CM Jayalalithaa offered prayer in road side temple in chennai | சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் பூஜை: குருக்களிடம் பிரசாதம் கேட்டு வாங்கினார் | Dinamalar
Advertisement
சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் பூஜை: குருக்களிடம் பிரசாதம் கேட்டு வாங்கினார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவின் கார், இவரை கடந்து சென்றது. சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து, கோவில் அருகே நின்றது. பாதுகாப்பு அதிகாரிகள், பூஜை செய்து கொண்டிருந்த சூர்யாவை அழைத்தனர். குருக்கள் சூர்யா, படபடப்பு கலந்த பயத்துடன், முதல்வர் அருகில் சென்றார். காரில் இருந்து இறங்கிய முதல்வர், அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர், பூஜை செய்த பிரசாதம் வாங்கி கொண்டு, 1,000 ரூபாய் ரொக்கப்பணம் அளித்தார். கோவில் குருக்கள் சூர்யா, சிறிது நேரம் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (64)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Nathan - Coimbatore,இந்தியா
30-மார்-201309:20:26 IST Report Abuse
Renga Nathan நல்ல விஷயம் தான.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
27-மார்-201304:54:27 IST Report Abuse
tmsaravanai எங்க அம்மா அம்மா தான்
Rate this:
3 members
1 members
9 members
Share this comment
Cancel
arul hi - madurai,இந்தியா
26-மார்-201314:50:37 IST Report Abuse
arul hi god bless you
Rate this:
38 members
1 members
10 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
26-மார்-201314:05:56 IST Report Abuse
JAY JAY முதல்வரின் இந்த செயலை , அவரது தனிப்பட்ட கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்டதாகவே எடுத்துகொள்ள வேண்டும்.. இதில் அரசியல் ரீதியா குறை சொல்ல எதுவும் இல்லை.. . எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்ற வகையில் சாலயோர புள்ளையார் கோவிலில் , சாமி கும்பிட முதல்வருக்கு முழு உரிமை உள்ளது.. . எளிமையை பறைசாற்றும் இந்நிகழ்ச்சியை வரவேற்ப்போம்.. [ நாத்திகம் பேசுவோர் இங்கு கருத்து சொல்வது அர்த்தம் இல்லாதது ...]
Rate this:
76 members
1 members
145 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
26-மார்-201313:50:00 IST Report Abuse
பி.டி.முருகன்    ஜெயகாந்தன் எழுதிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' புதினத்தை அவசியம் எல்லோரும் படிக்க வேண்டும். இந்த மேட்டர் வெறும் சப்பை. இதை விடுங்க. எல்லாம் பப்ளிசிட்டி தான் , அம்மா கும்பிட்டால் செய்தி. ஆறுமுகம் கும்பிட்டால் அது சீரோ
Rate this:
44 members
1 members
86 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-மார்-201313:22:13 IST Report Abuse
g.s,rajan இந்த தீய சக்திகளின் கொட்டம் எப்படியாவது ஒடுங்க நீதான் அருள் புரியணும் பிள்ளையாரப்பா
Rate this:
12 members
77 members
37 members
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
26-மார்-201312:48:00 IST Report Abuse
Silambarasan தினமலர் :தான் சரியான அம்மா (ஜெ) தாசன் என்று மீண்டும் நிருபித்து விட்டது. திராவிடம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது பெரியார், அவரின் கடவுள் இல்லை என்ற கொள்கை. அப்படியானால் இவர் "திராவிட" தனது கட்சியில் உள்ள வார்த்தையை எடுத்துவிடலாம்.
Rate this:
93 members
1 members
137 members
Share this comment
ganapathy - khartoum,சூடான்
26-மார்-201314:57:42 IST Report Abuse
ganapathyநம்ம மஞ்ச துண்டு ஐயா குடும்பம் பன்னும் பூஜை யாகத்துக்கு முன்னாள் இது எல்லாம் ஜுஜுபி. நம்ம மஞ்ச துண்டாரின் கட்சி பெரியரில் உள்ள திராவிடத்தை நீக்கி விட்டால் சரியா போச்சு. திராவிடத்துக்கும் பஹுத்தரிவுக்கும் என்ன சம்பந்தம். நம்ம தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற வார்த்தைக்கு ஏன்னா அர்த்தம். திராவிட என்றால் தென்னிந்திய என்று அர்த்தம் கொள்ளலாம் அம்புட்டுதான். கடவுளை கும்பிடறவன் பகுத்தறிவு இல்லாதவன் என்றால், போப்பாண்டவர் முட்டாள் என்று சொல்லுவீர்களா. கடவுளை கும்பிடும் இஸ்லாமியனை சொல்லிபாருங்க வெப்பான் பாருங்க வெடி, எல்லாரும் மூடிக்கிட்டு இருப்பீங்க. மூடறதுக்கு ஒன்னும் இருக்காது, என்பது பகுத்தறிவு... வெடிச்ச வெடியில் எல்லாம் காணாம போய் இருக்கும் இல்ல...
