நாளை துவங்குகிறது ஹோலி கொண்டாட்டம் ரசாயன வண்ண பொடிகள் "உஷார்'| Dinamalar

தமிழ்நாடு

நாளை துவங்குகிறது ஹோலி கொண்டாட்டம் ரசாயன வண்ண பொடிகள் "உஷார்'

Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:வசந்த கால பண்டிகையான ஹோலி, நாளை முதல் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹோலியின் சிறப்பம்சமான வண்ண பொடிகளில், ரசாயன பொருட்கள் கலந்திருப்பதால், உஷாராக இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
"டோல் ஜாத்ரா'
ரங்கபஞ்சமி எனப்படும் ஹோலி பண்டிகை, வட மாநிலங்களில் வசந்த கால பண்டிகையாக கொண்டாடப்படு கிறது. வட மாநிலங்களில், ஹோலி, "டோல் ஜாத்ரா' என, அழைக்கப்படுகிறது.
சென்னையில், சவுகார்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், ஏழுகிணறு மற்றும் கொத்தவால்சாவடி உள்ளிட்ட இடங்களில், ஏராளமான வட மாநிலத்தவர் வசிக்கின்றனர்.
இந்த வாரம் முழுவதும், இந்த இடங்கள் திருவிழா கோலம் பூண்டிருக்கும். எங்கு பார்த்தாலும் வண்ண மயத்திற்கு பஞ்சம் இருக்காது.
இப்போதே சாலைகளில் வண்ண பொடிகளும், வண்ண நீரை உறிஞ்சி பிறர் மீது தெளிக்க பயன்படும் துப்பாக்கிகளும், விற்பனைக்கு குவிந்துள்ளன.
இந்த விளையாட்டு துப்பாக்கிகள்,
20 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. 20 வகையான வண்ண பொடிகள், 5 ரூபாய் முதல் பொட்டலங்களில் விற்கப்படுகின்றன.
காரீய ஆக்சைடு
முற்காலங்களில், இயற்கையான முறையில் வண்ண பொடிகள் தயாரிக்கப்பட்டதால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. தற்போதுள்ள வண்ண பொடிகளில், அதிகளவில் வேதி பொருட்கள் கலந்துள்ளன.
இவற்றால், தோல் மற்றும் கண்கள் பாதிப்புக்குள்ளாக நேரலாம். கறுப்பு வண்ண பொடிகளில், சிறுநீரகத்தை பாதிக்க கூடிய காரீய ஆக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களிலும் பல்வேறு ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.
இந்த வண்ண பொடிகளை பயன்படுத்தும்போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
வண்ண பொடி விற்பனை குறித்து,
76 ஆண்டுகளாக தங்கசாலையில் கடை வைத்துள்ள ராமச்சந்திரன் கூறியதாவது:
வண்ண பொடிகளை பயன்படுத்திய முதல் மூன்று மணி நேரத்திற்குள் குளித்துவிட்டால் பிரச்னை இல்லை. சில வண்ண பொடிகளால், சரும பிரச்னை வரலாம்.
இதற்காகவே "டர்மிஸ்' எனப்படும், வெளிர் நிறத்துடன் கூடிய வண்ண பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை, குழந்தைகளுக்காக வாங்கி செல்வர்.
இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
ரசாயனம் கலந்த வண்ண பொடிகளை பயன்படுத்துவதால், சரும பிரச்னைகளே அதிகம் ஏற்படும். சில நேரங்களில் பார்வை இழப்பும்
வரலாம். வண்ண பொடிகளை பயன்படுத்திய சில மணி நேரத்தில், குளித்து விடுவது நல்லது. இதனால் சரும பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். தற்போது மூலிகை வண்ண பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன
ராமதாஸ், இயற்கை மருத்துவர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை