E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விரைவில் காங்கிரஸ் ,பா.ஜ., ‌போட்டி யாத்திரை துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
05:25
பதிவு செய்த நாள்
மார் 26,2013 05:24

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியுமான பா.ஜ.,வும் போட்டி யாத்திரையை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் சார்பி்ல் நடத்தப்படும் யாத்திரைக்கு சந்தேஷ்யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி துவங்க உள்ளது. யதாத்திரையின் போது மாநில அரசுகள் செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ள நலத்திட்டங்கள் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட உள்ளது. பா.ஜ., சார்பில் நடத்தப்படும் யாத்திரைக்கு சூரஜ்சங்கல்ப் யாத்திர‌ை என பெயரிடப்பட்டடுள்ளது. பா.ஜ.,யாத்திரையில் மாநில அரசின் ஊழல்கள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்ம‌ையை முன்னிலைப்படுத்த உள்ளது.

காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் யாத்திரைக்கு மாநில முதல்வர் அசோக்கெலாட் தலைமை வகிக்க உள்ளார். யாத்திரையில் அரசியல் விவகாங்களுக்கான பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் பிற எம்.எல்.ஏ.,க்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். யாத்திரை மூலம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் உள்ள 200 ‌தொகுதி மக்களையும் சந்திக்க உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் சந்திரபான் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் நடத்தப்படும் யாத்திரை குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கைலாஷ்நாத் பட் தெரிவித்ததாவது: ஏப்ரல் 4-ம் தேதி துவங்கும் யாத்திரைக்கு வசுந்ததரரானே தலைமை வகிக்கிறார். பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சி்ங் கொடியசைத்து யாத்திரையை துவக்கி வைக்கிறார். இரணடாவது கட்ட யாத்திரை ஏப்ரல் மாதம் 22-ம் தேதி துவங்கிறது. மாநிலம் முழுவதும் ஏழு பகுதிகளில் இருந்து துவங்கும் யாத்திரைகள் அப்பகுதியில் உள்ள பிரபலமான கோவில்களி்ல் துவங்க உள்ளதாகவும், சுமார் 13 ஆயிரத்து 500 கி.மீ தூரத்தை வலை தளங்களில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Madurai,இந்தியா
26-மார்-201316:27:08 IST Report Abuse
Krish மூன்றாவது கூட்டணி வலுவாக அமைந்தால் இவர்கள் பாடு அம்போதான்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201315:53:07 IST Report Abuse
Mustafa முடிவில் இறுதி யாத்திரை வோட்டு போட்ட மக்களுக்குத்தான்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
26-மார்-201310:08:35 IST Report Abuse
Wilsonsam Sp மோடி அவ்ர்ஹல் சென்று ஒட்டு கேட்டல் ஒருவேளை வெற்றி பெற வாய்ப்புள்ளது இல்லை என்றால் ஆளும் ஊழல் கட்சிதான் வெற்றிபெறும்
Rate this:
7 members
0 members
9 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
26-மார்-201308:54:09 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இரண்டு கட்சிக்கும் கொள்கையில் வித்தியாசம் இல்லை...கொள்ளை அடிப்பதே தலையாத கொள்கை..
Rate this:
13 members
0 members
16 members
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
26-மார்-201306:53:00 IST Report Abuse
Manidhan இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலில் ஜெயிக்க தயாராகின்றன. ஒரு வேலை ஜெயித்தாலும் அடுத்த electionக்கு தயார் ஆகின்றனர். மக்களுக்காக யாரும் தயார் படுத்தி கொள்ளவில்லை. இந்த இரண்டு கட்சி கொள்கைகளும் ஒன்று என்று அறியாமல் சிலர் காங்கிரஸ் சிலர் பிஜேபி என்று ஆதரவு தெரிவிப்பர். பாவம் அப்பாவி தொண்டர்கள். பாவம் மக்கள்.
Rate this:
6 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.