E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மின்வாரிய ஊழியர்களாக மாறும் விவசாயிகள்: மின் வினியோகத்தை கையாளும் விபரீதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
23:46

காஞ்சிபுரம்: மின்மாற்றியில் இருந்து, அத்துமீறி, மும்முனை மின்சார வினியோகத்தை, மேல்கதிர்பூர் விவசாயிகள் செய்து வருகின்றனர். இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதோடு, மற்ற விவசாயிகளுக்கும் மின் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
தற்போது, 8:00 மணி நேரம் மட்டுமே, விவசாயத்திற்கான மும்முனை மின் வினியோகம் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், மின் வினியோக நேரம் அறிவிக்கப்பட்டு, அதன் படி மும்முனை மின் வினியோகம், மின்வாரிய ஊழியர்களால் தரப்பட்டு வருகிறது. இந்த வகையில், 16 மணி நேரம் மின் வினியோகம் தடை செய்யப்படுவதால், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர், டீசல் இன்ஜின்களை பயன்படுத்தி, கிணறுகளில் இருந்து நீரை உறிஞ்சி, நிலங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

அத்துமீறல்: இந்நிலையில், சில விவசாயிகள் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ள நேரங்களில், அவர்களே மின்மாற்றியில் ஏறி, ஆபத்தான முறையில், மின் வினியோகத்தை வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம், அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில், சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர், காய்ந்து போகும் நிலையில் உள்ளதால், பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கங்கத்தில், விவசாயிகள் மின்மாற்றியில் ஏறி, மின்வாரிய ஊழியர்களால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வழங்கி, மின்சாரத்தை பெறுகின்றனர்.

இப்படியும்...: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள மேல்பேரமநல்லூர் கிராமத்தில், வீட்டு இணைப்புக்களில், "பியூஸ்' போய்விட்டால், மின்வாரிய ஊழியர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறி, மின் இணைப்பை துண்டிக்கின்றனர். பின், குறிப்பிட்ட மின் கம்பத்தில் ஏறி, அவர்களே, "பியூஸ்' போட்டுக் கொள்கின்றனர். இதுகுறித்து, அவர்களிடம் கேட்டபோது, "எங்கள் வீட்டு மின் இணைப்பில், "பியூஸ்' போய்விட்டால், நாங்களே மின் கம்பத்தில் ஏறி சரி செய்து கொள்வோம். இதுகுறித்து, மின்வாரிய ஊழியருக்கும் தெரியும், அவர்கள் எங்களை ஒன்றும் கேட்க மாட்டார்கள்,' என்றார்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வினியோகம், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யும் அதிகாரம் மின்ஊழியர்களுக்கு உள்ளது, மாறாக, விவசாயிகளே தங்களது நிலத்திற்கு, மின் வினியோகம் செய்ய, மின் மாற்றிகளை இயக்குவது சட்டப்படி குற்றம். மின் கம்பத்தில் ஏறி, "பியூஸ்' போடுவதும் அத்துமீறலாக கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், கடுமையாக தண்டிக்கப்படுவர். விவசாயிகள், தனிப்பட்ட முறையில் மின்மாற்றியை இயக்குவதை தடை செய்யும் வகையில், அனைத்து மின்மாற்றிகளுக்கும் பூட்டுகள் போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Doss - Pollachi,இந்தியா
