E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2013,00:48 IST
கருத்துகள் (22)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நன்றாக, தரமான உள்ள கட்டடங்களும், இடிப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை, தமிழக அரசு பாழாக்கலாமா என, அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

சம்பத் மாளிகை:
ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வளாகத்தில், மிகப் பெரிய கட்டடமாக, சம்பத் மாளிகை கட்டடம் உள்ளது. இது, 10 தளங்களைக் கொண்டதாகும். 1985ல், அப்போதையமுதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பந்த், திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடம் கட்டி, 23 ஆண்டுகள் தான் ஆகின்றன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநூல் கழகம், மத்திய அரசின், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம், சி.பி.ஐ.,-கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடம், இடிப்பு பட்டியலில் உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனரகம்: இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடத்தைப்போல் பிரதிபலிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகமும், இடிக்கப்படுகிறது. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் இந்த கட்டடம் வலுவாகவே உள்ளது. மேலும், இந்த கட்டடம், தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக

கூறப்படுகிறது. ஆங்கிலேய அரசு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில், கல்விக்கென தனி இயக்குனரகத்தை கட்டியது. டி.பி.ஐ., (Directorate of Public Instruction) அதிகாரிகளாக, 1854ல் இருந்து, பல பேர் பதவி வகித்துள்ளனர். இதற்கான பெயர் பட்டியலும், அலுவலகத்திற்கு வெளியே உள்ளது.

எஸ்.எஸ்.ஏ., கட்டடம்:
கூவம் ஆற்றை ஒட்டியுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக கட்டடம், 2000த்திற்கு முன்பு கட்டப்பட்டது. வெறும் 13 ஆண்டுகள் ஆன இந்த கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

அறிவுசார் பூங்கா: தேர்வுத் துறை வளாகத்தில், முந்தைய, தி.மு.க., அரசில், புதிய கூடுதல் கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடமும், இடிப்பு பட்டியலில் உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து கட்டடங்களை தவிர, மற்ற அனைத்து கட்டடங்களையும், விரைவில் தரை மட்டமாக்கி விட்டு, அனைத்து துறை அலுவலகங்களை உள்ளடக்கி, "ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா' கட்டடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.

அலுவலகங்களை தேடி:
புது கட்டடத்தை கட்டுவதில், அரசு வேகம் காட்டுவதால், அனைத்து துறை அதிகாரிகளும், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்குமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கட்டடங்கள், நன்றாகவே உள்ளன. ஆனாலும், சில கட்டடங்களை தவிர, மற்ற அனைத்தும் இடிக்கப்பட உள்ளன. தற்காலிகமாக, வேறு இடங்களை, வாடகைக்கு பார்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப, கட்டடங்கள் கிடைக்குமா என்பது, சந்தேகம் தான். ஆவணங்கள் அனைத்தையும், புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
சம்பத் மாளிகை கட்டடம், எஸ்.எஸ்.ஏ., கட்டடம், பள்ளிக் கல்வி கட்டடம், தேர்வுத் துறையில் உள்ள கூடுதல்

Advertisement

கட்டடம் ஆகியவை நன்றாகவும், வலுவாகவும் உள்ளன. இது போன்ற கட்டடங்களை இடிப்பதால், மக்களின் பலகோடி ரூபாய் வரிப்பணம் தான் பாழாகும். மெட்ரிக் கல்வி இயக்குனரகம், வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள தேர்வுத் துறை குடோன் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கலாம். நன்றாக உள்ள கட்டடங்களை தவிர்த்து, மீதமுள்ள இடங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப, ஒருங்கிணைந்த பூங்கா கட்டடத்தை கட்ட வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.

இடிக்கப்படும் கட்டடங்கள்

1. பள்ளிக்கல்வி இயக்ககம்
2. சம்பத் மாளிகை
3. மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
4. தேர்வுத்துறை இயக்குனரகம்
5. எஸ்.எஸ்.ஏ., இயக்குனரக கட்டடம்
6. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
7. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

புது கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? கடந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வித்துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா கட்டடம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோட்டூர்புரம் நூலகமும், இந்த கட்டடத்தில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu - ernakulam,இந்தியா
26-மார்-201315:06:19 IST Report Abuse
prabhu அழிக்க செலவிடும் பணத்தை ஆக்க செலவிடலாம்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
26-மார்-201314:48:04 IST Report Abuse
suresh kumar நன்றாக உள்ள கட்டிடங்களை இடிப்பது சரியில்லை. இது முறையற்ற செயல். தவறான எண்ணவோட்டம்.
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
26-மார்-201314:38:25 IST Report Abuse
News Commitor இப்போ எதிர்கட்சி ஒன்னும் பேசாது. காத்திருந்து இடிச்சப்புரம் பொங்கி எழுவாங்க பாருங்க, அவங்களுக்கு மக்கள் மேல இருக்குற அக்கறைய பாத்து புல்லரிச்சுறும்.
Rate this:
4 members
0 members
11 members
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
26-மார்-201314:24:50 IST Report Abuse
HARINARAYANAN சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அந்த எதிர்ப்பு நியாயமாகத்தான் இருக்கும்....... மேலும் இப்போதே இவை எல்லாம் ஒரே வளாகத்தில் தான் இருக்கின்றன.... பின் என்ன அவசியம் வந்தது..... அண்ணா வளைவு விவகாரம் மாதிரி பாதி இடித்த பின் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லாமல் இருந்தால் சரி...... இடிப்பு தேவைதானா என்பதை நிறை குறைகளை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
26-மார்-201313:48:00 IST Report Abuse
amukkusaamy எதையாவது இடிச்சாத்தம்லே புதுசா இன்னொன்னை கட்டமுடியும்னேன் ...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
26-மார்-201312:31:07 IST Report Abuse
Ashok ,India புதிய இடத்தில கட்டிடம் கட்டிவிட்டு பின்னர் இந்த கட்டிடத்தை வாடகைக்கு விடுவதால் அரசுக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட போகிறதா?? . பழைய கட்டிடத்தில் இருந்து வரும் நிரந்தரமான வாடகை மூலம் பல திட்டங்கள் செயல் படுத்த முடியும்.
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel
Sridhar Ganasen - Nairobi,கென்யா
26-மார்-201311:40:17 IST Report Abuse
Sridhar Ganasen எந்த ஒரு ப்ராஜெக்ட் வந்தாலும் அதை objection பண்றதுக்கு ஒரு கூட்டம் அலையது
Rate this:
17 members
0 members
3 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
28-மார்-201312:39:06 IST Report Abuse
Rajஎந்த ஒரு ப்ராஜெக்ட் வந்தாலும் அதை ஏற்று கொள்ள ஒரு கூட்டம் அலையுது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
26-மார்-201311:37:35 IST Report Abuse
Raj 30% கட்டிங்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
26-மார்-201311:20:46 IST Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு நான் ஒரு அற்சிடேச்ட். எனது கண்ணோட்டம்......:- மக்கள் பணம் வீண் நு சொல்லுறதெல்லாம் சும்மா.. எந்த ஒரு விசயத்துக்கும் செலவு இருக்கத்தான் செய்யும் இந்தியாவில் bureaucrat கேவலமா இருக்கு. கல்வி பூங்கா ரொம்ப நல்ல திட்டம். ஒரு துறை திறம்பட செயல் பட அடிப்படை வசதிகள் அவசியம். அங்கிலேயர் காலத்து கட்டிடம் என்றால் என்ன அது புனித தலமா? ஒரு பத்து மாடி கட்டிடம் எனபது எல்ல வசதிபடைத்த கட்டிடம் ஆகாது (இருக்கு என்று சொல்லுபவர்கள் மூடர்கல். 1985தில் கட்டி இருக்கும் கட்டிடத்தின் திறன் வசதி பற்றி நன்கு தெரியும்) இந்தியாவில் நடக்கும் ஊழல்களின் அளவை பார்க்கும் போது 100கொடி ஒரு விஷயமமே இல்லை. இது கல்விக்கு. இந்த்த ஒரு திட்டதுககவே இந்த அரசை பாராட்டலாம்.
Rate this:
8 members
0 members
6 members
Share this comment
james arul rayan - chennai ,இந்தியா
28-மார்-201308:11:02 IST Report Abuse
james arul rayan100 கோடி அல்ல 1000 கோடி செலவழித்து கட்டினாலும் கட்டியபின் அவைகளை பராமரிப்பது என்பதே அரசு நிர்வாகங்களுக்கு கிடையாது. ஒட்டடை கூட அடிக்க மாட்டார்கள். கொஞ்ச நாளிலேயே மீண்டும் தற்போதுள்ள கட்டடங்களின் நிலைமை ஆகிவிடும். அரசு அலுவலகங்களுக்கு வாங்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள cd டிரைவ்வை இன்றும் பேனாவை வைத்துதான் குத்தி திறக்கிறார்கள் மூடுகிறார்கள். அந்த அளவிற்கு தான் அரசு நிர்வாகங்கள் உள்ளன. எனவே புதிதாக கட்டடம் கட்டி பணத்தை வீணாக்குவதை விட இருப்பதை சிறப்பாக பராமரித்தாலே போதுமானது....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Teashop Bench - chennai,இந்தியா
26-மார்-201311:12:17 IST Report Abuse
Teashop Bench தோட்டா தரணி செட் போட்டா மாதிரி (தண்ணித் தொட்டி) வடிவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை இதற்க்கு பயன் படுத்தலாம். அங்கு மருத்துவமனையை செயல்படுத்துவது கடினம்.
Rate this:
2 members
1 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.