"கெயில்' நிறுவனம் உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும் நெடுஞ்சாலையோரம் குழாய் பதிக்க ஜெயலலிதா வலியுறுத்தல் - Jayalalitha | Dinamalar

தமிழ்நாடு

"கெயில்' நிறுவனம் உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும் நெடுஞ்சாலையோரம் குழாய் பதிக்க ஜெ., வலியுறுத்தல்

Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை:""கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் நிலங்களில் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரம், எரிவாயு குழாய்களை பதிக்க, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெய
லலிதா வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம், நேற்று துவங்கியது.
கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், கெயில் விவகாரம் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஏழு மாவட்டங்கள் பாதிப்பு
இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் உரை:
தமிழக அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது.
கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து, பெங்களூரு வரை, தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம்,
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் கீழே, 310 கி.மீ., தூரத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு
இருபது மீட்டர் அகலத்தில், குழாயை பதிக்க, 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற, கெயில்
நிறுவனம், நடவடிக்கை எடுத்தது.
இதற்கான இழப்பீட்டுத் தொகை, நிலத்தின் சந்தை மதிப்பில், 10 சதவீதம் ஆகும். இத்திட்டம், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதனால், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம், 28ம் தேதி, அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும், நான் ஆலோசனை நடத்தினேன்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விவசாயிகளிடம்,
கருத்துகள் கேட்கப்பட்டன. தலைமைச் செயலர் நடத்திய இந்த கூட்டங்களில், 134 கிராமங் களில் இருந்து, 2,428 விவ
சாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
"எரிவாயு குழாய் அமைப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்பாட்டு உரிமையை, கெயில் பெறுவதால், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல், நிலத்தின் பெரும்
பகுதியை இழக்க நேரிடும்' என்பது உள்ளிட்ட,
10 கருத்துகளை வலியுறுத்தி
உள்ளனர்.
கெயிலுக்கு என்ன பிரச்னை...
கடந்த 8ம் தேதி, கெயில் நிறுவனம், தமிழக அரசு தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை
வழியாக, குழாய் பதிக்கும்
திட்டத்தை மேற்கொண்டால், என்னென்ன பிரச்னைகள்
ஏற்படும் என்பதை, விளக்கமாக கூறி உள்ளது.
நிறுவனத்தின் கருத்துகள்
மற்றும் விவசாயிகளின் ஆட்சேபனைகள் ஆகியவற்றை, தமிழக அரசு, கவனமாக பரிசீலித்தது.
தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு, வலுவான தொழில்
நுட்ப காரணங்கள் எதையும், கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம், எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, தெள்ளத் தெளிவாக கூறி
உள்ளனர்.
விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சி ஏற்படுவதை, நியாய உணர்வு கொண்ட யாரும், ஏற்க மாட்டார்கள்.
ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனில், அதனால், யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்க வேண்டும்.
அந்த அடிப்
படையில், ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவை எடுத்து உள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால், திரவ எரிவாயு, தொழிற்சாலை
களுக்கும், மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
வாழ்வாதாரம் பாதிக்கும்
எனவே, கெயில் நிறுவனம், விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்.
குழாய்களை, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு, கெயில் நிறு
வனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கெயில் நிறுவனம், ஏற்
கனவே குழாய்களை பதிக்க, நிலங்களில் தோண்டியுள்ள குழிகளை, உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை, அதன் முந்தைய நிலையில், விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.
விவசாயிகள், விவசாயப் பணிகளை தொடரும் வகையில், ஏற்கனவே பதித்த குழாய்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தால், பழ வகை மரங்களையும், பிற கட்டு
மானங்களையும் இழந்து
வாடும் விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டை,
கெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் முடிவுகள், ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிப்பு நட
வடிக்கைகளை, கெயில்
நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு, திரவு எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், கெயில் நிறுவனம் எடுக்க வேண்டும்.
திட்டம் தொடர்பாக,
விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்கு
களையும், திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
திட்டத்திற்காக, மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு
உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தமிழக அரசு, உடந்தையாக இருக்காது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை