"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே: அந்தோணி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கொச்சி: ""ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே. தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.கொச்சியில் நடந்த விழாவில், காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராணுவ அமைச்சருமான, அந்தோணி கூறியதாவது: வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்கு, ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக, இத்தாலி நிறுவனத்துடன், 3,600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், 360 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, நம் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு, இத்தாலி நிறுவனம், லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது; தற்போது, விசாரணை தீவிரமடைந்து உள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே. அதற்கு காரணமானவர்கள், நாட்டு நலனுக்கு எதிரானவர்கள்; அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், கண்டிப்பாக, அவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவத்துக்கு பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கான, புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். உள்நாட்டிலேயே, தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாதுகாப்பு துறையில், அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் விஷயத்தில், அவசரமாக எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை. இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரத்தில், மத்திய அரசு, உறுதியான முடிவை எடுத்தது. இந்த முடிவு, சரியானது என, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் கவுரவமும், நீதியும், நிலைநாட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்தோணி கூறினார். இதற்கிடையே, ரஷ்யாவுடன் சேர்ந்து, போர்க் கப்பல்களை வடிவமைக்கும் திட்டத்தை, இந்தியா மேற்கொள்ளவுள்ளதாகவும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மார்-201305:37:45 IST Report Abuse
Krish Sami திரு. அந்தோணி மகாபாரத தர்மரை போல. ஆனால், இருப்பது திரிடிராஷ்டிரா / துரியோதனா கூட்டதுடன் நல்ல 'பாரதம்'
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
26-மார்-201304:47:10 IST Report Abuse
Mohandhas எவன் வந்தாலும் இந்தியா படுகுழியில் தள்ளபடுவது உறுதி.. தற்போதைய அரசியலில் யோக்கியன் என்று யாரும் இல்லை... மக்கள் தான் திருந்த வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201304:44:20 IST Report Abuse
Sivakumar Manikandan இவருடைய துணைவியார் ஒரு வங்கி ஊழியர் ....எப்போதும் உள்ளதுபோல் ஒரு சின்ன வீடு .........ஆடம்பரம் இல்லாத மத்திய அமைச்சர் .............
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
26-மார்-201303:46:39 IST Report Abuse
Arvind Bharadwaj அதெல்லாம் விடுங்க. ஊழல் எதுவும் இல்லாம ஒரு ஒப்பந்தம் நிறைவேறியிருக்குதான்னு சொல்லுங்க காங்கிரஸ் வரலாற்றுல.
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
26-மார்-201303:07:57 IST Report Abuse
Panchu Mani நான் சொல்லல ..ஆளு பாக்கத்தான் பொறி உருண்டை மாதிரி இருப்பாப்ல..ஆனா நல்ல காமெடி பண்ணுவாப்ப்ள ன்னு
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
26-மார்-201301:59:05 IST Report Abuse
தமிழ் சிங்கம் உண்மையை ஒப்புகொள்வதற்கு பெரிய மனம் வேண்டும். அதனால் மறப்போம் மன்னிப்போம்.
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
26-மார்-201302:37:47 IST Report Abuse
தமிழன்அந்தோனி போன்றோர் தான் ஒப்புக் கொள்ள முடியும். இருக்கும் ஊழல் கறை படியாத சிலரில் இவரும் ஒருவர்....
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
26-மார்-201301:05:31 IST Report Abuse
Indiya Tamilan அந்தோனி போன்ற நல்ல மனிதரும் காங்கிரசில் இருந்துகொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார் பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்