E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அணுசக்தி வளாகம் அருகே மீனவர்கள் மறியல் உள்ளே நுழைய முயன்றதால்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
06:24
பதிவு செய்த நாள்
மார் 26,2013 06:23

கல்பாக்கம்:சதுரங்கப்பட்டினம் பகுதிக்கு, கல்பாக்கத்தில் இருந்து மின்சாரம் வழங்க கோரி, அணுசக்தி வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டு, மீனவர்கள், சாலை மறியல் செய்தனர். ஒரு கட்டத்தில், அணுசக்தி வளாகத்திற்குள் அவர்கள் புக முயன்றதால்,
பதற்றம் ஏற்பட்டது.
கல்பாக்கம் அணுசக்தி வளாகம் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி உள்ளது. இங்கு மீனவர்கள் உட்பட, பல்வேறு தரப்பினர் வசிக்கின்றனர்.
சதுரங்கப்பட்டினத்திற்கு, கல்பாக்கம் அணுசக்தி மின்சாரம் வழங்க வேண்டும்; கல்பாக்கம் பள்ளிகளில், சுற்றுப்புற கிராம குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடும் செய்ய வேண்டும்.
அணுசக்தி வேலைவாய்ப்பில், சுற்றுப்புற மக்களுக்கு இட ஒதுக்கீடு, பொதுமக்களுக்காக உயர்தர மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும்; புதிதாக அணு உலைகள் அமைக்ககூடாது என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திடீர் மறியல்
கடந்த சில மாதங்
களுக்கு முன், நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன், கல்பாக்கம் நிர்வாகத்திடம் ஆலோசித்து, மின்சாரம் வழங்குவது மற்றும் பிற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவது குறித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், உறுதிஅளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, சதுரங்கப்
பட்டினம் வடக்கு, தெற்கு, மெய்யூர் பகுதி மீனவர்கள், மீன்பிடித் தொழிலை புறக்கணித்து, காலை, 7:00 மணிக்கு, நுழைவாயில் அருகில் முற்றுகையிட்டு, மறியல் செய்தனர்.
கோரிக்கைகளை வலி
யுறுத்தி முழங்கினர்.
இதனால், அணுமின் நிலைய ஊழியர்கள்
செல்லும் பேருந்துகள், கொக்கிலமேடு நுழைவாயில் வழியாக, வளாகத்திற்கு சென்றன. கடைகளும் அடைக்கப்பட்டன.
தகவலறிந்து அங்கு சென்ற, செங்கல்பட்டு கோட்டாட்சியர் எட்டியப்பன் (பொறுப்பு), காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர்,
கல்பாக்கம் நிர்வாகத்
திடம் பேச்சுவார்த்தை நடத்த, ஒரு சில நபர்
களை மட்டும் உள்ளே அழைத்தனர்.
அதற்கு எதிர்ப்பு
தெரிவித்த போராட்டக்காரர்கள், வளாகத்திற்குள் செல்ல மறுத்ததுடன், கல்பாக்கம் நிர்வாகிகளை, வெளியே வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறினர்.
பதற்றம்
இதைத் தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு, நுழைவாயிலை நோக்கி, போராட்டக்காரர்கள் செல்ல முயற்சித்தனர்.
அப்போது, கல்பாக்கம் நிர்வாகிகளிடம் ஆலோசித்த கோட்டாட்சியர், பள்ளி அனுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கவும், மருத்துவமனை கட்டடம் அமைக்கவும், நிர்வாகம் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்று கொள்ளாத போராட்டக்காரர்கள், உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக, கல்பாக்கம் நிர்வாகிகள்,
நேரடியாக வந்து, எழுத்து மூலம் உறுதியளித்தால் மட்டுமே, கலைந்து
செல்வோம் என கூறி, தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.