Rate this:
108 members
0 members
97 members
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
26-மார்-201315:27:12 IST Report Abuse
Rasu Kuttyகடவுள் இல்லை என்று சொல்லிட்டு மஞ்சத்துண்டு போட்டு கொண்டு திருட்டுத்தனமாக கோவில் செல்வதை விட இவர் செய்தது நாகரீகமிக்க செயல் தான்...
Rate this:
32 members
1 members
64 members
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
27-மார்-201309:41:48 IST Report Abuse
Karam chand Gandhi இதேபோல் பூக்காரியிடமும் பூ வாங்கினால் இன்னும் அதிகமாக அவர் பாராட்டலாம்....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
26-மார்-201312:46:02 IST Report Abuse
JAY JAY 200 இடங்களில் அம்மா மெஸ் ஆரம்பித்து இட்லி விப்பது போல, இனி வழி நெடுக சாலையோர புள்ளையார் கோவில்களில் அம்மா கொழுக்கட்டை செஞ்சி விக்கிறதுக்கு ஐடியா எதனாச்சும் வைச்சிருக்காங்களோ என்னவோ?....
Rate this:
47 members
1 members
222 members
Share this comment
JAY JAY - CHENNAI,இந்தியா
26-மார்-201314:01:32 IST Report Abuse
JAY JAY ஒரு தனி மனிதனின் மத உணர்வை புண்படுத்துவது மிக தவறு....எனது முந்தைய கருத்தில் அத்தகைய தவறு இருப்பின் அதற்க்கு வருந்துகிறேன்.... அந்த கருத்தை தயவு செய்து நீக்குமாறு ஆசிரியரிடம் கேட்டு கொள்கிறேன்.....
Rate this:
66 members
0 members
62 members
Share this comment
sathish19841 - banglore,இந்தியா
26-மார்-201314:55:27 IST Report Abuse
sathish19841அட போங்கப்பா...
Rate this:
2 members
0 members
48 members
Share this comment
Cancel
Sairam Sairam - muscat,ஓமன்
26-மார்-201312:33:08 IST Report Abuse
Sairam Sairam முதல்வருடைய பக்தி நாட்டை நல்வழி படுத்தட்டும்... கோமான் ஆனாலும் கடவுள் முன் சாமானியனே...
Rate this:
88 members
1 members
85 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
26-மார்-201312:18:48 IST Report Abuse
மும்பை தமிழன் அப்பவும் வண்டியை விட்டு கீழே இறங்கவில்லை
Rate this:
41 members
2 members
183 members
Share this comment
srajan - narasimhapuram ,இந்தியா
26-மார்-201313:14:44 IST Report Abuse
srajanசிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து, கோவில் அருகே நின்றது. பாதுகாப்பு அதிகாரிகள், பூஜை செய்து கொண்டிருந்த சூர்யாவை அழைத்தனர். குருக்கள் சூர்யா, படபடப்பு கலந்த பயத்துடன், முதல்வர் அருகில் சென்றார். "காரில் இருந்து இறங்கிய முதல்வர்", அவரிடம் நலம் விசாரித்தார் நன்றாக படிக்கவும் அருள் அவர்களே ?...
Rate this:
2 members
0 members
24 members
Share this comment
Sri Vatsan - Chennai,இந்தியா
26-மார்-201314:27:52 IST Report Abuse
Sri Vatsanகாரில் இருந்து இறங்கிய முதல்வர், அவரிடம் நலம் விசாரித்தார்....
Rate this:
2 members
0 members
17 members
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
26-மார்-201315:13:37 IST Report Abuse
Sathyamoorthyசெய்தியை தெளிவாக படிக்கவும்.. காரிலிருந்து கீழே இறங்கித்தான் பிரசாதம் வாங்கினார்....
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்