Advertisement
"கெயில்' நிறுவனம் உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
23:39

சென்னை: ""கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் நிலங்களில் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரம், எரிவாயு குழாய்களை பதிக்க, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம், நேற்று துவங்கியது. கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், கெயில் விவகாரம் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஏழு மாவட்டங்கள் பாதிப்பு: இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் உரை: தமிழக அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து, பெங்களூரு வரை, தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் கீழே, 310 கி.மீ., தூரத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு: இருபது மீட்டர் அகலத்தில், குழாயை பதிக்க, 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற, கெயில் நிறுவனம், நடவடிக்கை எடுத்தது. இதற்கான இழப்பீட்டுத் தொகை, நிலத்தின் சந்தை மதிப்பில், 10 சதவீதம் ஆகும். இத்திட்டம், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதனால், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 28ம் தேதி, அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும், நான் ஆலோசனை நடத்தினேன். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விவசாயிகளிடம், கருத்துகள் கேட்கப்பட்டன. தலைமைச் செயலர் நடத்திய இந்த கூட்டங்களில், 134 கிராமங் களில் இருந்து, 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். "எரிவாயு குழாய் அமைப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்பாட்டு உரிமையை, கெயில் பெறுவதால், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல், நிலத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்' என்பது உள்ளிட்ட, 10 கருத்துகளை வலியுறுத்தி உள்ளனர்.
கெயிலுக்கு என்ன பிரச்னை...: கடந்த 8ம் தேதி, கெயில் நிறுவனம், தமிழக அரசு தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைவழியாக, குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொண்டால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை, விளக்கமாக கூறி உள்ளது. நிறுவனத்தின் கருத்துகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சேபனைகள் ஆகியவற்றை, தமிழக அரசு, கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு, வலுவான தொழில்நுட்ப காரணங்கள் எதையும், கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம், எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, தெள்ளத் தெளிவாக கூறி உள்ளனர். விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சி ஏற்படுவதை, நியாய உணர்வு கொண்ட யாரும், ஏற்க மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனில், அதனால், யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவை எடுத்து உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால், திரவ எரிவாயு, தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
வாழ்வாதாரம் பாதிக்கும்:

* எனவே, கெயில் நிறுவனம், விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்.


* குழாய்களை, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* கெயில் நிறுவனம், ஏற்கனவே குழாய்களை பதிக்க, நிலங்களில் தோண்டியுள்ள குழிகளை, உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை, அதன் முந்தைய நிலையில், விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.


* விவசாயிகள், விவசாயப் பணிகளை தொடரும் வகையில், ஏற்கனவே பதித்த குழாய்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.


* இத்திட்டத்தால், பழ வகை மரங்களையும், பிற கட்டுமானங்களையும் இழந்து வாடும் விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டை, கெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.


* தமிழக அரசின் முடிவுகள், ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும்.


* தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிப்பு நடவடிக்கைகளை, கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு, திரவு எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், கெயில் நிறுவனம் எடுக்க வேண்டும்.


* திட்டம் தொடர்பாக, விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும், திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


