Nearly 19.6 lakhs idlies sold in Amma mess | மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில் ஒரு மாதத்தில் 19.6 லட்சம் இட்லி விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில் ஒரு மாதத்தில் 19.6 லட்சம் இட்லி விற்பனை

Added : மார் 25, 2013 | கருத்துகள் (52)
Advertisement
Nearly 19.6 lakhs idlies sold in Amma mess

சென்னை: மாநகராட்சி மலிவு விலை உணவகத்தில், ஒரு மாதத்தில், 19.6 லட்சம் இட்லிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. மொத்தம், 52.5 லட்ச ரூபாய்க்கு உணவுகள் விற்றுள்ளன.
ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர் பயன்பெறும் வகையில், சென்னையில், மலிவு விலை உணகவங்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. சாந்தோம் மலிவு விலை உணவகத்தை, முதல்வர் ஜெயலலிதா, பிப்., 19ம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்து, மூன்று கட்டங்களாக, இதுவரை, 73 உணவகங்கள் திறக்கப் பட்டுள்ளன. ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதமும் விற்கப்படுகிறது. ரேஷன் அரிசியில் தயாரித்தாலும், குறைந்த விலையில், சற்று தரமாக கிடைப்பதால், மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என, மக்கள் நீண்ட வரிசையில் நின்று, உணவை ருசித்து வருகின்றனர். மார்ச் 19ம் தேதியுடன், ஒரு மாதம் நிறைவடைந்தது. ஒரு மாத்தில், 19.6 லட்சம் இட்லிகள், விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு மாதத்தில், 73 உணவகங்களில், 19.6 லட்சம் இட்லிகள், 4.81 லட்சம் சாம்பார் சாதம், 2.93 லட்சம் தயிர் சாதமும் விற்கப்பட்டுள்ளது. மொத்தம், 52.5 லட்ச ரூபாய்க்கு உணவுகள் விற்றுள்ளன. 20 உணவங்களில், தினமும், 2,000 இட்லிகளுக்கு மேல் விற்கிறது. பொதுமக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளதால், இந்த மாத இறுதிக்குள், 200 உணவங்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எந்த தேதியில் திறப்பது என, இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி மலிவு விலை உணவகங்களுக்கு, ஆண்டுக்கு, 35 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிய வந்துள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை விட, 6.16 கோடி ரூபாய் பற்றாக்குறையை, மாநகராட்சியே ஏற்கிறது.

தரம் குறைகிறதா? ரேஷன் அரிசி என்றாலும், உணவுகள் தரமாக இருப்பதால், மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், சில இடங்களில், இட்லி சற்று கடினமாக இருப்பதாகவும், சாதத்தில், ரேஷன் அரிசி வாடை வருவதாகவும் புகார்கள் உள்ளன. தரத்தில் மாநகராட்சி சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Somasundaram - Kuwait City,குவைத்
04-ஜூன்-201312:25:22 IST Report Abuse
Arun Somasundaram அம்மா அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...சென்னைல மட்டும் மலிவு விலை உணவுக்கூடங்களை திறந்து இருக்கீர்கள் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டதிலையும் நிறைய ஏழைங்க ஒரு வேளை உணவுகூட சாப்பிட முடியாம கஷ்டப்படுறாங்க அதனால் இதே மாதிரி எல்லா மாவட்டத்துலேயும் திறந்தீங்கனா ரொம்ப உதவியா இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
rajamd - rak,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-201301:32:22 IST Report Abuse
rajamd சூப்பர் தமிழ் நாட்டிலில் மின்சாரம் என்பது இல்லை இது எல்லாம் ஏன் தினமலற்கு தெரியாவில்லை இது உண்மையின் உரைகல் இல்லை dmk எதிரான நாளிதழ் மேலும் மறைமுகமா ஜெயுக்கு பிரசாரம் செய்கிரதறு
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201316:20:07 IST Report Abuse
Hasan Abdullah பிள்ளை பிறக்கும் போது அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தால் முதல் இரண்டு குழந்தைக்கு தலா 12000 ரூபாய், இலவச கல்வி, இலவச பாட புத்தகம், இலவச மதிய நேர 13 கலவை உணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச லேப்டாப், வளர்ந்த பின், இலவச ஆடு & மாடு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலையே செய்யாமல் சம்பளம், ரேசனில் அரிசி இலவசம், பருப்பு, சீனி, எண்ணெய் மலிவு விலை, இலவச மிக்ஸ்சி, கிரைண்டர், பேன். இப்போது மலிவு விலையில் உணவு, மேலும் இலவச வீடு, இப்படியே கொடுத்து கொண்டிருந்தால் வேலையே செய்யலாம் அனைவரும் சோம்பேறியாகி, திங்கணும் & தூங்கணும்.இதுவே இன்னும் கொஞ்ச நாளில் தமிழனின் வழக்கமாக போகிறது.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
26-மார்-201315:48:39 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மேலும் உணவகங்கள் தமிழகம் முழுதும் 20000 யும் சென்னையில் 2000 கடைகள் திறந்து பொதுமக்கள் பெரும் செலவை குறைக்க வேண்டும் இவை அனைத்து அரசு பேருந்து நிலையத்தில் திறந்தால் மிக பயனுள்ளதாக அமையும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
26-மார்-201314:44:08 IST Report Abuse
Vaithi Esvaran மாநகராட்சி மலிவு விலை உணவகம் தந்த ஊக்கத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவது நல்லது.வேண்டுமானால் அங்குள்ள (டாஸ்மாக்கில் உள்ள ) பட்டதாரிகளை உணவகத்துக்கு இடமாற்றம் செய்யலாம். எத்தனால் ஸ்பிரிட் பெட்ரோலில் கலக்க ஏற்கனவே நல்ல டிமான்ட்.அதனால் எத்தனால் வீணாகும் பட்டதாரிகள் வேலை இழப்பர் என்ற தொல்லைகளில் இருந்து விடுதலை. ஆனால் இது நல்ல விஷயமாச்சே யாரும் செய்ய மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
makkaliloruvan - Erode,இந்தியா
26-மார்-201314:22:38 IST Report Abuse
makkaliloruvan இந்த பெருமை சைதை பெரியசாமியதான் சேரும்.. ஏன் என்றால் அவர் ஏற்கனவே இதை மனித நேயம் அறகட்டளை என்ற பெயரில் வழங்கியவர்
Rate this:
Share this comment
Cancel
Prabha Karan - oooas,எகிப்து
26-மார்-201313:38:14 IST Report Abuse
Prabha Karan எல்லாம் election வரை தான் அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சம் மா close பண்ணிடுவாங்க...பாருங்க
Rate this:
Share this comment
Cancel
shunmugaraj - riyath,சவுதி அரேபியா
26-மார்-201313:26:45 IST Report Abuse
shunmugaraj goverment என்ன செய்தலும் அத குறை சொல்வதுக்கு மட்டும் ஒரு kuttaam ரெடியா இருக்கு,makkal கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க...குறை இருந்த sollunga...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மார்-201313:03:51 IST Report Abuse
pattikkaattaan நீங்க போட்டிருக்கிற போட்டோ உண்மையிலுமே மலிவு விலை இட்லி கடையில எடுத்த போட்டாங்களா ?...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மார்-201313:00:41 IST Report Abuse
pattikkaattaan எல்லாமே சென்னைக்கு மட்டும்தானா ?... மற்ற ஊர்களில் உள்ளவர்கள் எல்லாம் மனுசனே இல்லையா ?... வாங்க .. வாங்க ... நல்லா வோட்டு போடறோம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை