Advertisement
80 வயது மூதாட்டிக்கு உதவித் தொகை பெற்றுத்தர கலெக்டருக்கு உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை: 80 வயதான மூதாட்டிக்கு பாதுகாப்பு மற்றும் உரிய பராமரிப்பு தொகையை மகனிடம் இருந்து பெற்றுத்தர கோவை, கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோவை, பீளமேடு பி.எஸ்.ஜி.,காலனியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள்,80. இருண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1977ம் ஆண்டு இவரது கணவர் லட்சுமணன் இறந்து விட்டார். தனக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்த நிலையில், சிறு அறையில் தங்கியிருந்தார். அந்த அறையை தனது காலம் முடிந்ததும் இளைய மகனுக்கு என உறுதிகூறி, தங்கினார். மேலும், உணவு மற்றும் மருத்துவ செலவுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார். முதலில் சம்மதம் தெரிவித்த மகன், சில நாட்களில் மறுத்து விட்டார். இதனால் மூத்த மகன் செல்லத்துரை வீட்டில் வசித்து வந்தார். இச்சமயத்தில் வீடு கட்ட முயற்சித்ததும் தடுக்கப்பட்டது. இச்சூழலில், தனது உணவு மற்றும் பாதுகாப்பு செலவுக்கு 2,000 தர மறுப்பதும், கேட்கும்போது மிரட்டல் விடுவதுமாக இருந்த மகன் மீது கடந்த ஆண்டு டிச.,26 அன்று கோவை கலெக்டர், கோட்டாச்சியர் ஆகியோரிடம் மனு அளித்தார். இம்மனு மீது நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்த மூதாட்டி, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு உதவியுடன் சென்னை ஐகோர்ட்டில் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007ன்படி உரிய நிவாரணம் வழங்கிட உத்தரவிடக்கோரி வழக்கு(வழக்கு எண்:2409/2013) தொடர்ந்தார். ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வழக்கை விசாரித்து, மூதாட்டி கண்ணம்மாளின் மனு மீது மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு ஆறு வார காலத்துக்குள் உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொகையை இரண்டாவது மகனிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஆறு வாரகாலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.