* திட்டத்திற்காக, மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தமிழக அரசு, உடந்தையாக இருக்காது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
26-மார்-201305:42:22 IST Report Abuse
Pannadai Pandian "திட்டத்திற்காக, மக்கள் அல்ல மக்களுக்காகவே திட்டம்" - சூப்பர் போங்க. முசோலினியின் கொடுங்கோல் ஆட்சி போல, மக்கள் விருப்பத்துக்கு எதிராக மத்திய அரசும் மத்திய அரசின் ஸ்தாபனங்களும் ஈடுபடுகின்றன என்பதை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் கண்டு அனுபவித்து கொண்டிருக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சனையில் கடும் மக்களின் எதிர்ப்புக்கிடையே படுகொலைக்கு துணை போயினர், அஸ்ஸாம், தெலுங்கான பிரச்சனையில் வங்கதேசத்தினருக்கு வக்காலத்து வாங்கியது காங்கிரஸ் அரசு, தெலுங்கானா மக்களின் எண்ணத்தை நிறைவேற்றாமல் சால்சாப்பு சொல்லி இழுத்து கொண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளை தோல்களுக்காக இங்கு இருக்கும் சிறு குறு வியாபாரிகளின் வயற்றில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அடித்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புது புது ஊழல்கள் அவை நம்ம ஊரு கன்னக்கோல் பார்டிகள் வெளியேறிய பின்னும் தொடர்கிறது. இவர் கற்றுக்கொடுத்ததை மாணவர்கள் நன்கு கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றுவிட்டனர். ராணுவத்தில் ஊழல் நடந்தது உண்மை என்று ராணுவ மந்திரியே ஒத்துக்கொண்டிருக்கிறார். இதுகாறும் பழைய ராணுவ ஜெனரல் வி,கே. சிங் சொன்னதை எல்லாம் மறுத்து வந்த அந்தோனி, தன்னுடைய ரத்த உறவுகள் இத்தாலிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என்று சொன்னவுடன் தற்போது ஆம்...ஆம்...ப்லா.....ப்லா....ப்ளேக் ஷீப்.......போர் பேக்ஸ் புல்....என்று ஒத்துக்கொள்கிறார். நமது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நம்மை எங்கே இழுத்து செல்கிறது என்பதை சற்று சிந்தியுங்கள். இந்த கெயில் நிறுவனம் கையகப்படுத்தும் நிலம் நில உரிமைதாறரின் விருப்பத்துக்கெதிரான துஷ் அதிகார போக்கு. அதிகாரம் கையில் உள்ளது என்று ஆணவமாக செயல்படும் போக்கு. அவர்களின் ஷரத்துக்களின் ஒன்று விவசாயிகள் இந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்ப்படும் வகையில் விவசாயம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை. ஏண்டா......நீ வந்து என் நிலத்தில் குழி தோண்டி பிணத்தை புதைப்பே, அந்த பொணத்துக்கு கீறல் விழுந்தாள் 7 ஆண்டுகள் சிறையா ??? இந்த குழாய்கள் செல்லும் பாதை கோவை, ஈரோட, தருமபுரி, கிருஷ்ணகிரி ....... இந்த பகுதிகள் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் உள்ள இடங்கள். இந்த குழாய்கள் பதிக்கும் இடத்தில் உள்ள எல்லா கிணறுகளும் தூர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு உள்ள ஒரே தண்ணீர் ஆதாரமும் பாதிக்கப்படாதா ??? இந்த குழைகளை ஆற்று படுகை ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரத்திலும் ஏன் படிக்க கையில் நிறுவனம் முயற்சிக்கவில்லை ??? ஏழைகளின் வயிற்றில் அடித்து செலவை குறைக்கிறதா ??? கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பல விஷயங்களின் பார்த்திருக்கிறேன், தற்போது ஜெயா மக்கள் நல விஷயங்களின் அதிகம் நாட்டம் காட்டுகிறார். இந்த விஷயத்திலும் மத்திய அரசின் அராஜக போக்கை எதிர்த்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். இவை யாவும் இவரது மகுடத்துக்கு அலங்காரம் செய்யும் வைரங்கள். இதே போல மின்சாரத்திலும் அதிக கவனம் செலுத்தி மக்களின் துயரத்தை காக்க வேண்டும். எதையும் மூடி மறைக்காமல் பழைய ஆட்சிபோல் அல்லாமல் நடந்து கொள்ளவேண்டும். பழைய ஆட்சியாளர்கள் திட்டம் போடுவதே கொள்ளை அடிக்க என்ற நிலைமையை மாற்றி திட்டம் போடுவது மக்கள் நலனுக்காக என்று மாற்றிய அம்மாவுக்கு நன்றிகள் கோடி.
Rate this:
164 members
3 members
281 members
Share this comment
Cancel
puraa - Chennai,இந்தியா
26-மார்-201305:05:49 IST Report Abuse
puraa விவசாயிங்களை விடுங்க சார் தமிழனுடைய நிலைமையை பாருங்க சார் ஒருவேளை, இது தான் குனிய குனிய குட்டுறதோ? வர வர தமிழனை இந்தியனா? என்று கேட்பார்கள் போலும்? தமிழனுக்கு மீன் பிடிக்க முடியாத படி இலங்கைக்காரன் வெட்டுகிறான், சுடுகிறான் தமிழனுக்கு தண்ணீர் விடமாட்டேன்னு ஆந்திராக்காரன் சொல்றான் தமிழனுக்கு தண்ணீர் விடமாட்டேன்னு கர்நாடகக்காரன் சொல்றான் தமிழனை தண்ணீர் விட வேண்டுமே என்று அணையை உயர்த்த மாட்டேன்னு மலையாளத்தான் சொல்றான் தமிழ்நாட்டில தான் அணு மின்நிலையம் தொடங்கனும்னு மத்திய சர்க்கார் சொல்றான் இப்போ கதை என்னன்னா? கன்னடதானுக்கு குழாய் பதிக்க மலையாளத்தான் தமிழ்நாடு தான் வேணும்னு சொல்றான் இப்படியே போனால், தமிழன் என்னதான் செய்வான்? பாரதத்திலிருந்து வெளியேறி எங்கே தான் செல்வது?
Rate this:
1 members
0 members
100 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
26-மார்-201304:55:21 IST Report Abuse
Mohandhas ஒரு பிரச்சனையை மறக்க இன்னொரு பிரச்சனையை கிளப்பிவிடுறதுதான் அரசியல்தனம்...
Rate this:
21 members
0 members
80 members
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201304:53:52 IST Report Abuse
Sivakumar Manikandan நீங்க ரெம்ப கில்லாடி போங்க ..........பாதி கிணறு தாண்டியாட்சி ...பைப் லைன் திருப்பூர் வரைக்கும் வந்தாச்சி மீதி தூரம் போக எவ்வளவு நாள் ஆகும்?............முதல்லையே முடியாதுன்னு சொல்லி இருந்த வேற பக்கம் போடுருப்பாங்க ............
Rate this:
39 members
1 members
98 members
Share this comment
Krishnaswamy - coimbatore ,இந்தியா
27-மார்-201314:32:28 IST Report Abuse
Krishnaswamyஎன்னடா கருத்து சொல்ல வந்திட்ட. முட்டாள் தனமாக பேசக்கூடாது. கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் ஒரு அடி கூட விவசாய பூமிகலில் போடப்படவில்லை. என்னவோ நேரில் வந்து பார்த்த மாதிரி சொல்லியிருக்கற. பைப் போட்டு விட்டால் அந்த நிலம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பும் ஜீரோ. முதலில் பிரச்சினைகளை புரிந்து கொண்டு கருத்து சொல்ல வாருங்கள்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
26-மார்-201304:48:39 IST Report Abuse
Skv சாலை ஓரங்களில் வரத்து செரியெ .அங்கு மின் வயர்களுக்கும் தொலைபேசிக்கான வயர்களும் செல்லக்கூடுமெ தரிசுநிலங்களை உபயோகிக்கலாமே ?விவசாயியின் வயத்துலே ஏன் அடிக்கணும் அல்ரெடி அரசியல்வாதிகளின் உபயம் மலைகள் எல்லாம் காக்கா தூக்கிண்டு போயிட்டுது
Rate this:
6 members
0 members
23 members
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
26-மார்-201304:45:03 IST Report Abuse