26-மார்-201317:16:59 IST Report Abuse
Hari Doss பாராட்டே வச்சுட்டயே ஆப்பே இனிமேல் பூட்டப் போடப் போறாங்களாம் அது சரி அதை உடைக்க மாட்டான்களா?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201314:04:22 IST Report Abuse
Kavee இங்கு மட்டும் இல்லை பரவலாக எல்லா ஊர்களிளிலும் இதே நிலைதான். பழுது நீக்கவோ அல்லது வீடுகளில் மின் கம்பங்களில் fuse போனாலோ மின் ஊழியர்களை அழைத்தால் அவர்கள் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் உடன் வருவதில்லை தப்பி தவறி தாமதமாக வந்தாலும் கப்பம் கட்டனும்.... அதெல்லாம் ரொம்ப ரிஸ்க் .... நம் கையே நமக்கு உதவி .... சில சமயம் ஆபத்துதான் என்ன பண்ணுவது அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆபத்து பார்த்தால் வேலை நடக்குமா ..... இவனுங்க ஒழுங்க இருந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
26-மார்-201313:12:06 IST Report Abuse
ksv மின்சார வாரியத்தில் ஆள் பற்றாகுறை இருப்பவர்களும் கையுட்டு பெறாமல் எந்த வெளியும் செய்வதில்லை விவசாயிகளும் மக்களும் இவர்களை அழைத்தாலும் வருவதில்லை வந்தாலும் கையுட்டு பெறாமல் எந்த வேலயும் செய்யருது இல்லை பிறகு என்னதான் வழி மக்கள் இவ்வாறு செய்கின்றனர் ஆனால் இது அவர்களின் உயிர் சம்பத்தப்பட்ட விசயம் சம்பத்த பட்டவர்கள் நல்ல நடவடிக்கைகள் எடுத்தல் நன்று.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
26-மார்-201311:29:38 IST Report Abuse
Raj அரசு நிர்வாகம் லஞ்ச லாவன்யத்தால் ஸ்தம்பித்துள்ளது இது அனைவருக்கும் தெரியும் ... சம்பந்தப்பட்டவர்கள் கோமாவில் உள்ளவரைக்கும் இப்படிதான்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
26-மார்-201310:40:35 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar தமிழக அரசு கவனிக்க படவேண்டிய துறைகளில் மின்துறையும் ஒன்று.. அங்கு ஒழுங்கான நிர்வாகம் கிடையாது..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
26-மார்-201310:38:07 IST Report Abuse
mirudan கரண்ட் இல்லை என்பதால் இவ்வளவு தைரியமான மின் கம்பத்தில் ஏறி விட்டார், இது கூட அம்மா அவர்களின் சாதனைதான்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
26-மார்-201310:32:09 IST Report Abuse
சகுனி ஐயோ பாவம் இந்த மின்வாரிய ஊழியர்கள் ..... இவங்களுக்கெல்லாம் சம்பளமே தர்றதில்ல போலிருக்கு ......... அதனால தெருவிளக்கு எரியலயின்னா அதை சரி செய்ய 50 ரூபா, வீட்டுக்கு பியூஸ் போட 100 ரூபா, கம்பத்திலிருந்து வீட்டுக்கு வொயர் இழுக்க 2000 ரூபா / 3000 ரூபா அப்புடீன்னு "பிச்சை" எடுப்பாங்க (அதை 'லஞ்சம்னு' சொல்லக்கூடாது) ...... எப்போ பாத்தாலும் ஆள் இல்லேன்னு இல்லே பாட்டு பாடுவாங்க ....... ஆனா வரும்போது ஒருத்தனா வரமாட்டாங்க ..... வேல இருக்கோ இல்லையோ ....... நாலு பேராதான் வருவானுங்க ......... காசு வசூல் ஆகாதுன்னு தெரிஞ்சா போதும் ....... கம்பத்துல ஏறி பியூஸ் போடுறேன் பேர்வழின்னு ஏதாவது வொயர வேணும்னே கழட்டி வுட்டுட்டு போய்டுவானுங்க ......... பிறகு நாள் கணக்குல இவனுங்க பின்னாடி நாயா அலஞ்சா....... வரும்போதே சள்ளு புள்ளுன்னு எரிஞ்சி விழுந்துகிட்டே வருவானுங்க ....... கண்டிஷனா 500 ரூபா கொடுத்தா வேல பாக்குறோம்னு சொல்லுவானுங்க ........ ஒத்துகிட்டா செய்வானுங்க ....... ஒத்துவரலேன்னா அப்புறம் வந்து செய்யுரோம்னு போயிட்டே இருப்பானுங்க ........ இவனுங்க செய்யுற அராஜகத்துக்கு இவங்களுக்கு மேல இருக்கிற போர்மேன்ல இருந்து எஞ்சினியர் வரைக்கும் துணை போவானுங்க ...... எப்போ கேளு ...... ஒயர் இல்ல ... மீட்டர் பாக்ஸ் இல்ல ...... கம்பி இல்ல ..... ஆள் இல்ல ........ இல்ல இல்ல இல்ல .......... இத விட கூத்து ஒருத்தன் செய்வான் ..... அவன்தான் மீட்டார் ரீடிங் எடுக்கிறவன் ....... இந்த வேலைக்குன்னே கண்ணு தெரியாத, காது கேக்காத, காச பாத்தா இளிக்கிற ஆளா பாத்துதான் போடுவாங்க போலிருக்கு ........ இவங்களுக்கு கணக்கும் தெரியாது, ஒரு எழவும் தெரியாது ....... கைல கால்குலேட்டர் மாதிரி மெஷின் ஒன்னு வெச்சிருப்பான் ...... அதை அப்புடி இப்புடி தட்டி என்னவோ ஒரு கணக்கு போட்டு 'எப்பவுமே இல்லாத' கரன்ட்டுக்கு 'எக்கச்சக்கமா ஓடினமாதிரி' அமோவுன்ட் எழுதிட்டு போயிட்டே இருப்பான் ....... அதே மாதிரி EB ஆபீஸ்ல போன்ல வர்ற கம்ப்ளெயின்ட கேட்டு நோட் பண்ண ஒருத்தன போட்டிருப்பாங்க ......... ஆனா இந்த ஆள் சீட்ல உக்காந்து கம்ப்ளைன்ட் நோட்டு பண்ணத நான் பார்த்ததே இல்ல .... சரி நேர்ல போய் எழுதி வெச்சிட்டு வரலாம்னு போய் பாத்தா .......... சீட்ல ஆளே இருக்காது ........ போன் ரிசீவர எடுத்து கீழ வெச்சிட்டு அந்த ஆளு உள்ள ஆபீஸ்ல இருக்கிறவன் கூட உக்காந்து அரட்ட அடிச்சிக்கிட்டு இருப்பான் ...... சரியான பிணம் தின்னி கழுகுங்க ........
Rate this:
0 members
0 members
31 members
Share this comment
Kavee - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201316:48:28 IST Report Abuse
Kaveeஉள்ளதை உள்ளபடி அப்படியே படம் பிடிச்சாபோல எழுதி இருக்கீங்க .... அப்போ எல்லா இடத்திலும் இதுதான் நடக்குதா இந்த மின்சார துறையிலே ....கொடுமைங்க ....யாரை நாம குறை சொல்ல முடியும்....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201310:21:19 IST Report Abuse
GANAPATHI V என்னமோ நடக்குது ......? நடக்கட்டும் ...எல்லாம் கொஞ்ச நாள் தான் ......?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
26-மார்-201309:29:22 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஒரு பூட்டை போடா வழியில்லை..இந்த லக்ஷனத்திலே மின் திருட்டை தடுக்க போறாங்களாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krishnan Rajamohan - Mannargudi,இந்தியா
26-மார்-201308:05:31 IST Report Abuse
Krishnan Rajamohan எந்த துறை ஒழுங்காக இருக்கிறது இது மட்டும் ஒழுங்காக இருக்க எல்லாவற்றிலும் உள்ள குறைகள் தான் இrங்கேயும் உள்ளது போதிய பணியாளர்கள் இல்லாதது மிக முக்கியமான காரணம் அதற்குமேல் முந்தயமாதிரி மின்சாரம் ஒரு பயம் இருந்தது தற்போது அந்த நிலை இல்லை மின் நுகர்வோரே எல்லா வேலைகளையும் செய்து விடுகின்றனர் அதுவும்கிராம்புரங்களில் மிகவும் சர்வ சாதரணமான விஷயம் மின்மாற்றி பழுதடைந்தால் மட்டுமே மின்வாரியத்தை நாடுகின்றனர் சில நேரங்களில் உயிரழப்புகளும் நிகழ்கின்றன ஆனாலும் இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.