E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சஞ்சய்தத்தை விடுவிக்க கோரி ஜெயப்ரதா மகா., ஆளுநர் சந்திப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
04:37
பதிவு செய்த நாள்
மார் 26,2013 04:35

மும்பை: சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய்தத்தை விடு வி்க்க கோரி நடிகை ஜெயப்ரதா மும்பை கவர்னரை சந்தித்தார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் ‌நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதி்த்து உச்சநீ‌திமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் தற்போது அவர் ஜாமினி்ல் வெளியில் உள்ளார். தீர்ப்பு வெளிவந்தை அடுத்து அவர் மீதமுள்ள தண்டனை காலத்தை பூர்த்தி செய்வதற்காக நான்கு வாரங்களுக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பத்திரிகை கவுன்சில்தலைவரும் , முன்னாள்நீதிபதியுமான மார்கண்டே கட்சு மாநில கவர்னர் தன்னுடைய சிறப்பு அதிகாரம் மூலம் நடிகர் சஞ்‌சய்தத்தை சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என கூறினார். இ‌தனைதொடர்ந்து சஞ்சய்தத்தை விடுவிக்க கோரி எம்.பியும், நடிகையுமான ஜெயப்ரதா, மற்றும் அமர்சிங் ஆகியோர் கவர்னர் சங்கர நாராயணனை சந்தித்து பேசினர். இதே கோரிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
26-மார்-201312:42:42 IST Report Abuse
மும்பை தமிழன் அட எல்லோரும் பிறக்கும் போது நல்லவர்களாக தானே பிறந்தோம் அதனால் எல்லோரையும் விடுதலை செய்து விடுங்கள்
Rate this:
0 members
0 members
3 members
Cancel
Krishnamoorthy Caa - madruai,இந்தியா
26-மார்-201311:42:30 IST Report Abuse
Krishnamoorthy Caa அடுத்து சல்மான் கானை விடுவிக்க வேண்டும். அவர் கலைதுறைக்காக எத்தனையோ கதாநாயகிகளுடன் கட்டிபிடித்து நடனம் ஆடி, வீரவசம் பேசி மக்களை மகிழ்வித்துள்ளார். அதே போல் நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் சேவை செய்த அரசியல் தலைவர்களின் ஊழல் வழக்கை, அதே போல் காவல் துறைக்காக சேவை செய்த காவலர்களின் கற்பழிப்பு, லஞ்ச வழக்கையும், மற்றும் டெல்லி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின், வயதை கருத்தில் கொண்டும் வாழ்க்கை தள்ளுபடி தள்ளுபடி செய்யவேண்டும். அதே போல் ஒரு ஒரு கொலை செய்த, ஒரே ஒரு குண்டு வைத்த குற்றவாளி களையும் விடுவிக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
26-மார்-201311:42:21 IST Report Abuse
amukkusaamy சஞ்சய் தத்தோட துப்பாக்கியப் பத்தி நல்லா தெரிஞ்சதுனால தான் இந்தம்மா இப்படி பேசுது...
Rate this:
0 members
0 members
3 members
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
26-மார்-201311:38:05 IST Report Abuse
sitaramenv ஐயோ ஜெயபிரதா.........உனக்கு சஞ்சய் தத் என்னம்மா கொடுத்தான்...... தமிழ் நாட்டில் மற்றும் பல மாநிலங்களில் திஹார் சிறையில் எத்தனையோ குற்றவாளிகள் உள்ளனர். மொத்தமாக எல்லாருக்கும் சேர்ந்து நடிகை என்ற கவர்ச்சியை அரசாங்கத்திடம் காட்டி ஏதாவது கோரிக்கை வைத்து விடுதலை கேட்பதுதானே.........அதென்ன சினிமாக்காரன் என்றால் ஆகாசத்தில் இருந்து நேராக குதித்தவர்களா.......அவர்களும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே தோன்றி இருப்பார்கள். பாரத நாட்டுக்குடிமகனுக்கு இதை போல் இன்னும் எத்தனை தேவ வசனங்கள் கேட்டு சகித்துக்கொள்ள வேண்டுமோ............. பாரத மாதா நீ ஊமை ஆஹி விட்டாயா.......புண்ணிய ஸ்தலங்கலே புண்ணிய நதிகளே உங்களது சக்தி எல்லாம் போய் விட்டதா........
Rate this:
0 members
0 members
2 members
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
26-மார்-201311:27:04 IST Report Abuse
தமிழ் குடிமகன் அம்மணிய அப்படியே ஐ நா பக்கம் அனுப்பி வையுங்க ராஜபக்சேவை காப்பாற்றட்டும் .
Rate this:
0 members
0 members
4 members
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
26-மார்-201310:48:56 IST Report Abuse
Yoga Kannan அம்மணி நாடு தழுவிய போராட்டம் நடத்தலாமே ,,,,, இதெல்லாம் நினைக்கும் போது,,,, சமீபத்தில் தூக்குல போட்டது கூட ,,,,,,,விமர்சித்தார்களே ,,,,,, அதுகூட___________ தோனுதல்ல..... உங்களலேல்லாம் திஹார் அல்ல அந்தமான் ஜெயில்ல போடணும்,,,,,,
Rate this:
0 members
0 members
3 members
Cancel
Selva - Bangalore,இந்தியா
26-மார்-201310:46:10 IST Report Abuse
Selva வாழ்க பாரதம் நாட்டில் இருக்கும் கோடானகோடி பிரச்சினைகளுக்கெல்லாம் குரல் கொடுக்காத இந்த சினிமாக்காரி.....ஒரு கிரிமினளுக்காக கவர்னரை சந்திக்க போகிறார்...கவர்னரும் அதற்கு நேரம் ஒதுக்குகிறார்....ஒரு சாமானியன் ஒரு சிறந்த நோக்கத்திற்காக இதே கவர்னரை சந்திக்க முடியுமா? அவர் அதற்க்கு நேரம் ஒதுக்குவார? அந்த சாமானியன் கவர்னர் இருக்கும் மாளிகை பக்கம் கூட போக அனுமதிக்க மாட்டார்கள் காவலர்கள். கடவுளே இந்தியாவை காப்பாத்து...பணம் பதவி இல்லாத கோடானகோடி மக்களை காப்பாத்து.
Rate this:
0 members
0 members
4 members
Cancel
raja - nagai  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201310:37:37 IST Report Abuse
raja he is also a indian citizen.. dont use the actors power escape to prison.. he must punished...
Rate this:
0 members
0 members
1 members
Cancel
srinivasan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201309:22:24 IST Report Abuse
srinivasan ஜெயப்ரதா மேடம் என்னோட பிரிண்டு ரெண்டே ரெண்டு கொலை பண்ணிட்டு ஆயுள் கைதியா இருக்கான் கொஞ்சம் அவனுக்காகவும் கவர்னர் கிட்ட பேசி வெளிய கொண்டுவந்துடிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் ......ஏண்டி சிருக்கின்களா வீட்டுல இல்லாம இப்படி சுப்ரீம் கோர்ட் தண்டன கொடுத்த ஒருத்தனுக்கு இப்படி வெளிய கொண்டார நினைகிறிங்க. வுங்க கணுக்கு படி பார்த்தா காசு இருந்தா கெட்டவனும் நல்லவன் காசு இல்லன்னா நல்லவனும் கெட்டவன்........கொய்யால.....
Rate this:
0 members
0 members
5 members
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:26:58 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி சாத்வி ப்ரஞா மட்டும் தான் இந்த நாட்டில் தீவிரவாதியா?
Rate this:
0 members
0 members
3 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.