G.Prabakaran நெடுஞ்சாலைகளின் ஓரம் குழாய்கள் பதித்தால் இனிவரும் காலங்களில் தேவைக்கேற்ப நான்கு வழி சாலைகள் ஆறு வழி சாலைகளாக விரிவாக்கம் செய்ய முடியாது. வடமாநிலங்களில் கிழக்கு மேற்காக குஜராத் வரை குழாய்கள் விலை நிலங்கள் மூலமாக கொண்டு செல்ல அங்கு யாரும் எதிர்ப்பு செய்ய வில்லை. இப்படி எல்லா திட்டங்களுக்கும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு காட்டுவதை விடுத்து அந்த எரிவாயு குழாய்கள் மூலம் வரும் எரிவாயு கொண்டு தமிழ் நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் துவக்க தமிழக அரசே முயல வேண்டும். விளைநிலங்கள் மூலம் செல்லும் குழாய் பதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய நிலங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்க செய்ய வேண்டும்.
Rate this:
59 members
1 members
67 members
Share this comment
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மார்-201304:22:25 IST Report Abuse
தமிழவேல் வயல்களில் குறிப்பிட்ட ஆழத்தில் பதியின் மேல் பகுதியில் அடையாளமிட்டு பதிவதே நல்லது. இப்படிதான் வெளிநாடுகளில் நடக்கின்றன.. ரோட்டோரத்தில் கொண்டுபோனால் ஆபத்து அதிகம்.. நம்மால் ரோட்டில் பதித்த நீர் குழாய் களையே பர்ரமரிக்க இயலவில்லை . ஆங்காங்கு உடைந்து ( உடைத்து) சரிசெய்யாமல் வீணாகின்றது .. இரானிலிருந்து பாக் வழியாக இந்தியாவிற்கும் இதுபோலதான் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன... அதற்காக ரோடு போடா முடியாது..
Rate this:
75 members
0 members
88 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-மார்-201304:02:39 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்மியோட பழைய அறிக்கை.. வீட்டுக்கு வீடு குழாயில் சமையல் வாயு கிடைக்கும் என்று.. நான் அன்னிக்கே சொன்னேன், ஏற்கனவே கார்ப்பரேஷன் குழாயில் புஸ்ஸ்னு கேஸ் தானே வருதுன்னு.. இப்போ, GAIL லோட இந்த திட்டத்தையும் இழுத்து மூடிட்டா ?? ரெண்டு பேரும் சேர்ந்து பேசி, நிவாரணமோ, நிலங்களை பாதிக்காத வகையில் குழாய் பதிக்க வழிமுறைகளை மேற்கொண்டோ, இதை நடத்திக் காட்ட வேண்டும்.. எரிவாயு வந்தால், பலப் பல தொழில் மற்றும் மின் திட்டங்களை கொண்டுவர முடியும்.. பெங்களூருக்கு கேஸ் போகக் கூடாதுன்னு குறுகிய நோக்கில் பாக்கக் கூடாது.. பத்தாவது மட்டும் படித்ததால் முட்டாள் ஆவதில்லை.. பத்தாவதற்கு மேல் சிந்திக்காமல் இருப்பதால் தான் முட்டாள்கள் ஆகிறார்கள்..
Rate this:
113 members
0 members
134 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
26-மார்-201302:18:08 IST Report Abuse
NavaMayam அதை விடுங்க இதை சொல்லுங்க ...மக்களுக்காக மின்சாரமா , மின்சாரத்துக்காக மக்களா .... இருக்கிற மக்களுக்காக மின்சாரம்னா தொடர்ந்து எல்லோருக்கும் கிடைக்கணும் .. அனால் இருக்கிற மின்சாரத்துக்காக மக்கள்ன்னா , சென்னை மக்களுக்காக மட்டும்தானா அது....
Rate this:
11 members
0 members
107 members
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
26-மார்-201301:02:51 IST Report Abuse
Indiya Tamilan திட்டத்திற்காக, மக்கள் அல்ல மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது ஜெயலலிதா அவர்களே இந்த மாதிரி பஞ்ச் டயலாகையெல்லாம் விட்டு விட்டு மின்வெட்டு பிரச்சனையை இரண்டு வருடம் ஆகியும் ஏன் தீர்க்க முடியவில்லை? என்பதற்கு மக்களிடம் விளக்கம் கொடுங்கள்.
Rate this:
16 members
1 members
118 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.