வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார் | ஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார்

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு : வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் தமது கட்சிக்கே கிடைக்க வேண்டும் என வேண்டி மாநில வருவாய் துறை அமைச்சர் புகழ்பெற்ற ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் அக்னி குண்ட திருவிழாவில் ( தீ மிதி ) பங்கேற்றார்.

ஈரோடு சத்திய மங்கலத்தில் இருந்து 14 கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் குண்டத்திருவிழாவில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பது வழக்கம். மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் இந்த கோயிலில் ரகசியமாக வந்து பிரார்த்தனை செய்து வந்தார். இவரால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் இங்கு வந்து மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் குண்ட திருவிழாவில் ஆந்திரா, கேரளா, கர்நாடக, பகுதியில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர்.


இந்நிலையில் இன்று நடந்த விழாவில் மாநில வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இன்று குண்டம் இறங்கினார். இவர் இறங்கும் போது அருகில் இருந்த அ.தி.மு.க., தொண்டர்கள் 40 ம் நமதே என்று கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-201316:35:08 IST Report Abuse
 Palanivel Naattaar மற்ற விஷயங்கள் போல கூட்டத்தில் கோவிந்தா போடமுடியாமல் தனியாக விட்டுடாங்களே
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201316:08:46 IST Report Abuse
Mustafa இன்று நடந்த விழாவில் மாநில வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் குண்டம் இறங்கினார். இவர் இறங்கும் போது அருகில் இருந்த அ.தி.மு.க., தொண்டர்கள் 40 ம் நமதே என்று கோஷங்கள் எழுப்பினர். கோஷம் கடவுளுக்கு கேட்குதோ இல்லையோ அம்மாவுக்கு கேட்டால் போதும் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மார்-201314:35:38 IST Report Abuse
தமிழ்வேல் அவருக்கு என்ன கஷ்டமோ ..........
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
26-மார்-201312:20:15 IST Report Abuse
Sham அருமை... திரு. பன்னீர்செல்வம் உஷாராக இருக்கவும்... போட்டிக்கு ஆள்வந்துவிட்டது... அடுத்து இன்னொரு பொம்மை முதல்வர் தயார்...
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201311:12:55 IST Report Abuse
Mustafa வாழ்க பகுத்தறிவு பாசறை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை