டர்பன் : பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு இன்றும், நாளையும் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 5 நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் டர்பன் நகரில் கூடி உள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் டர்பனுக்கு நேற்று மாலை சென்றடைந்தனர். இந்த மாநாட்டில் உலக வங்கி கடன் குறித்த நிதியமைச்சர்கள் சந்திப்பு நிகழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.