Panguni Uthiram festival today | தர்மசாஸ்தாவை தஞ்சமடைவோம்: இன்று பங்குனி உத்திரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மசாஸ்தாவை தஞ்சமடைவோம்: இன்று பங்குனி உத்திரம்

Added : மார் 26, 2013 | கருத்துகள் (3)
Advertisement
Panguni Uthiram festival today

பங்குனி உத்திரத்தன்று தர்மசாஸ்தாவான ஐயப்பன் அவதரித்தார். இந்த நன்னாளில், அவரை வழிபட்டு சகல வளத்தையும் அடைவோம்.

* ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருப்பவரே! வீரர்களால் போற்றப்படும் திருவடியை கொண்டவரே! மங்களத்தை அருள்பவரே! பரிவாரங்கள் சூழ வீற்றிருப்பவரே! வெற்றி வீரரே! தர்ம சாஸ்தாவே! உம்மைச் சரணடைகிறோம்.

* பூர்ண, புஷ்கலாவின் துணைவரே! சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்த அருந்தவப் புதல்வரே! பத்து கைகளிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவரே! அபய வரத ஹஸ்தங்களால் பக்தர்களைக் காப்பவரே! உம்மை வணங்குகிறோம்.


* சாந்தமே வடிவானவரே! சந்திரன் போல வெண்மைநிறம் கொண்டவரே! இனிய முகம் பெற்றவரே! சந்திர சூரியரைப் போன்ற குண்டலங்களை அணிந்தவரே! வெண் பட்டாடை உடுத்தியவரே! வாக்கு வன்மை அளிப்பவரே! உம்மைப் போற்றுகிறோம்.


* சபரிமலையின் சிகரத்தில் வீற்றிருப்பவரே! எல்லோராலும் அர்ச்சிக்கப்படுபவரே! விருப்பங்களை நிறைவேற்றுபவரே! பூதநாதரே! பந்தளராஜனால் வளர்க்கப்பட்டவரே! புலிவாகனம் கொண்டவரே! மணிகண்டன் என போற்ற படுபவரே! உம்மைத் துதிக்கிறோம்.


* மகிஷியை வதம் செய்தவரே! ஹரிஹர செல்வனே! வெண்ணிற ஆடையால் பிணைக்கப்பட்ட முழங்காலைக் கொண்டவரே! வலது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிப்பவரே! காந்தமலையில் குடியிருப்பவரே! உம்மை எப்போதும் தியானிக்கிறோம்.


* சர்வ வல்லமை பொருந்தியவரே! புராணங்களால் போற்றப்படுபவரே! சரணடைந்த பக்தர்களை காத்தருள்பவரே! பிறவிப்பிணி தீர்த்து முக்தியின்பத்தை அளிப்பவரே! யானை வாகனம் கொண்டவரே! மும்மூர்த்திகளின் அம்சம் மிக்கவரே! உம்மைப்போற்றுகிறோம்.


* தர்ம சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ஞானசாஸ்தா, மகா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, வீர சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டுவித கோலங்களில் வீற்றிப்பவரே! சதுர்வேதங்களும் போற்றுகின்ற திருவடியைக் கொண்டவரே! சபரிகிரீசனே! உம்மைத் தஞ்சமடைகிறோம்.

* கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே! நெய் அபிஷேக பிரியரே! தவஞானம் மிக்கவரே! எங்கள் குலதெய்வமே! தேவாதி தேவனே! ஆரியங்காவில் அருள்புரிபவரே! அச்சங்கோவில் அரசே! வரிப்புலியில் வலம் வருபவரே! உம்மைத் துதிக்கிறோம்.

* பக்தவத்சலனே! ஆபத்பாந்தவனே! அநாத ரட்சகனே! முருகனின் தம்பியே! சகல ஆகம பண்டிதனே! சத்ரு சம்ஹாரனே! குளத்துப்புழை அப்பனே! சங்கிலி பூதநாத சுவாமியே! அன்னதானப் பிரபுவே! சத்திய சொரூபமே! பந்தளராஜன் மகனே! உன்னருளால் எங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெருகவேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
26-மார்-201316:57:09 IST Report Abuse
பி.டி.முருகன்    சாமியே சரணம் ஐயப்பா. மக்கள் எல்லோரும் நல்லப்பட வாழ அருள் புரிய வேண்டும் சுவாமி.
Rate this:
Share this comment
Cancel
Ganapathi S.n. - Sankarankovil,இந்தியா
26-மார்-201316:20:46 IST Report Abuse
Ganapathi S.n. அன்புடன் வணக்கம் . கந்த புராணத்தில் சிவனுக்கும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தை ஸ்ரீபுஷ்கல ஸ்ரீ பூரணி சமேத ஸ்ரீ மஹா சாஸ்தா மேற்கொண்டு எழுதபட்டிருக்கும் சபரி மலை ஆரியன்காவு பந்தளராஜா மகன் , என்பது எந்த புராணத்தில் உள்ளது மலையாள புராணத்தில் உள்ளாத என்பதை கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்..
Rate this:
Share this comment
Cancel
venkata - chennai ,இந்தியா
26-மார்-201307:48:53 IST Report Abuse
venkata பூர்ண , புஷ்கலாம்பா சமேத கூட நாரயண தர்ம சாஸ்தாவுக்கு ஜே பூர்ண புஷ்கலாம்ப சமேத பிழை பொறுக்கும் தர்ம சாஸ்தாவுக்கு ஜே மார மங்கலம் துரையப்ப தர்ம சாஸ்தாவுக்கு ஜே சபரி கிரி தர்ம சாஸ்தாவுக்கு ஜே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை