No alliance with congress never after: Stalin | காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: செயற்குழுவில் ஸ்டாலின் திட்டவட்டம் | Dinamalar
Advertisement
காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: செயற்குழுவில் ஸ்டாலின் திட்டவட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

""வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் உறவு வைக்கப் போவதில்லை. கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். அதனால், இனி யாருடைய நிர்பந்தமும், கட்டுப்பாடும் இல்லாமல், கட்சி பணியாற்றலாம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து, தி.மு.க., விலகிய நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று காலை நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, துவக்கம் முதல், கவிழாமல் இருக்க, தி.மு.க., அனைத்து உதவிகளையும் காங்கிரசுக்கு செய்தது. ஆனால், காங்கிரஸ், தி.மு.க.,வுக்கு, எந்த உதவியும் செய்யவில்லை; தி.மு.க.,வையும் பெரிதாக மதிக்கவில்லை. மத்திய அரசிலும், தி.மு.க.,வை தொடர்ந்து அலட்சியம் செய்தது. காங்கிரசுடன் நாம் இணைந்து செயல்பட்டதால், இலங்கை தமிழர் பிரச்னையில், தி.மு.க.,வுடன் இணைந்து போராட வேண்டிய கூட்டணி கட்சிகள், நம்மை விட்டு விலகி, மக்களிடம் நம்மை பற்றி தவறாக விமர்சனம் செய்து வந்தன. தற்போது மத்திய அரசில், கூட்டணியில் இருந்து விலகியதால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., ஓங்கி குரல் கொடுக்கலாம். காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த நாட்களில், நமக்கு மன உளைச்சல் தான் அதிகமாக இருந்தது. இனி, காங்கிரசுடனான கூட்டணி முறிந்தது. வரும் லோக்சபா தேர்தலில், உறவு வைக்கப் போவதில்லை. கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். அதனால், இனி யாருடைய நிர்பந்தமும், கட்டுப்பாடும் இல்லாமல், கட்சி பணியாற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.

- நமது நிருபர் குழு -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prithvi - Chennai,இந்தியா
27-மார்-201300:49:49 IST Report Abuse
prithvi இப்போது மட்டும் அல்ல...........தயவுசெய்து தேர்தல் முடிந்தபின்னரும் காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்று அறிவிக்கலாமே
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
suman - Madurai,இந்தியா
27-மார்-201300:35:37 IST Report Abuse
suman 2014 ஸ்டாலினுடன் பேட்டி: "காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை" என்று சொன்னீர்கள் அனால் இப்போ ஏன் கூட்டணி வைத்தீர்கள்: 1) அது போன வருஷம் இது 2014... ஹி ஹி ஹி... 2) காங்கிரசு தோற்றால் அது நாட்டிற்கு(திமுகவிற்கு) நல்லதல்ல.. வேறு வழியில்லாமல் ஆதரிக்கிறோம் இது மாதிரி என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pandidurai Kannan - Singapore,இந்தியா
26-மார்-201307:18:40 IST Report Abuse
Pandidurai Kannan மக்களே நோட் திஸ் பாயிண்ட்....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
26-மார்-201307:17:32 IST Report Abuse
Baskaran Kasimani கனியை மாட்டி விடுவதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Srikrishnan Kuppuswamy - San Antonio,யூ.எஸ்.ஏ
26-மார்-201307:15:49 IST Report Abuse
Srikrishnan Kuppuswamy கட்சிக்காரர்களை கிராமத்துப்பக்கம் அனுப்பி கட்சியை பலபடுத்த அனுப்புங்கள், ஊருக்கு நன்மை செய்ய அனுப்புங்கள்.
Rate this:
4 members
0 members
4 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
26-மார்-201307:00:42 IST Report Abuse
naagai jagathratchagan பேஷ் பேஷ் ...ரொம்ப நன்னா இருக்கு ...தோப்பனார் ...சொல்லித்தானே தானே சொல்லரீர்...அண்ணா கோச்சிண்டு போறாரே ..அவரை எப்படி சமாதானம் செய்யப்போரீர்.....நீங்க எல்லோரும் ஒத்துமையா இருந்து கோலோச்சினது ..எவ்வளவு சந்தோஷமா இருந்தது .... பாருங்கோ ....இப்போ அடி வயிரெல்லாம் ...கப கப ங்கறது ....மத்தியிலே என்ன பண்ணப்போராளா ....நினைச்சாலே பயமா இருக்கு ...பெரிய புள்ளயாண்டான் வேற ...அவா எனக்கு வேண்டியவா ...அவாளை பகைச்சுக்க முடியாதுன்னு வேற சொல்லற ..ம்ம் ம்ம் ...
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-மார்-201306:58:26 IST Report Abuse
g.s,rajan காரியம் ஆனப்புறம் "கை" யை கழுவியாச்சு. எல்லாம் கண கச்சிதமா அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் ஞாநோதயம் வருது போல இருக்கு
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
26-மார்-201306:37:25 IST Report Abuse
Vilathur Nandhiyar இது தான் தி மு க ..அதன் கொள்கையும் இதுதான் ..அனுபவிக்க முடிகிறவரை அனுபவித்து விட்டு ...ஒன்றுமில்லாமல் உறிஞ்சி முடித்தவுடன் இனிமேல் ஓட்டோ உறவோ இல்லை என்பது ..கடந்த முறை திமுக அரசு தமிழ் நாட்டில் காங்கிரசின் ஆதரவினால் பிழைத்ததை மறந்து விட்டார்கள் ..இதுதான் எம் ஜி ஆருக்கும் நடந்தது ...வை கோவிற்கும் நடந்தது ...இனிமேல் தமிழ் நாட்டு மக்கள் வரும் தேர்தலில் தி மு க உடன் உறவு வைக்கபோவதில்லை என்று எப்போதோ முடிவெடுத்து விட்டது தலைவருக்கு தெரியாதா?
Rate this:
3 members
0 members
36 members
Share this comment
Cancel
26-மார்-201306:23:34 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் எல்லாம் பிரசவ வைராக்கியம்தான். வாசன் கோஷ்டிய வெளிக் கொணர்ந்தாவது தற்காலிக கூட்டணி வைத்து, பின்னர் ராஜீவின் மகனே வா ராப்பிச்சை ஆட்சி தான்னு சங்கமித்திடுவீங்க. தப்பித் தவறி உங்களை எதிர்த்து ஒட்டுபோட்ட ஏமாளி அப்போதுதான் விழித்துக் கொள்வான். தனியா நிக்க திராணி இருந்தா கூட்டுறவு தேர்தலைக் கூட புறக்கணித்ததேன் ?
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
26-மார்-201305:19:14 IST Report Abuse
Krish அதான் 2G ல தின்னு தின்னு குடும்பமே கொளுத்து போயிருச்சுல. 2G என்றால் 2 Garbages - ஒன்னு DMK இன்னொன்னு Congress. உங்க திட்டவட்டம் எல்லாம் வெறும் வட்டதிட்டம் அதாவது முட்டதிட்டம் [Zero]
Rate this:
74 members
0 members
109 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்