காவிரியில் மணல் அள்ள தடை கோரி வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் மணல் அள்ள தடை கோரி வழக்கு

Added : மார் 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு விளக்க மளிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கரூர், வடக்கு செல்லிபாளையம், எட்டிக்கண் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர், காவிரி ஆற்று பகுதியில் வாங்கல், நெரூர் உட்பட ஏழு இடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் மணல் குவாரிகளில், மணல் அள்ள, ஏற்கனவே ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அச்சம்மாபுரம், வைத்தியம் பகுதிகளில் மணல் அள்ள, பழனிச்சாமி என்பவருக்கு காவிரி பாசன பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், அனுமதி வழங்கியுள்ளார். மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக, கரூர் தாசில்தார் கூறுகிறார். இது கோர்ட் உத்தரவை மீறிய செயல்; மணல் அள்ள தடை விதித்து, உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு, உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, மார்ச், 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை