E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மூன்றாவது அணியை மீண்டும் உருவாக்க முலாயம் சிங் தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
23:40

புதுடில்லி: மூன்றாவது அணி அமைக்கும் நடவடிக்கைகளில், சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்' என, கட்சி தொண்டர்களை உசுப்பேற்றியுள்ள, முலாயம், ஐ.மு., கூட்டணி அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும், மறைமுகமாக ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க., வாபஸ்: காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., சமீபத்தில் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து, டில்லியில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், காங்., நிம்மதியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பிரதமர் பதவி மீது, ஆசை வந்து விட்டது. அதற்கு, இதுதான் சரியான நேரம் என, கணக்கு போட்டுள்ள அவர், அதற்கு ஏற்றார்போல் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஒரு கட்சி ஆட்சியில்லை: மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலியில் நேற்று முன்தினம் நடந்த, சமாஜ்வாதி கட்சி பொதுக் கூட்டத்தில், முலாயம் சிங் பேசியதாவது: மத்தியில், ஒரே கட்சியின் ஆட்சி, இனி நடக்காது. மாநில கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சியே அமையும். ஒரே கருத்துள்ள, மாநில கட்சிகள், இதற்காக ஓர் அணியில் திரள வேண்டும். காங்., - பா.ஜ., அல்லாத, மூன்றாவது கூட்டணியை அமைத்து, ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரப் போகிறது; கட்சித் தொண்டர்கள், இதற்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு, முலாயம் சிங் யாதவ் பேசினார்.
திரை மறைவில்: மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சிக்காக, தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களான, ராம்கோபால் யாதவ், நரேஷ் அகர்வால் ஆகியோரை, திரை மறைவு அரசியல் களத்துக்குள் இறக்கி விட்டுள்ளார். இவர்கள், தி.மு.க., திரிணமுல், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன், மூன்றாவது அணி அமைப்பது குறித்து, பேச்சு நடத்தி வருவதாக, சமாஜ்வாதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சமாஜ்வாதி மூத்த தலைவர்களில் ஒருவரான, ராம் சந்திர குஷ்வாகா கூறியதாவது: காங்கிரஸ் - பா.ஜ., கட்சிகள் மீது, நாட்டு மக்கள், வெறுப்பில் உள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத, மூன்றாவது அணியை, மக்கள் விரும்புகின்றனர். இந்த மூன்றாவது அணியில், சமாஜ்வாதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும். அடுத்த லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி தலைமையிலான, மூன்றாவது அணி, ஆட்சி அமைக்கும்; முலாயம் சிங், பிரதமராவார். இவ்வாறு, ராம் சந்திரா கூறினார்.
தயக்கம்: இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகளை, மூன்றாவது அணிக்குள் சேர்ப்பதே சிரமமான காரியம். மூன்றாவது அணியில் சேருவதற்கு, இந்த கட்சிகள் தயங்குகின்றன. மற்ற கட்சிகளை பற்றி பிரச்னை இல்லை. அடுத்த லோக்சபா தேர்தலை, முன் கூட்டியே சந்திப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து, சமாஜ்வாதி தலைவர்கள் காத்திருக்கின்றனர். வரும், மே மாதம், பார்லிமென்டில், நிதி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுக்காத வகையில், சில கட்சிகளை சரிக் கட்டி விட்டால், மத்திய அரசு, தானாகவே கவிழ்ந்து விடும். நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, சமாஜ்வாதி வட்டாரங்கள் தெரிவித்தன. சமாஜ்வாதி கட்சிக்கு, லோக்சபாவில், 21 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசுக்கு, தற்போது இவர்கள், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர். இந்த ஆதரவை வாபஸ் பெற்று, அரசுக்கு ஆதரவு அளித்து வரும், வேறு சில கட்சிகளையும், தங்கள் பக்கம் இழுத்து விட்டால், அரசை கவிழ்த்து விடலாம் என, சமாஜ்வாதி தலைவர்கள், கருதுகின்றனர்.
இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர், பல்பீர் புஞ்ச் கூறுகையில், "" மூன்றாவது அணி, நான்காவது அணி என்பதெல்லாம், கற்பனை செய்வதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், உண்மையில், அதுபோல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் தான், இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புகின்றனரோ தெரியவில்லை,'' என்றார்.
"சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்': முலாயம் சிங் யாதவின் மிரட்டலுக்கு, காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் அளித்துள்ள பதில்: இதுபோன்று, மிரட்டல் விடுப்பதே, முலாயமுக்கு வேலையாகி விட்டது. இதற்கு முன், பலமுறை, அவர், இதுபோல் மிரட்டியுள்ளார். காங்., கட்சிக்கென, தனிக் கொள்கை உள்ளது. காந்தி, நேரு போன்ற தலைவர்கள், உருவாக்கி கொடுத்துள்ள, கொள்கைகளில், நாங்கள் பயணிப்போம். மக்களை தவிர, வேறு யாருக்கும் பயப்பட மாட்டோம். இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார். காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறுகையில், ""மூன்றாவது அணி என்பது, ஒரு பொய் தோற்றம். கடந்த, 20 ஆண்டு அரசியலை திரும்பி பார்த்தால், மூன்றாவது அணி, நான்காவது அணி என்பதெல்லாம், ஒரு மாயை என்பது, தெரிய வரும்,'' என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
27-மார்-201300:26:34 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi ஊழல் மற்றும் மக்கள் பிரச்சினைகளில் அக்கறையின்மை இவற்றில் காங்கிரஸ் பிஜேபி கட்சிகள் ஒரே நேர்கோட்டில் உள்ளன.எனவே மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். l .k .அத்வானி கூட இந்த கருத்தை சொல்லி இருப்பதிலிருந்து மக்களின் கோபத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு வலிமையான மூன்றாவது அணி உண்டானால் மக்கள் ஆதரிக்க தயாராக உள்ளனர்.v .p சிங்க் போன்ற நல்ல மனிதர்கள் தலைவர்களாக மூன்றாவது அணிக்கு கிடைக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
26-மார்-201305:40:10 IST Report Abuse
யமதர்மன் அணி என்பது அழகான தமிழ்ச்சொல். அதை இந்த குள்ள நரிகளின் கூட்டத்திற்கு பயன் படுத்த கூடாது. மந்தை என்று சொன்னால் கூட விலங்கினங்கள் கோபித்துக்கொள்ளும்.
Rate this:
1 members
0 members
29 members
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
26-மார்-201302:48:02 IST Report Abuse
Panchu Mani சொந்த சாதி ஓட்டுகளையும், மத சார்பான ஓட்டுகளை வைத்து கொண்டு எல்லா தொகுதியிலும் மிக மிக குறைந்த நூற்றுகணக்கான ஓட்டுகளில் ஜெயித்து ஆட்சி பிடித்தவர் இவர்.. நம்பகதன்மை அற்றவர்
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
26-மார்-201301:55:11 IST Report Abuse
தமிழ் சிங்கம் கண்டிப்பாக மூன்றாவது அணி அமைப்போம். பிஜேபி வெளியில் இருந்து vp சிங் காலத்தை போன்று ஆதரவு தரும். திமுக நாற்பதுக்கு நாருபது பெறும்.அழகிரியை பிரதமர் ஆக்குவோம். ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம். தமிழர்களின் கனவை நிறைவேற்றுவோம். வெற்றி நமதே
Rate this:
38 members
0 members
13 members
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
26-மார்-201301:10:09 IST Report Abuse
Indiya Tamilan இனியும் முலாயம் சிங் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து கொண்டே இருந்தால் உ பியில் அவருக்கு வரும் தேர்தலில் பட்டை நாமம்தான் அவருடைய பிரதமர் கனவும் அவ்வளவுதான் எனவேதான் சுதாரித்து கொண்டுவிட்டார்.எந்த நேரமும் காங்கிரஸ் அரசு கவிழலாம்.
Rate this:
7 members
1 members
29 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
26-மார்-201300:14:18 IST Report Abuse
Thangairaja காங்., பிஜேபி மிக குறைந்த இடங்களிலேயே வெல்லும் வாய்ப்பு உள்ளதால் மாநில கட்சிகள் மீண்டுமொரு முறை ஓன்று சேர வாய்ப்பிருந்தாலும்.... தலைமை பதவி தடுமாற்றமாகத்தான் இருக்கும். முலாயம் தலைமை நம்பிக்கைக்கு உரியதாக இருப்பது கேள்விக்குறியே......திமுக இதனாலேயே சற்று சிந்தித்தே முடிவு செய்யும். முலாயமுக்கு ஜெயாவும் நெருக்கமானவர் தான்....அவரை கூட கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கலாம்...என்ன ஒன்னு பிரதமர் பதவியை அவருக்கு தாரை வார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பத்துநாள் கூட கூட்டணி தாங்காது.
Rate this:
8 members
1 members
28 members
Share this comment
Cancel
கத்திரிக்கு பயந்த கைப்புள்ள மூன்றாவது அணி வந்தால் முதல் இரண்டு அணிகளுக்கு கத்தரி போடப்படும்.
Rate this:
9 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.