E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கட்சி நிதி குறித்த முழு விபரம்: தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
10:01
பதிவு செய்த நாள்
மார் 26,2013 08:38

புதுடில்லி : அரசியல் கட்சிகள் பெறும் கட்சி நிதி குறித்த முழு விபரங்களையும் வெளிப்படையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை முடக்கும் வண்ணம் மத்திய அரசு மேற்கொள்ளும் செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மறைக்கப்படும் கட்சி நிதிகள் :



2004 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் கட்சி நிதியாக காங்கிரஸ் கட்சி ரூ.2004 கோடியையும், பா.ஜ., ரூ.994 கோடியையும் பெற்றுள்ளன. இந்த தொகை பிராந்திய கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டதாகும். இருப்பினும் கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த தொகை மிகவும் குறைவும் எனவும், மொத்த நிதியில் 85 சதவீதம் நிதி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவாக பெறப்பட்டும் தொகை குறித்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என கட்சிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் கட்சிகள் தங்களின் அனைத்து நிதிகளையும் வெளிப்படையாக ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சட்ட அமைச்சகம் கடிதம் :



அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள உத்தரவு குறித்து சமீபத்தில் சட்ட அமைச்சகம் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 29 சி பிரிவின் படி அரசியல் கட்சிகள் ரூ.20,000 க்கு மேற்பட்ட நிதி குறித்த விபரங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகள் குறித்த விபரங்களையும் அதற்கான ரசீதுகளையும் முறையாக ஒப்படைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை என தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் அரசு துறை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவு :



நன்கொடையாளர்கள் அனைவரின் விபரமும் சமர்ப்பிக்க வேண்டும்; ரூ.20,000 க்கும் கீழ் நன்கொடை அளித்தவர்களின் பான் நம்பர்கள் குறித்த விபரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இந்த உத்தரவுகள் குறித்த சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சிகள் தங்களின் நன்கொடைகளை காசோலை அல்லது ரொக்கமாக மட்டுமே பெற வேண்டும் எனவும், கட்சிகள் சமர்ப்பிக்கும் நன்கொடையாளர் விபரங்களும் நன்கொடை தொகைகளும் தணிக்கை செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கட்சிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை சிறு சிறு தொகையாக பெயர் விபரம் இல்லாத நன்கொடையாளர்களிடம் இருந்து பெறுவதாகவும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. 2009-2011ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.172.67 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், ஆனால் ஒரு நன்கொடையாளர் கூட ரூ.20,000 க்கு மேல் நன்கொடை அளிக்கவில்லை எனவும், அதனால் நன்கொடை விபரம் சமர்ப்பிக்க தேவையில்லை என கூறியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
27-மார்-201306:50:09 IST Report Abuse
ஆரூர் ரங பாவம் அரசியல் கட்சி நடத்துபவர்கள் பணம் செலவு பண்ணாட்டி ஜெயிக்கமுடியாது .பணம் வசூலித்தால் அதற்க்குக் கைமாறு எதிர்ப்பார்ப்பர் .கொள்ளைக்கார முதலாளிகளை எதிர்த்தாலோ எதிர் பார்ட்டிக்கு பணம் கொடுத்து நமக்கு வேட்டு வைப்பார் அல்லது நமது கட்சி எம்பி MLAகளுக்கு விலை பேசுவர் அவர்கள் கொடுக்கும் லஞ்சப் பணத்தை நாம் வாங்க மறுத்தால்,காட்டிக்கொடுத்து மாட்டிவிடுவோம் என சந்தேகப்படுவர் போனால் போகிறது கொடுப்பதை வாங்கிக்கொள்வோம் என நினைத்தாலோ அதனை வைத்து பிளாக் மெயில் செய்வர் .இதற்கெல்லாம் காரணம் 60களிலேயே ஊழலுக்கு அச்சாரம் போட்ட காங்கிரஸ்தான்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
sampath - Mississauga,கனடா
26-மார்-201316:00:53 IST Report Abuse
sampath திருடர்களுக்கு தேள் கொட்டிஉள்ளது ......… வைத்தியமா வைரகியமா பார்க்கலாம்?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201316:00:46 IST Report Abuse
Mustafa செய்யும் தொழிலே தெய்வம், யாராவது தெய்வத்தை காட்டிக்கொடுப்பார்களா?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Natarajan. M - Thiruvannamalai,இந்தியா
26-மார்-201315:23:49 IST Report Abuse
Natarajan. M சுவிஸ் வங்கியில் இருக்கின்ற கருப்பு பணத்தை மறைக்க தெரிஞ்ச இவங்களுக்கு, இதையும் மறைக்க தெரியும், அறிக்கை கேட்ட தேர்தல் ஆணையத்தை முடக்கவும் தெரியும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
26-மார்-201314:32:18 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் திரு.மு.க.வின் வழியை பின்பற்றி காங்கிரஸ் அரசும் தேர்தல் ஆணையத்தை செயலிழக்க செய்யுமா?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
26-மார்-201314:27:30 IST Report Abuse
A.S.VENKATESAN நாட்டின் மொத்த நிதியும் இருக்கும் இடத்தை யார் தான் சொல்வர். ஆணையத்திற்கு அனுபவம் இல்லையோ. சர்வர்திகர்ரி யாரும் வந்து இப்போது இருக்கும் கரன்சி செல்லாது , புது கரன்சியை கணக்கு கொடுத்து வந்கிக்கவும் என ஆணை இட்டால் தான் நாடு சுத்தமாகும்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Vinod K - London, UK  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201313:37:10 IST Report Abuse
Vinod K நல்லது இதனுடன் உச்ச நீதி்மன்றமும் சேர்ந்து அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு அடிக்க வேண்டும் அப்போது தான் ஆட்டைய போடும் அரசியல் கட்சிகள் அடங்கும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-மார்-201313:27:59 IST Report Abuse
g.s,rajan மக்களாட்சி என்ற பெயரில் மன்னராட்சி ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
26-மார்-201313:18:53 IST Report Abuse
rajan நாட்டின் இறையாண்மை பார்லிமென்ட் என முழங்கும் அரசியல்வாதிகள் ஏன் கட்சி கணக்கை தணிக்கை செய்ய மறுக்கிறது. அங்கே தேர்தலுக்கு முன்னமே ஊழல் துவங்குகிறது. காங்கிரசுக்கு மக்கள் ஒய்வு கொடுத்தே ஆக வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
26-மார்-201311:20:51 IST Report Abuse
Raj தேர்தல் ஆணையம் கூடிய சீக்கிரம் கலைக்கப்படலாம்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.