36 IST Report Abuse
Ragavi As அம்மா எது செய்தலும் சரியாகத்தான் இருக்கும் யாரும் சந்தேக படவேண்டாம் எதிரிகட்சிகளுக்கு வேறு வேலை இல்லை ஆறு MLA நீக்கம் சரியானதே
Rate this:
Share this comment
ANBE VAA J.P. - madurai,இந்தியா
27-மார்-201300:22:39 IST Report Abuse
ANBE VAA J.P.ஆமாம் 3 மாதத்தில் மின்வெட்டை நீக்குவனு சொல்லி வாக்களித்த உங்களுக்கு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு 16 மணிநேர மின்தடை கொடுத்துள்ளதும் அதில் நாடு ராத்திரியில் ஒரு மணி நேரத்திற்கு ஒருதடவை மின்சாரம் துண்டிக்க பட்டு மக்களை வியர்வை சிந்த வைத்துள்ளது பற்றியும் யாரும் சந்தேக படவேண்டாம் அதுவும் சரியே ? அப்படி தானே ராகவி அவர்களே ...
Rate this:
Share this comment
Cancel
RAJKUMARBALU - KUTHALAM,NAGAI.DT,இந்தியா
26-மார்-201308:56:03 IST Report Abuse
RAJKUMARBALU எந்த ஒரு செயலையும் செய்யும் முன் வரும்காலம் என்று உள்ளது .அதை யோசித்து நடந்தால் இது போல செய்யமாட்டிர்கள் .நேரம் ,காலம்,எல்லாம் சரியாக இருந்தால் இது போன்ற தவறுகள் ஏற்படாது .யோசிப்பது நல்லது .யோசியங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
26-மார்-201308:51:16 IST Report Abuse
Erode kingcobra மிக மோசமான தீர்ப்பு , அவர்கள் செய்த செயலுக்கு அவர்களின் தலைவர் மிக வருத்த படவேண்டி உள்ளது ,இருந்தாலும் அம்மா மனது வைத்து அவர்களுக்கு தண்டனை குறைத்து விடுவார்கள் என்று நம்புவோம் .அம்மாவின் உத்தரவு இல்லாமல் இது நடக்காது , நடந்திருக்காது .எதிர் கட்சிகளை பயமுறுத்த எடுத்த நடவடிக்கை , கண்டிப்பா சபையின் கண்ணியத்தை காக்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் ,எதிர் கட்சி வாய் மூடி இருக்க இது ஒரு வழி ,எல்லாம் அம்மாவுக்கே வெளிச்சம் ,அம்மா புகழ் ஓங்குக ???????????
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
26-மார்-201308:42:12 IST Report Abuse
PRAKASH சட்டசபை நடத்த சொன்னா அங்க போய் சின்ன புள்ளங்க மாதிரி இவன் தள்ளி விட்டுட்டான் அவன் இடிசுட்டானு சொல்லிக்கிட்டு ,, எல்லாம் எங்க தலை எழுத்து
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201307:53:08 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி போச்சே போச்சே... ராஜ்ய சபை கான்டீன் வடை போச்சே.....
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
26-மார்-201307:22:16 IST Report Abuse
Baskaran Kasimani மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்களை இவர்களின் சர்வாதிகாரத்தால் ஓராண்டுக்கு இடை நீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். அந்தத்தொகுதிகளை இனி யார் கவனிப்பார்கள்? அம்மாவே நேரடியாக கவனிப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Srikrishnan Kuppuswamy - San Antonio,யூ.எஸ்.ஏ
26-மார்-201307:04:58 IST Report Abuse
Srikrishnan Kuppuswamy யாராவது விஜயகாந்திடம் சொல்லக்கூடாதா சட்டசபை சினிமா அரங்கம் இல்லை என்பதை? ஒரு வருடம் அதிகம் இல்லையா?எதிர்ப்பை எதிர்நோக்கி இருப்பது விவேகம் இல்லையா?நட்பு ரீதியாக பழக தமிழர்களுக்கு சொல்லியா தெரியவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
26-மார்-201307:00:23 IST Report Abuse
ஆரூர் ரங கேப்டன் மட்டும் இவர்களை சுதந்திரமாக விடட்டும். உடனே அம்மா காலில் விழுவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை