"ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மிக விரைவில் துவக்கி வைக்கப்படும்'| Dinamalar

தமிழ்நாடு

"ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மிக விரைவில் துவக்கி வைக்கப்படும்'

Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:""ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போதே, துவக்கி வைக்கப்படும்,'' என, அமைச்சர் முனுசாமி அறிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணன் பேசும்போது நடந்த விவாதம்:
ராமகிருஷ்ணன்: இந்தியாவில், கருணாநிதிக்கு நிகரான தலைவர், வேறு யாருமே கிடையாது.
முனுசாமி - உள்ளாட்சித் துறை அமைச்சர்: சபைக்கு, தவறான தகவலை தரக்கூடாது. எம்.ஜி.ஆர்., மறைந்து, 25 ஆண்டுகள் ஆகியும், இன்னும், மக்கள் மத்தியில் போற்றக் கூடிய தலைவராக இருக்கிறார்.
அவர் வழிவந்த முதல்வர், ஏழு கோடி மக்களின் தலைவராக இருப்பதுடன், இந்தியாவிற்கு தலைமை ஏற்க அழைப்பு விடுக்கப்படும் தலைவராகவும் இருக்கிறார்.
ராமகிருஷ்ணன்:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை, தி.மு.க., அரசு கொண்டு வந்தது. தொடர்ந்து, நாங்கள்
ஆட்சிக்கு வந்திருந்தால்,
அத்திட்டம், எப் போதோ பயன்பாட்டுக்கு
வந்திருக்கும்.
முனுசாமி-அமைச்சர்: உங்கள் ஆட்சி காலத்தில், 55 சதவீத பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 18 சதவீதம் அளவிற்கே, பணிகள் நடந்தன.
மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், எம்.ஜி.ஆர்., ஆட்சி
காலத்தில் அறிவிக்கப்பட்டது.
அத்திட்டத்தை வடிவமைத்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 22 மாதங்களில், பணிகள் வேகமாக முடிக்கப்பட்டன.
மிக விரைவில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடி
வதற்குள், அத்திட்டம் துவக்கி வைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை