Disappointment over govt.,: AIADMK will face tough in Loksabha | லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு காத்திருக்கிறது சவால்: மக்களிடம் அதிகரித்து வரும் அதிருப்தி!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு காத்திருக்கிறது சவால்: மக்களிடம் அதிகரித்து வரும் அதிருப்தி!

Added : மார் 25, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
AIADMK will face tough in Loksabha

கோவை: மின்வெட்டு, வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிப்பு, அதிகரித்து வரும் லஞ்சம், தண்ணீர்ப் பிரச்னை ஆகியவற்றின் காரணமாக, கோவை மக்களிடம் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருவதால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தமிழகத்திலேயே மின்வெட்டால், அதிகபட்ச பாதிப்புக்குள்ளாகியிருப்பது கோவை மாவட்டம்தான். சென்னைக்கு அடுத்ததாக, அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்த மாவட்டத்தில் மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பையும், இழப்பையும் கணக்கிடவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டை அமல் படுத்துவதைப்போல, கோவைக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசின் காதுகளை எட்டவேயில்லை; இதனால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, முதல்வரிடம் உளவுத்துறை உட்பட யாரும் எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை. இந்த கோபம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த இரு ஆண்டுகளில், கோவையில் நடந்த வளர்ச்சிப் பணிகள் என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழத் துவங்கியுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், அவிநாசி சாலை விரிவாக்கம் துவங்கி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் திறப்பு, டைடல் பார்க், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட், புதிய பூங்காக்கள், நடைபாதைகள் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. இவற்றைத் தவிர்த்து, காந்திபுரத்தில் பல அடுக்கு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதற்கான அரசாணை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் தாமதமடைந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தேர்தல்களிலும், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, கோவைக்கென்று சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்தனர்; அதற்கேற்ப, காந்திபுரம் பாலத்துக்கு கூடுதல் நிதி, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் என பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். அவர், இந்த திட்டங்களை அறிவித்து இரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த திட்டங்களிலும் எதுவுமே இன்னும் துவக்கப்படவே இல்லை; திட்ட அறிக்கை, மதிப்பீடு என்று நெடுஞ்சாலைத்துறையினர், பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்; ஆனால், எந்தப் பணியும் இப்போதைக்கு துவங்குவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. அதேபோல, ரயில்வே மேம்பாலங்கள், போத்தனூர்-கிணத்துக்கடவு அகல ரயில் பாதை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும், கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது. இதனால், இரு ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுமே முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில், மாநகராட்சியில் அதிகரித்துள்ள லஞ்சமும், குடிநீர் வினியோகம், தூய்மைப் பணி போன்றவற்றில் காட்டப்படும் பாரபட்சமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சியில், கடந்த 2012-13 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை கோபமாக்கியது. உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பட்ஜெட், இந்த கோபத்தை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது. சென்னைக்கு 4 பாலங்களுக்கு 272 கோடியும், மதுரையில் இரு பாலங்களுக்கு 130 கோடி ரூபாயும் அறிவித்து விட்டு, கோவைக்கென்று எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இங்குள்ள அமைச்சர் உட்பட ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாருமே, கோவையின் தேவையை முதல்வரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. எந்த நேரத்திலும், மத்தியில் ஆட்சி கவிழும்; தேர்தல் வருமென்ற நிலையில், கோவையில் தற்போதுள்ள சூழல், ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதோடு, வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்குமென்பதும் உறுதி.

ஆறுதல் பரிசு: ஈழத்தமிழர், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்வது போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு, விவசாயிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆறுதல் பரிசாகத் தெரிந்தாலும், இது பெரும்பான்மையினரின் உணர்வாக தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. இதெல்லாம் போதாதென்று, பருவமழை பொய்த்து, அணைகள் எல்லாம் வறண்டு, தண்ணீர்ப் பிரச்னை இப்போதே தலை விரித்தாடத் துவங்கியிருப்பதால், எதிர்வரும் கோடையைச் சமாளிப்பதே, அரசுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம்; இந்த ஆண்டிலும் மழை பொய்த்தால்...ஆளும்கட்சி பாடு பெரும் திண்டாட்டம்தான்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
27-மார்-201300:13:35 IST Report Abuse
Selvaraj Sennaiappan எத்தனை வருடம் முந்திய ஆட்சியை காரணம் காட்டி எல்லா விசயத்திற்கும் சாக்கு போக்கு சொல்ல முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மார்-201305:33:03 IST Report Abuse
Krish Sami இது நாடாளுமன்றதிர்க்கான தேர்தல். மேலும், தமிழ் நாட்டின் பல துன்பங்களுக்கும், மத்ய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை காரணம் என்பதை நாடறியும். குறிப்பாக 1967க்கு பிறகு தமிழ் நாட்டுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை போல, இந்திய சரித்திரத்திலேயே யாரும் செய்தது கிடையாது, இவர்கள் யாருடன் சேர்ந்து வந்தாலும், அந்த அணிக்கு 0/40 கொடுப்பதே அறிவுடைமை. நினைவிருக்கட்டும் - இது நாடாளுமன்றதிர்க்கான தேர்தல். பத்திரிக்கைகளுக்கு செய்தி சொல்வது மட்டும் வேலையல்ல - "correct perspective"ம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
26-மார்-201302:43:41 IST Report Abuse
Panchu Mani மின் வெட்டு மாநில பிரச்னை. அதற்க்கும் லோக் சபா தேர்தல்லுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கர்நாடக, ஆந்திர, ஒரிசா, மேற்கு வங்கம் தலை நகரங்களை தவிர்த்து எல்லா இடத்திலும் மின்சார பிரச்னை இருக்கிறது. அப்படியானால் ஒரு இட்லிக்கு எட்டு ஒட்டு அதிகம் கிடைக்குமா...
Rate this:
Share this comment
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
27-மார்-201300:08:42 IST Report Abuse
Selvaraj Sennaiappanஇந்த சப்பை கட்டு எல்லாம் வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
26-மார்-201302:09:49 IST Report Abuse
NavaMayam முன்பு ராஜாக்கள் காலத்தில் , ராஜா மக்களிடம் செல்ல முடியாது , சுற்றி இருப்பவர்கள் சொல்லுவதுதான் அவருக்கு தெரியும் ,...சுற்றி நல்லவர்கள் இருந்தால் உண்மை நிலவரம் தெரியும் , இல்லையெனில் மக்கள் கஷ்டம் மன்னருக்கு தெரியாமல் கொடுங்கோல் ஆட்சி தொடரும்... அனால் இபய காலகட்டத்தில் ஊடகங்கள் , டிவி , இன்டர்நெட் என்று உள்ள காலங்களில் மக்கள் குறை முதல்வர் காதுக்கு எட்டவில்லை , கண்களுக்கு எட்டவில்லை என்றால் அது நம்பும்படியாக இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
26-மார்-201301:41:27 IST Report Abuse
Bava Husain தினமலரின், நேர்மையான, உண்மையான செய்தி... இது அரசின் காதுகளுக்கு எட்டுமா?...தீராத அவலங்களை தீர்க்க முன்வருமா? அல்லது எங்களுக்கு இதைவிட முக்கியமான வேறு வேலை இருக்கிறதென்று கூறி எதிர்கட்சிகளை"ஒரு கை" பார்க்க கிளம்பி விடுமா?....மக்கள் விழித்து விட்டார்கள்..., இனியாவது அரசாங்கம் விழித்துக்கொள்ளட்டும்... இல்லையென்றால் நிரந்திரமாக தூங்க வைத்து விடுவார்கள்....
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-மார்-201305:18:48 IST Report Abuse
மதுரை விருமாண்டிநிருபர் திமுகவுக்கு சொம்படிக்கிறார் என்று அல்லக்கைகள் புறம் சொல்லும்.....
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
26-மார்-201300:52:33 IST Report Abuse
Indiya Tamilan லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு காத்திருக்கிறது சவால் அல்ல லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு காத்திருக்கிறது மிக பெரிய ஆப்பு ஜெயலலிதாவே வருந்தும் அளவிற்கு. மக்களிடம் அந்த அளவிற்கு அதிருப்தி அதிகரித்து உள்ளது ஆளும் கட்சிக்கு தெரியவில்லை.அதை யார் எடுத்து கூறினாலும் அவர் கேட்க்கபோவதுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
26-மார்-201300:40:48 IST Report Abuse
Thangairaja நடுநிலையோடு எழுதும் கோவை நிருபரை எனக்கு எப்போதும் பிடிக்கும். இந்த ஆண்டுக்குள்ளாகவே லோக்சபா தேர்தல் வரலாம் என்ற நிலையில்.....அதிமுகவின் நாற்பது கனவுக்கு இந்த கட்டுரை மூலம் பிரேக் போட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக முடியாதது ஆறு மாதங்களில் சாத்தியமாகுமா ஆளும் கட்சிக்கென்று பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
26-மார்-201300:17:28 IST Report Abuse
கைப்புள்ள அதிருப்தி அதிகம் ஆனால் கத்தரித்து விட மக்கள் தயங்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-மார்-201305:19:58 IST Report Abuse
மதுரை விருமாண்டிதேர்தல் நேரத்தில் மம்மி, கஜானாவைத் திறந்து விட்டால், கத்திரி முத்திப் போய்விடும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை