BSP leader Deepak Bharadwaj shot dead | டில்லியில் ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு ; 2 பேர் பலி| Dinamalar

டில்லியில் ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு ; 2 பேர் பலி

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
BSP leader Deepak Bharadwaj shot dead. பண்ணை முதலாளி சுட்டுக்கொலை

புதுடில்லி: டில்லியில் இன்று ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. காலையில் ரஜோக்ரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரத்தில் கர்கார் துமா என்ற மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் கணவன் ஈடுபட்டதாக தெரிகிறது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ணை முதலாளி சுட்டுக்கொலை : தெற்கு டில்லி பகுதியில் பல நூறு கோடி மதிப்பு கொண்டுள்ளவரும் பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்தவருமான பிரபல பண்ணை முதலாளி ஒருவர் இன்று சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் டில்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி, தெற்கு பகுதியில் பல ஏக்கரில் உள்ளது ஒரு பண்ணை வீடு இங்கு குடியிருந்து வருபவர் தீபக் பரத்வாஜ். இவர் வீட்டில் இருக்கும் போது ஒரு கருப்பு நிற காரில் வந்த 2 பேர் தீபக்குடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து இருவரும் கையில் இருந்த துப்பாக்கியால் தீபக்கை சுட்டனர். இதில் அருகில் இருந்த உறவினர் ஒருவரும் , தீபக்கும் படுகாயமுற்றனர் . இதனையடுத்து போலீஸ் வருவதற்குள் 2 பேரும் வந்த காரில் விரைந்து சென்று தலைமறைவாயினர். இந்த சம்பவம் அடுத்து இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபக் ரியல் எஸ்டேட், விடுதிகள், ஓட்டல்கள் , பள்ளிகள் என பல நிறுவனங்கள் நடத்தி வருபவர். இவர் கடந்த 2009 ம் ஆண்டில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். இந்நேரத்தில் மிகபெரிய பணக்கார வேட்பாளர் என்று பெயரை தட்டி சென்றவ்ர். இவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கர்கார் துமா என்ற மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். இது கணவன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prithvi - Chennai,இந்தியா
27-மார்-201300:27:42 IST Report Abuse
prithvi காங்கிரஸ் ஆளும் நம் நாட்டின் தலைநகரத்துக்கு அவர்களால் செய்ய முடிந்த மரியாதை. நாட்டின் தலைநகரமே இந்த லட்சணம்னா இவர்கள் எப்படி சாதாரண மக்களையும் நம் நாட்டையும் பாதுகாப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arichandran - Thanjavur  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201313:13:48 IST Report Abuse
Arichandran When there is a problem you go to law, by law nothing will happen. only money can speak. Finally people find your own to take revenge. Who's mistake govt administration and the law implementor Corruption and sleeping courts is the root cause for everything
Rate this:
Share this comment
Cancel
tamilnambi - new delhi,இந்தியா
26-மார்-201313:04:08 IST Report Abuse
tamilnambi பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்துவிட்டால் முழு பாதுகாப்பு இருக்குமோ. அப்போது இப்படி ஏதாவது நடந்தால் உடன் தார்மீக பொறுப்பு ஏற்று உடன் மத்தியில் ஆட்சியை கலைத்து விடுவார்களா அல்லது யார் பிரதமரோ அவர் ராஜினாமா செய்து விடுவாரா - இந்தியாவில் தற்ப்போது ராணுவ ஆட்சி தேவை
Rate this:
Share this comment
Rajakumar - johannesburg,தென் ஆப்ரிக்கா
26-மார்-201316:17:51 IST Report Abuse
Rajakumarஇந்தியாவில் தற்ப்போது ராணுவ ஆட்சி தேவை - வழிமொழிகிறேன்...
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
26-மார்-201316:30:27 IST Report Abuse
KrishMr tamilnambi , you are correct ....
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-மார்-201312:17:09 IST Report Abuse
g.s,rajan Zero safety in Delhi that too in the capital of India is a shame.
Rate this:
Share this comment
tamilnambi - new delhi,இந்தியா
26-மார்-201315:03:34 IST Report Abuse
tamilnambiIF THE PARATHIYA JANATHA GOVERMENT WILL COME IN FUTURE DELHI IS SAFETY PLACE - THAN NOMORE INCIDENT LIKE THIS HAPP WHO CAN GIVE ASSURANCE...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை